>

Archives

சில சுவையான உண்மை நிகழ்வுகள் !!!

>> Saturday, June 13, 2009

  • இந்திராவின் ஆட்சிக்காலம் அது.!!!

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.

கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது

'' என்றார்.அதற்கு தவான், ""உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்'' என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

***************************** *******************************************

மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பேச்சில் நகைச்சுவை பொங்கும். ஒருமுறை கச்சேரி ஒன்றில் தமது பாட்டுக்குப் பொருந்தாமல் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த வித்வானைப் பார்த்துச் சொன்னார்: ""என் பாட்டுக்கு வாசிப்பா. நீ "உன்பாட்டுக்கு' வாசிச்சுக்கிட்டே போறியே.''

********************************** ****************************************

ஒரு முறை திருச்சிக்கு வந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் காமராஜர். அவரை வரவேற்கக் கையில் மாலையுடன் காத்திருந்தார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர். அவரைக் கண்ட காமராஜர், ""படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னா படிக்காதவனுக்கு மாலை போட்றதுக்கு க்யூல நிககி்றீங்களே'' என்றார்.

********************************** ************************************

""சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்''- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.

********************************* ******************************************

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP