>

Archives

ஒரு ஞானியின் சிந்தனை !!!

>> Sunday, October 25, 2009

உலகில் பிறந்த உயிரினங்களில் சிந்திக்க தெரிந்தது மனிதன் மட்டுமே. அப்படி சிந்திக்கக் கூடிய மனித உணர்ச்சிகளில் ஒவ்வொரு மனதும் ஒரு மாதிரி. இதை கவியரசு கண்ணதாசன் தனது பாடலில் “சிந்திக்க தெரிந்த மனமே…” என்றும் சுகி சிவம் “மனசே மந்திரச் சாவி…” என்றும் கூறியுள்ளனர்.

அந்த மனித மனத்தின் சிந்தனை… ஓர் அழகான ரோஜா செடி. அதில் உள்ள பல முள்களுக்கு இடையில் ஒரு அழகான ரோஜா பூ. அதை பறிக்க நினைத்த அந்த மனிதர் கையில் ரோஜா செடியின் முள் குத்தியது. இப்பொழுது அந்த மனிதனின் சிந்தனை… “அழகான ரோஜா பூ செடியில் முள்ளை வைத்த கடவுள் முட்டாள்” என்கிறது.

ஒரு ஞானியின் சிந்தனை. அதே ரோஜா பூ செடியின் மீது, “ஆஹா… கடவுள் கருணையே கருணை! இந்த ரோஜாப்பு செடி ஒரு முட்செடியாக இருந்தால் யாராவது இதை வளர்ப்பார்களா? நீர் விடுவார்களா?”. இந்த முட்செடியின் நடுவில் இடை இடையே ரோஜாவைச் சிரிக்க விட்டு இந்த செடிக்கும் மரியாதை ஏற்படுத்திய கடவுளுக்கு நன்றி.

சற்றே யோசியுங்கள். இங்கு செடி ஒன்றே. அதன் மீது மனிதனுக்கு ஏற்பட்ட சிந்தனைகளே வேறுபடுகிறது. நாம் நல்லவற்றையே சிந்திப்போம் நாளும் வளம் பெற.

“உண்மை அறிதல், தன்னை அறிதல்”

1 comments:

தயாநிதி October 27, 2009 at 10:01 PM  

அருமை நண்பரே ...!!!!! மனிதனின் சிந்தனை மாறுபட்டது என்பது ஒரு சின்ன உதாரணத்தோடு சொல்லியிருப்பது மிக்க அருமை !! உங்க சிந்தனை மேலும் வளர வாழ்த்துகள் !!!

தரம்

தயாநிதி said...

அருமை நண்பரே ...!!!!! மனிதனின் சிந்தனை மாறுபட்டது என்பது ஒரு சின்ன உதாரணத்தோடு சொல்லியிருப்பது மிக்க அருமை !! உங்க சிந்தனை மேலும் வளர வாழ்த்துகள் !!!

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP