>

Archives

வாழ்வது எப்படி ????

>> Thursday, September 3, 2009

என் மனைவியும் அவளுடைய சகோதரன் மகளும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண் பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவி. ரெஸஷன் என்ற வார்த்தை காதில் விழுந்ததால் பேச்சை கவனித்தேன். ’ பொறியியல் படித்தால் இப்போதெல்லாம் வேலை கிடைப்பதில்லை. வேலை கிடைத்தாலும் நல்ல சம்பளம் இல்லை. அதனால் வேதாந்தம் படிக்கப் போகிறேன் ’ என்றாள் மாணவி. “அதற்குப் பேசாமல் சாமியாராகவே போய் விடலாமே? ” இது என் மனைவி.

இன்றைய இளைய சமுதாயத்தின் வாழ்க்கை பற்றிய பார்வைக்கும், மனோபாவத்துக்கும் ஓர் எடுத்துக்காட்டு இந்தப் பேச்சு. தகவல் தொழில்நுட்பத்தில் நடந்த திடீர்ப் புரட்சியால் மென்பொருள் துறையில் நுழைந்த இளைஞர்களுக்கு வானளாவிய ஊதியம் கிடைக்க ஆரம்பித்தது. பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தை எட்டுவதற்கு 25 ஆண்டுகள் ஊழியம் செய்த ஒரு குமாஸ்தாவின் பிள்ளை முதல் மாதச் சம்பளமாகக் கொண்டு வந்தது 60,000 ரூபாய்.

சில ஆண்டுகளே நீடித்த இந்த நிலை சடாரென்று வந்த பொருளாதார மந்தநிலையின் காரணமாகத் தலைகீழாய் மாறியது. உடனே என்ன நடந்தது? பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். கூட இருந்தவர்களைக் கொலை செய்தார்கள். ஒரு இளைஞன் தன்னுடைய மூன்று நாள் குழந்தையைக் கொல்கிறான். பலருக்கு மனநலம் பாதிக்கிறது. இப்போது எங்கள் குடும்பத்துப் பெண் வேதாந்தம் படிக்கப் போகிறாள். மனைவியோடு சண்டை போட்டுக் கொண்டு சாமியாரான கதை!

இந்த இளைஞர்கள் அணியும் ஒரு சட்டையின் விலைதான் இவர்களின் தந்தையரின் ஒரு மாத ஊதியம். அப்படிப்பட்ட சொற்ப சம்பளத்தில் வாழ்ந்து தனது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் படிக்க வைக்க முடிந்தது. ஆனால் 60,000 ரூ. சம்பளம் பெறுகிற இளைஞன் தன் குழந்தையைக் கொன்று கிணற்றில் வீசுகிறான்.

ஒரு இளைஞனின் வாழ்வில் 16 ஆண்டுகள் கல்விக்குச் செலவாகிறது. ஆனால் இந்தக் கல்வி அவனுக்கு என்ன கற்றுத் தருகிறது என்று பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. சுயமாக வாழ்வதற்கான எந்தத் தகுதியையும் இந்தக் கல்வி அவனுக்குக் கொடுப்பதில்லை. மாறாக, பணம் ஈட்டுவதற்கான ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக் கொண்டு வெளி உலகத்திற்கு வருகிறான் அவன். அந்தத் தொழில்நுட்ப அறிவுக்கு மதிப்பு குறையும் போது அவனுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது.

நீச்சல் தெரியாது; சாலைகளில் நடக்கத் தெரியாது; தன் உணவைத் தானே சமைத்துக் கொள்ளத் தெரியாது. அடுத்த மனிதனோடு எப்படி அனுசரணையாக வாழ்வது என்று தெரியாது. ஒரு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாது. ஏன், சரியாக மூச்சு விடுவது எப்படி என்று கூடத் தெரியாது. அதற்காகத் தனியாக ஒரு வகுப்பு. வாரம் இரண்டு மணி நேரம் ’ மூச்சு விடுவது எப்படி? ’ என்று சாமியார்களிடம் கட்டணம் கட்டிக் கற்றுக் கொள்கிறான் இன்றைய இளைஞன்.

மூச்சு விடுவது எப்படி என்று வகுப்புகளுக்குச் சென்று கற்றுக் கொள்ளும் ஜீவராசி இந்த உலகத்திலேயே மனிதன் ஒருவனாகத்தான் இருப்பான். அதை விட அநியாயம் சிரிப்பதற்குப் பயிற்சி தரும் காலை வகுப்புகள். இதற்கு அடுத்து ’ வாழ்வது எப்படி? ’ என்று ஒரு மேல்நிலை வகுப்பு. ஆக, அவன் 16 ஆண்டுகள் பள்ளியில் கற்றுக் கொண்டதெல்லாம் வாழ்க்கைக் கல்வி அல்ல. வேறு ஏதோ கல்வி. பணம் காய்க்கும் மரத்திலிருந்து பணம் பறிப்பது எப்படி என்பதைக் கற்பிக்கும் கல்வி. இதனால் அவனுடைய உடல்நலமும் கெட்டுப் போகிறது. முப்பது வயதிலேயே முதுமை எட்டிப் பார்க்கிறது. அதற்கும் ஆன்மீகவாதியிடம் ஓடுகிறான். இன்னும் சில ஆண்டுகளில் இப்போது தெருவுக்குத் தெரு மருத்துவர்களைப் பார்ப்பது போல் தியானமும், யோகாவும் கற்பிக்கும் சாமியார்களைப் பார்க்கப் போகிறோம்.

கோவில் சிலைகளில் நாம் ஆண் பெண் உருவங்களைப் பார்த்திருக்கிறோம். அந்த உருவங்கள் நம் உருவங்களைப் போலவா இருக்கின்றன? அவை யோக உடல்கள். நம்முடையவை போக உடல்கள். தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளைப் போன்ற உடல்களை வைத்துக் கொண்டிருந்தால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்?

விலங்குகளும் பூர்வகுடி மக்களும் இந்தப் படித்த மனிதர்களை விட வாழ்க்கையை வெகு சீராகவும், லாவகமாகவும் எதிர்கொள்வதை நாம் கவனிக்கலாம். கொலையோ தற்கொலையோ அவர்களிடையே இல்லை. தங்கள் உணவைத் தாமே தேடிக் கொள்வதிலிருந்து அவர்களது வாழ்க்கைப் பயணம் துவங்குகிறது. வாழ்வது எப்படி என்ற ’ கலை ’ யை யாரும் அவர்களுக்குக் கோடை வகுப்புகளில் கற்றுத் தருவதில்லை. ஒரு நதி எப்படித் தன் பாதையை வகுத்துக் கொள்கிறதோ அதைப் போலவே அமைகிறது ‘படிக்காத ’ அந்த மனிதர்களின் வாழ்க்கை.

காலை ஐந்தரை மணிக்கு பெரும்பாரமாக புத்தக மூட்டையை முதுகில் சுமந்து கொண்டு டியூஷன் வகுப்புக்குச் செல்லும் மாணவ மணிகளின் இப்போதைய கல்வி முறையை மாற்றுவதிலிருந்து மேலே குறிப்பிட்ட வாழ்க்கைக் கல்விக்கான நம்முடைய முதல் அடியை எடுத்து வைக்கலாம் என்று தோன்றுகிறது.

( டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரி நான்கு பக்கங்களில் தமிழ் இணைப்பையும் அவ்வப்போது கொடுத்து வருகிறது. கௌரவ ஆசிரியர் மனுஷ்ய புத்திரன். இதன் விருந்தினர் பக்கத்தில் இன்றைய தினம் (21.8.2009) வெளிவந்துள்ள கட்டுரையே இது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் நன்றி).

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP