>

Archives

பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் !!!

>> Friday, June 26, 2009

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன.

அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன.

கருத்து எந்தவித அரசியல் சார்புமற்ற ஓர் அமைப்பு. கருத்து என்கிற ஒரு அமைப்புக்கு ப்ரத்யேகமாக எந்த கருத்தும் கிடையாது. இது எல்லாவித கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான களம் மட்டுமே. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளை இந்த அமைப்பு வரவேற்கிறது. கருத்தை பொறுத்தவரை மீள்பார்வைக்கும் புதிய மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் என்று எதுவுமில்லை. தீண்டக்கூடாத, தீண்ட முடியாத திருவுருக்கள் என்று எதுவும் கிடையாது. மதம், நம்பிக்கை, பாரம்பரியம், அரசியல், தத்துவம், நாம் நம்பும் சரித்திரம், சமூக அமைப்பு என்று எதை பற்றிய விவாதங்களுக்கும் இங்கு இடமுன்டு. கருத்து அமைப்பில் தலைவர்கள் கிடையாது. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இதன் உறுப்பினர்கள். எதிர்வினைகள், விமர்சனங்கள் ஆகியவை

சொல்லப்படும் கருத்துகளைப் பற்றியவையாக மட்டுமே இருக்க வேன்டும். சொல்பவரைப் பற்றிய விமர்சனங்களாக மாறக் கூடாது.

சமீபகாலங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை கலைகள், படைப்பிலக்கியம், சமூக கருத்துக்கள் ஆகியவற்றின் மீது சிலர் செலுத்த முயலும் ஆதிக்கம் கவலையையும் மிரட்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

முதலில் படைப்பாளிகள் எதை எழுத வேன்டும், எப்படி அதை கையாள வேன்டும் என்பதைப் பற்றிய தடைகள் தலைதூக்கின. பிறகு மொழி, பண்பாடு, இனம், என்ற அரண்களை உருவாக்கி அதனுள் கலைஞர்களை முடக்கி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகள் இப்போது சமூகத்தின் அத்தனை கூறுகளையும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. சொல்லப்படும் ஒரு கருத்திற்கு எதிர்வினையைக் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் நாகரிகத்தையும் பல நேரங்களில் நாம் தொலைத்து விடுகிறோம்.

நமது பண்பாடு, சமூக ஒழுக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொதுமைப்படுத்தும் முயற்சியில் அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவை முனைந்து ஈடுபட்டுள்ளன. இந்தப் பொதுமைப்படுத்தலையே பெரும்பான்மை கருத்தாக மாற்றும் அபாயம் அதிகரித்து வருகிறது. பெரும்பான்மை சிறுபான்மையின் உரிமையை நசுக்கும், பாசிசவாதத்தின் வாயிலுக்குள் நுழையத் தொடங்கியிருக்கிறோம். பெரும்பான்மை மதிப்பீடுகளுக்கு மாறுபட்டு ஒலிக்கும் குரல்கள் குரூரமாய் நெரிக்கபடுகின்றன.

வழமையான பார்வைகளுக்கு மருந்தாய் வைக்கப்படும் புதிய கருத்துகளும், படைப்புகளும், தங்களை இந்தச் சமூகத்தின் ஒழுக்க காவலர்களாய் சுயமாக விரித்துக் கொண்ட சிலரால் வன்முறை தோய்ந்த வக்கிரத்தோடு எதிர்க்கபடுகின்றன. இந்த வன்முறையாளர்களின் பிடியில் அதிகமாகச் சிக்கிச் சிதைவது, இளைய தலைமுறையினர், பெண்கள், மற்றும் படைப்பாளிகள். இவை மூன்றும் ஒடுக்கப்படும் எந்த ஒரு சமூகமும் ஆரோக்கியமாகச் செயல்படுவது என்பது இயலாதது. இதை எதிர்த்து 'கருத்து' என்கிற இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து மற்றும் கருத்துச் சுந்திரத்தைப் பாதுகாப்பதும் அதன் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் தான் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

கருத்துக்கள், அவை அடிப்படைவாதமாக இருக்கலாம், பழமைவாதமாக இருக்கலாம், அல்லது புதுமை நோக்கிய குரலாக இருக்கலாம். இவை எல்லாவற்றிற்க்கும் சமூகத்தில் இடம் உண்டு என்பதுதான் இவ்வமைப்பின் அடிப்படை. இதை நோக்கிய ஒரு விழிப்புணர்வுக் குரலாக, இயக்கமாக 'கருத்து' செயல்படும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டிராத எல்லாக் கருத்துக்களுக்கும் இதில் இடம் உண்டு.

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP