>

Archives

உலகப் பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை தோண்டி எடுக்கப்படுகிறது !!!

>> Thursday, August 20, 2009

உலக சரித்திரத்தில் இடம் பிடித்த ரோம பேரரசர் ஜூலியஸ் சீசர். இவரின் படைத்தளபதி மார்க் அந்தோணி. அவனது இதயத்தில் இடம் பிடித்தவர் எதிப்து நாட்டு பேரழகி கிளியோபாட்ரா. இவர்கள் இறந்த பிறகு அவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டது. அவர்களின் கல்லறை வடக்கு எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அலெக்சாண்ட்ரியா எனப்படும் துறைமுக நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள டபுசிரிஸ் மக்னா என்ற இடத்தில் உள்ளது. அங்கு உள்ள ஒரு கோவிலில் அவர்கள் கல்லறை உள்ளது.

சமீபகாலம் வரை இந்த கல்லறையை யார் வேண்டுமானாலும் போய்ப்பார்க்க முடியும் என்பது மாதிரியான சூழ்நிலை இருந்தது. இப்போது அந்த இடம் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 2000 ஆண்டு பழைமையான அந்த கல்லறையை தோண்டி பார்க்க எகிப்து நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

காதலர்கள் இருவரும் ஒன்றாக அடக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த கல்லறையை தோண்டி பார்க்க அவர்கள் திட்டமிட்டு உள்ளனர். கல்லறையை மூழ்கடித்து இருக்கும் தண்ணீரை வடியச்செய்து விட்டு வருகிற நவம்பர் மாதம் தோண்டி எடுக்க இருக்கிறார்கள்.

கல்லறைக்குள் ஏராளமான தங்கக்காசுக்ள கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கல்லறைக்குள் 120 மீட்டர் நீளத்துக்கு ஒரு சுரங்கப்பாதை உள்ளது. அதில் பல அறைகள் உள்ளன. அவற்றில் கிளியோபாட்ரா பற்றிய பல ரகசியங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP