>

Archives

உலகம் அழியும் அபாயம் தேனீக்களை தேடும் அமெரிக்கா !!!

>> Monday, January 25, 2010

உலகம் இப்ப எங்கோ போய்க்கொண்டு இருக்கிறது . மக்களை நிகழ்காலத்தில் நிலத்தில் நிரந்தரமாக குடியேற்றி அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தெரியாத இந்த நாடுகள் எதிர்காலத்திற்கு என்று சொல்லி நிலவில் வாழ ஆராய்ச்சி செய்கிறார்கலாம் என்ன கொடுமை ஸார் இது .? சரி இவர்களைக்கூட விடுங்க இன்னும் ஒரு கூட்டம் உள்ளது கப்பலையே தொலைத்துவிட்டு மிகவும் சாதாரணமாக பதில் சொல்லிடுறாங்க காணவில்லை தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று . அதே பிரச்சனை காலப்போக்கில் கண்டுபிடிக்காமலே காணமல் போய்விடுகிறது . இப்படியெல்லாம் அவ்வப்பொழுது நடக்கத்தான் செய்கிறது . அதார்க்கு இப்ப என்னவென்ருதானே கேக்குறீங்க விசயம் இருக்கு சொல்கிறேன் . உலகத்தையே தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் வல்லரசு நாடான அமெரிக்க தேனீக்களைக் காணவில்லை என்று பரபரப்புடன் தேடிக்கொண்டு இருக்கிறார்கலாம் .

 தேனீக்களைக் காணவில்லையாம் !.

இந்தக் கவலை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கோடிக்கனக்கான தேனீக்கள் காணாமற் போய்விட்டதைப் பற்றி ஒரு பிரிட்டிஷ் திரைப்படமே எடுக்கப்பட்டிருக்கிறது.' வேனிஷிங் ஆஃப் ஹனிபீஸ் ' என்ற இந்தப் படம் தேனீக்கள் காணாமற் போனதற்குக் காரணம் பூச்சி மருந்துகள்தான் என்று குற்றம் சாட்டுகிறது .

தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடிமுழுகிப்போய்விடும் என்று கேட்பவர்கள் அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத்தானிருக்க முடியும் . மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும் , பயிர்கள் விளைவதும் நடக்கின்றன . மகரந்தச் சேர்க்கையின் மன்மதத் தூதர்கள் தேனீக்கள்தான் .

தேனீக்கள் காணாமற்போனதையடுத்து , ஆஸ்திரேலியாவிலிருந்து தேனீக்களை இறக்குமதி செய்யும் நிலைமை அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கிறது .

தேனீக்கள் அழிவுக்குப் பல காரணங்கள் உள்ளன . கரையான் பூச்சிகள் முதல் , செல்போன் அலைவரிசைகளின் பாதிப்பு வரை பல காரணங்கள் இருந்தாலும் , இந்தப் படம் பூச்சி மருந்தை முக்கியக் காரணமாக விவரிக்கிறது .விதைக்குள்ளேயே சென்று ஊடுருவியிருக்கும் பூச்சி மருந்துகள் தேனீக்கள் அழிவுக்குக் காரணம் என்று சொல்வதை பூச்சி மருந்து தயாரிக்கும் பேயர் கம்பெனி மறுக்கிறது . எது எப்படியானாலும் தேனீக்கள் அழிந்தால் விவசாயம் அழியும் ; மனிதன் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான் .

தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா , பிரிட்டன் , ஐரோப்பா என்று மேலைநாடுகளில் மட்டுமல்ல , விவசாயத்தையே பெரிதும் நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான் என்கிறது ' டைம்ஸ் ஆஃப் இந்தியா '.

தேனீக்கள் , சிட்டுக் குருவிகள் எல்லாம் அழிவதற்குக் காரணம் பூச்சி மருந்துகள் மட்டுமல்ல , செல்போன் பிரதான காரணம் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றன . செல்போன் பெருக்கம் சூழலை மின் காந்த அலைகளால் நிரப்பியிருக்கிறது . இவை இயற்கையான பூமியின் காந்த அலைகளைப் பயன்படுத்தி திசைகளை உணர்ந்து பயணிக்கும் தேனீகளையும் குருவிகலையும் குழப்பி மெல்ல மெல்ல அழிவை நோக்கி இட்டுச் செல்கின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்து .

இப்பதாங்க தெரிகிறது எதையும் சிறிது என்று எண்ணி எளிதாக எண்ணிவிடக் கூடாதென்று .ஆமா அப்பனா உலகத்தை அழிக்க சிட்டுக்குக் குருவிகளையும் , தேனீக்களையும் அழித்தால் போதுமாமுல. அப்படி என்றால் எதர்க்குத்தான் உலக நாடுகள் இப்படி கோடிக் கணக்கில் பணத்தை செலவிட்டு அணுகுண்டு , அணு ஆயிதம் என்று இப்படி நேரத்தை வீணாக்குகிறார்கள் என்று தெரியவில்லை . பேசாம இந்த வேலையெல்லாத்தையும் விட்டுவிட்டு எல்லோருடைய கைகளிலும் சிறிதளவு தேனீக்களையும் , சிட்டுக்குருவிகளையும் கொடுத்து வளர்க்க சொன்னா விவசாயமும் பெருகும்., எந்த உணவுத் தட்டுப்பாடும் இருக்காது., இந்த மாதிரி ஒவ்வொரு நாடும் நான் பெரியவனா நீ பெரியவனா என்ற போட்டியினால் ஏற்படும் தாக்குதலில் இப்படி ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் இறக்கவும் மாட்டார்கள். இயற்கைகளை எல்லாம் அழித்துவிட்டு அப்றம் இயற்கையின் கோபத்தினால் உலகம் அழியும் அபாயம் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியிலும் , எவாரேஸ்ட் மாலை உச்சியிலும் கூட்டம் நடத்த தேவையும் இருக்காது . அறிவியலின் வளர்ச்சியால் நிலவுக்குப்போகலாம் . ஆனால் அங்கும் இயற்கையின் துணையில்லாமல் உயிர்வாழ முடியாது .இனியாவது இயற்கை தந்த வளங்களை முறையாக பேணிக்காப்போம் .வாழப்போகும் சிறிது காலத்தை வளமாக அமைப்போம் .என்ன நண்பர்களே இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க ?

இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

3 comments:

பித்தனின் வாக்கு January 25, 2010 at 4:50 PM  

இந்தியாவில் சிறுவயதில் நான் ஆசையுடன் பார்த்த சிட்டுக்குருவிகள் இப்போது காணவில்லை. காண்பதும் அரிது. அவை செல்போனால் அழிந்தது என்று நானும் நம்பினேன்.ஆனால் நான் சிங்கைக்கு வந்து பார்க்கும் போது நிறைய சிட்டுக்குருவிகள் மற்றும் அரிக்குருவிகளைக் காண முடிந்தது. மாலை அலுவலகம் வந்ததும் சிறிது நேரம் ஜன்னல் வழியாக குருவிகளின் விளையாட்டை இரசித்த வண்ணம் தேனீர் அருந்துவது என் வழக்கம். நீங்கள் சொல்வது போல பூச்சி மருந்துகள் காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. நன்றி.

abul bazar/அபுல் பசர் January 25, 2010 at 6:08 PM  

பயனுள்ள தகவல்களை தந்திருகிறீர்கள்.
நன்றி நண்பரே.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் January 26, 2010 at 7:07 PM  

தங்கள் பதிவுக்கு முதல் முறையாக வருகிறேன்.

விசயமுள்ள நல்ல பதிவு. Bio-diversity இயற்கை அமைத்திருக்கும் தொடர் சங்கிலி உணவு சார்பு சூழல் இவைபற்றியெல்லாம் கவலைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறோம். சங்கிலி கண்ணியில் நாமும் தேனீயிம் இணைந்திருக்கிறோம் என்பதை உணராமல் இயற்கையின் சமனை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து இது சார்ந்த விசங்களை எழுதுங்கள்

தரம்

பித்தனின் வாக்கு said...

இந்தியாவில் சிறுவயதில் நான் ஆசையுடன் பார்த்த சிட்டுக்குருவிகள் இப்போது காணவில்லை. காண்பதும் அரிது. அவை செல்போனால் அழிந்தது என்று நானும் நம்பினேன்.ஆனால் நான் சிங்கைக்கு வந்து பார்க்கும் போது நிறைய சிட்டுக்குருவிகள் மற்றும் அரிக்குருவிகளைக் காண முடிந்தது. மாலை அலுவலகம் வந்ததும் சிறிது நேரம் ஜன்னல் வழியாக குருவிகளின் விளையாட்டை இரசித்த வண்ணம் தேனீர் அருந்துவது என் வழக்கம். நீங்கள் சொல்வது போல பூச்சி மருந்துகள் காரணமாக இருக்க வாய்ப்பு உண்டு. நன்றி.

abul bazar/அபுல் பசர் said...

பயனுள்ள தகவல்களை தந்திருகிறீர்கள்.
நன்றி நண்பரே.

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

தங்கள் பதிவுக்கு முதல் முறையாக வருகிறேன்.

விசயமுள்ள நல்ல பதிவு. Bio-diversity இயற்கை அமைத்திருக்கும் தொடர் சங்கிலி உணவு சார்பு சூழல் இவைபற்றியெல்லாம் கவலைப்படாமல் போய்க்கொண்டிருக்கிறோம். சங்கிலி கண்ணியில் நாமும் தேனீயிம் இணைந்திருக்கிறோம் என்பதை உணராமல் இயற்கையின் சமனை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

வாழ்த்துக்கள் தொடர்ந்து இது சார்ந்த விசங்களை எழுதுங்கள்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP