>

Archives

மரங்களைக் காப்பாற்ற கடவுளால் முடியவில்லை !!!

>> Wednesday, September 16, 2009

எலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு புகையால் க்ளோபல் வார்மிங் என்று பூமியே அநியாயத்துக்குச் சூடாகிக் கொண்டிருக்கிறது.

வட துருவத்தின் மூவாயிரம் வருடம் பழைமையான ஐஸ் மலையெல்லாம் இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் மெல்ல "க்ராக்" விட ஆரம்பித்து எட்டே வருடத்தில் துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது. எங்கோ இமய மலைக்கு வடக்கே நடப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாள் கடல் உள்ளே புகுந்து மயிலாப்பூர் போய்விடும். மாலத்தீவு முழுகிவிடும். மழை பொய்க்கும். பயிர் அழியும். இன்னும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் அத்தனை உற்பாதங்களும் நேரும்.

இந்த அழிவிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டே வழிதான் இருக்கிறது.

1. சைக்கிளில் போகலாம்.

2. மரம் வளர்க்கலாம்.

மரங்கள் ஏராளமான கார்பனை உறிஞ்சிக் கொண்டு காற்றைச் சுத்தப்படுத்த வல்லவை.இதற்காக பெங்களூருவில் பத்து லட்சம் விதைப் பந்துகள்' (www.millionseedballs.org) என்று ஓர் இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பானிய இயற்கை விவசாய குருவான ஃபுகுவோகா கண்டுபிடித்த ஐடியா இது. சின்னக் களிமண் உருண்டைகளுக்குள் ஒரு மரத்தின் விதை, கொஞ்சம் இயற்கை உரம் இவற்றை வைத்து மூடி எங்காவது திறந்த வெளியில் கொண்டு போய் இறைத்து விடுவார்கள்.மழைக்காலம் வரும்வரை குருவி, எறும்பு முதயவற்றிடமிருந்து தப்பி மண் உருண்டைக்குள் பாதுகாப்பாக உறங்கும் விதை, மழையில் களிமண் கரைந்ததும் இயற்கையாக முளைக்க ஆரம்பிக்கும். இறைத்தவற்றில் முக்கால்வாசி வீணாகிவிட்டால் கூட பூமிக்கு இரண்டரை லட்சம் புதிய மரங்கள் கிடைக்குமே.

செலவே இல்லாத சுலப முறை. கர்நாடகத்தின் என்ன என்னவோ ஹள்ளிகளில் எல்லாம் ஆயிரக் கணக்கில் இவர்கள் இட்ட வேம்பும் வாகையும் நெல்லும் பூவரசும் அடுத்த மழைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன. ஆனல் இதில் முக்கியமான பிரச்னை, பத்து லட்சம் உருண்டைகள் பிடிக்கப் பல ஆயிரம் கைகள் தேவைப்படும். இதற்காக பள்ளிப் பிள்ளைகள், போலீஸ்காரர்கள், சாப்ட்வேர் இளைஞர்கள் என்று பல தரப்பினரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஷாமியானா போட்டு கல்யாணப் பந்தி மாதிரி கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மண் லட்டு செய்கிறார்கள். ஒரே அரட்டை, பாட்டு, கும்மாளம்! ஐம்பது நூறு பேரைக் கூட்டி வைத்து மண் உருண்டை பிசைவதை ஒரு தமாஷான பொழுது போக்காக மாற்றிய மார்க்கெட்டிங் மூளைக்கு சலாம் போட வேண்டும்.

சின்ன வயசிலேயே எல்லோருக்கும் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆசை இருந்தாலும் நம் தாய்மார்கள் குறுக்கிட்டு முதுகில் இரண்டு சாத்து சாத்தி இழுத்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டார்கள். அன்றைய ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இந்த இயக்கம்.சாமானிய மனிதர்கள் ஒன்று கூடி முனைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாடு நல்ல உதாரணம். நாட்டில் பாதி சஹாரா பாலைவனம். தொண்ணூறு லட்சம் சதுர கிலோ மீட்டர் ராட்சசன். அக்கம்பக்கத்து விளை நிலங்களையெல்லாம் விழுங்கி கான்சர் மாதிரி வளர்ந்து கொண்டிருந்த பாலை வனம். தங்கள் கண் முன்னே வயல்களெல்லாம் மணல் குன்றுகளாக மாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஏழை விவசாயிகள் மனம் உடைந்தார்கள்.

ஒரு தலை முறையே தங்கள் கிராமங்களைக் காலி செய்துகொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் கடைசி முயற்சியாக அவர்கள் ஒன்று கூடிப் பேசினர்கள். டெலிபோன், இண்டர்நெட் எதுவுமில்லாத அந்த எளிய மக்கள், வாய்மொழியாகவே தங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்."உங்கள் வயல்களில் தற்செயலாக முளைத்திருக்கும் மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிய வேண்டாம். வளர விடுங்கள்'' என்பதுதான் அவர்கள் பறிமாறிக் கொண்ட செய்தி. காலம் காலமாக நடவு சீசனுக்கு முன்பு களை என்று பிடுங்கிப் போட்டு வந்த செடிகளையெல்லாம் பாத்தி கட்டிப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள்.

ஜாக்கிரதையாக அவற்றைச் சுற்றி உழவு செய்து கடலையும் சோளமும் பயிரிட்டார்கள். காலப் போக்கில் மரங்கள் கம்பீரமாக வளர்ந்தன. சஹாராவின் சுடு மணல் காற்றை சுவர் மாதிரி நின்று தடுத்தன. அவற்றின் வேர்கள் மண்ணின் வளத்தைத் திருடு போகாமல் பாதுகாத்தன. காற்றின் வெக்கை தணிந்து, மழைப் பொழிவு அதிகரித்தது. இருபதே வருடத்தில் அங்கே புரட்சிகரமான மாறுதல்! திரும்பின பக்கமெல்லாம் பச்சை, பசுமை. இன்றைக்கு நைஜர் நாட்டின் தெற்குப் பகுதிகளை சாட்டிலைட் படத்தில் பார்த்தாலே குளுகுளுவென்று இருக்கிறது.1980 வாக்கில் இந்தியாவிலும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் என்றால் வறட்சிக்கு மறு பெயர்.

இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவினர் இந்தத் தரிசு நிலத்தில் லட்சக் கணக்கில் மரங்களை நட்டு அழகான காடு ஒன்றை உருவாக்கினர்கள். இதற்கு மழை நீர் சேமிப்பு உத்திகள் அத்தனையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. செயற்கை ஏரிகள் உருவாக்கிக் கால்வாய் இழுத்தார்கள். முதல் வறட்சியைத் தாங்கும் மர வகைகளில் ஆரம்பித்தார்கள். பிறகு பழ மரங்களை நட்டபோது பறவைகள் வந்தன.மரங்கள் சற்று அடர்த்தி அதிகரித்தவுடன் பூச்சிகள், அவற்றைத் தின்னும் சிறு பிராணிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. சீக்கிரமே நரிகள், முயல்கள் என்று சேர்ந்து போய், உயிரோட்டமுள்ள காடு கிளி கொஞ்ச ஆரம்பித்தது! அங்கே கொண்டு விடப்பட்ட மான்கள் அமைதியான சூழ் நிலையில் வேகமாகப் பெருகின. சுற்றுப்பட்ட எத்தனையோ கிராமத்து மக்களுக்கு வாழ்வளிக்க அங்கே வன தேவதை வந்து வசிக்க ஆரம்பித்தாள்.

தலைக்கு மேல் ஆபத்து காத்திருந்தாலும் நம்மால் இதைச் சமாளித்து விடமுடியும் என்று நம்பிக்கையூட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்: விழுப்புரத்தில் பஸ் டிரைவர் கருணாநிதி, பேருந்து செல்லும் சாலை ஓரமெல்லாம் அசோக மன்னர் மாதிரி மரம் நடுகிறார். சைக்கிளில் இரண்டு குடத்தைக் கட்டிக் கொண்டு போய் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு வார்க்கும் தலைமலை, மற்றும் பசுமை நாகராஜன், மரம் தங்கசாமி போன்ற எவ்வளவோ நல்லிதயங்கள் அங்கங்கே தங்களது சின்ன உலகத்தைப் பச்சையாக்கி ஆரவாரமில்லாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் சீடர்கள் ஒரே நாளில் எட்டரை லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தார்கள். கீன்யா நாட்டின் நோபல் பரிசுப் பெண்மணி வங்காரி மாதாய், படிக்காத பட்டிக்காட்டுப் பெண்களைத் திரட்டியே நாலு கோடி மரங்களை நட்டிருக்கிறார்.மரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் எல்லோராலும் சிறு சிறு வழிகளில் உதவ முடியும். உதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பழைய பேப்பர் குப்பையில் போடும் முன், அதன் இரண்டு பக்கமும் எழுதியாகிவிட்டதா என்று பார்க்கலாம். இதனால் உலகத்தில் எங்கோ ஒரு மூங்கில் மரத்தின் வாழ்நாள் சில நிமிடங்கள் அதிகரிக்கும்.

சி.து.பெ வெள்ளம்!"எதையும் வேஸ்ட் பண்ணாதே, திரும்ப உபயோகி; உடைந்தவைகளை ரிப்பேர் செய்; மழை நீரை சேமி...'' என்பது போன்ற பல கட்டளைகளை ஒரே சொல்ல் உள்ளடக்கிய அருமையான ஜப்பானிய வார்த்தை ஒன்று இருக்கிறது:

மோடாய்னை (mottainai). குழந்தைகள் சாப்பாட்டை வீணடிக்கும்போது கண்டிப்பதற்குப் பெற்றோர்கள் உபயோகித்து வந்த இந்தச் சொல்லைப் புதுப்பித்து அகலப்படுத்தி ஒரு மந்திர உச்சாடனமாகவே ஆக்கியவர் வங்காரி மாதாய்.

மற்றொருபுறம், இரண்டு கண்ணும் குருடான அரசாங்க அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் சேர்ந்து இதை விட வேகமாக பூமியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னால் சென்னையிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் மிகப் பழைய மரங்கள் இருந்தன. பெயிண்ட் அடித்து தாசில்தார் நம்பர் போட்ட மரங்கள். எத்தனையோ மன்னர்களுக்கும் யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும் மெளன சாட்சியாய் நின்ற மரங்கள். இப்போது நம் டீசல் புகை வாகனங்களுக்கு வழி விடுவதற்காக எல்லாவற்றையும் வெட்டித் தள்ளிவிட்டார்கள்.

சியாரா க்ளப் சுற்றுச் சூழல் இயக்கத்தை ஆரம்பித்த ஜான் மியூர் ஒருமுறை சொன்னர்: "கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!''

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP