>

Archives

எவரெஸ்ட் சிகரத்தில் நேபாள அமைச்சரவை கூட்டம் !!!

>> Monday, December 7, 2009

பூமி வெப்பமயமாகி, பனி மலைகள் உருகுவதால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த நேபாள காபினட் அமைச்சரவை கூட்டம் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் நடந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் சிலிண்டர் பொறுத்தியபடி பல அமைச்சர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு படையினர் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் சென்றனர். புவியின் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் பெரும் இழிவை சந்திக்க நேரிடும் சூழல் இருப்பதாக தற்போதைய முக்கிய கவலையாக உள்ளது.

உலக நாடுகளில் வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடு, மாசு ஆகியவற்றால் பூமி வேகமாக வெப்பமயமாகி வருகிறது. அதனால் ஆர்டிக் கடலில் பனி பாறைகள் வேகமாக உரு கத் தொடங்கியுள்ளன. கடல் மட்டம் அதிகரித்து தீவு நாடுகள் அழியும் அபாயம் உள்ளதாக புவியியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.உலகம் முழுவதும் இந்த பிரச்னையை முன்வைத்து அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த இன்று 7 ம் தேதி டென்மார்க் தலைநகர் கோபன்ஹனில் மாநாடு நடக்கவிருக்கிறது. ஒரு வார காலம் நடக்கும் இந்த மாநாட்டில் உலக அளவில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா என 100 க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

யார் எவ்வளவு கட்டுப்படுத்துவது ? இதற்கிடையில் எரிபொருளில் இருந்து வெளியேறும் நச்சுக்காற்றின் அளவை குறைப்பதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் ஒருமித்த கருத்தை ஏற்க மறுத்து வருகின்றன. அதிக அளவு அசுத்தக்காற்றை வெளியிடும் சீனாவும் 40 முதல் 45 சதவீதம் வரை ( 2020 க்குள்) கட்டுப்படுத்த ஒத்துக்கொண்டுள்ளது. இந்தியா வரும் 2020 ம் ஆண்டுக்குள் 20 முதல் 25 சதவீதம் வரை கட்டுப்படுத்த முன்வந்துள்ளது. ஆனால் அனைத்து நாடுகளும் ஒரே சாராம்ச கொள்கையை ஏற்க தயாராக இல்லை.

வரும் கேபன்ஹன் மாநாடு குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த கடந்த அக்டோபர் மாதத்தில் மாலத்தீவில் நீருக்கடியில் அமைச்சரவை கூட்டம் நடந்தது.

இந்நிலையில் நேபாள அரசு உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்த எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் அமைச்சரவை கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் படி நேபாள பிரதமர் மாதவ்குமார் தலைமையில் 24 அமைச்சர்கள் ஹெலிகாப்டர் மூலம் இயமமலையில் உள்ள எவரெஸ்ட்டின் முந்தைய கீழ் தளத்திற்கு சென்றனர். அங்குள்ள காலிபத்தார் என்னும் பகுதியில் கூட்டம் நடந்தது. இப்பகுதி கடல் மட்டத்தில் 17 ஆயிரத்து 192 அடி உயரத்தில் உள்ளது. அதவாது 5 ஆயிரத்து 240 மீட்ர் . இந்தகூட்டத்தில் பருவகால மாற்றம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. இமயமலையில் பனி உருகும் நிலை குறித்து இக்கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் : இங்கு இந்த கூட்டம் 20 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. கடும் குளிரில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு கவச உடைகள்அணிந்தபடி அமைச்சர்கள் சென்றனர். மருத்துவர்கள் , மற்றும் பாதுகாப்பு படையினரும் சென்றனர். ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் கொண்டு செல்லப்பட்டது. கூட்டம் முடிந்து அனைவரும் சியான்போச் திரும்பினர் அங்கு சர்வதேச அளவில் காத்திருந்த நிருபர்களை சந்தித்தனர். பனி பிரதேசத்தில் கூட்டம் நடத்தியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மாலத் தீவு, நேபாளத்தைத் தொடர்ந்து பூமி வெப்பமயமாவதைத் தடுக்கும் முயற்சியில் தனது பங்காக, கார்பன் டை ஆக்சைடு வெளியிடுவதைக் குறைக்க நடவடிக்கை எடு ப்பதாக இந்தியாவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பருவகால மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எவரெஸ்ட் சிகரம் வரை செல்ல வேண்டியிருக்கிறது. நேபாள அமைச்சர்கள் கூட்டத்தினருக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க ..

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP