Showing posts with label இந்தியா. Show all posts

சாதனைகள் பல செய்தும் இன்னும் உலக அரங்கில் சரிந்த நிலையில் நம் நாடு ஏன் இருக்கிறது என்று எப்பொழுதாவது நாம் சிந்தித்தது உண்டா . நமது வேலைகளை நாம் பார்ப்பதற்கே நேரம் இல்லை நமக்கு எதற்கு இந்த தேவையற்ற வேலை என்று பலரும் சலித்துகொள்வதும் உண்டு . ஆனால் இந்த சரிவுக்கு முக்கிய காரணம் நாம்தான் . என்னடா இவன் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறானே என்று என்ன வேண்டாம் .இதுதான் உண்மை .
அணுகுண்டு வைத்திருக்கிறோம், ஆஸ்கர் விருது பெற்றுள்ளோம், ஆண்டுக்கு ஏழெட்டு சதவீத பொருளாதார வளர்ச்சி காண்கிறோம், ஐந்து வருடத்துக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி அதிசயிக்க வைக்கிறோம்.. ஆனாலும் ‘இந்தியா லஞ்ச ஊழலில் திளைக்கும் நாடு என்றுதான் உலகமும் பார்க்கிறது. இந்த அவமானம் நம்மை விட்டு போவேனா என்கிறது. உலக அளவில் 180 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறதாம். ஓட்டப் பந்தயத்தில் அத்தனாவது இடத்தில் வந்தால் வேடிக்கை பார்க்கக்கூட எவரும் மிச்சமிருக்க மாட்டார்கள்.
டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த ஆய்வை நடத்துகிறது. சென்ற ஆண்டு நமக்கு 85ம் இடம். அதற்கு முன்னால் 72. நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கத்தை கத்தையாக கரன்சி நோட்டுகள் கைமாறிய விவகாரத்தால் தடாலென்று 13 படி சறுக்கினோம். அரசு துறைகளில் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி முடித்துக் கொடுக்கப்படுகிறது என்பதை அளவுகோலாக வைத்து ஆய்வு நடத்தப்படுகிறது. அதில் மொத்தம் 13 குறியீடுகள். அதிகாரிகளின் நேர்மை ஒரு குறியீடு. லஞ்சம் வாங்காமல் வேலையை முடித்து தருவதாக ஆய்வில் பங்கேற்ற அனைவரும் தெரிவித்தால் முழு மதிப்பெண் போடப்படும். இந்த விஷயத்தில் இந்தியா பெற்றுள்ளது 10க்கு 3.4 மட்டுமே. பக்கத்தில் உள்ள குட்டி நாடு பூடான் 5 மார்க் வாங்கியுள்ளது. தனியார் துறை ஊழல்கள் இந்த கணக்கில் வராது. உலகிலேயே லஞ்சம் குறைந்த நாடு நியூசிலாந்து. அடுத்து டென்மார்க், அப்புறம் சிங்கப்பூர். இம்மூன்றும் 9க்கு மேல் பெற்றுள்ளன. இந்தியாவில் லஞ்சம் தலைவிரித்து ஆடும் துறைகளில் முதன்மையானது காவல் துறை.
லஞ்சம் குறைந்தது பள்ளிக் கல்வித் துறை. ஊழல் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை பெறுவது பீகார். அடுத்து வருவது காஷ்மீர், மத்திய பிரதேசம். அரசுப் பணிகளை கணினி மயமாக்கியதால் லஞ்சம் பெரிய அளவில் குறைந்துவிடவில்லை என்று அகமதாபாத் IIM நடத்திய ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஏனென்றால் அந்த கணினிகளை கையாள்வது மனிதர்கள். அவர்களுக்கு பதில் ரோபோக்களை நியமித்து அரசு எந்திரத்தை உண்மையிலேயே எந்திரமாக்கினால் இந்தியாவும் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு இருக்கிறது..
நமது உரிமைகளையே பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கும் அளவில் ஒரு நாடு சீரழிந்திருந்தால் அப்போது நம் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுப்பது சில வேளை நிர்ப்பந்தமாகி விடுகிறது. இது போன்ற நிலையை அடைவோர் தங்களின் உரிமையைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்தால் அது மன்னிக்கப்படும்.
நமது முன்னால் குடியரசு தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஒரு முறை மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த உரையாடல் நினைவிற்கு வருகிறது
அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளில் ஒரு அறிவியல் புரட்சி ஏற்படும். அப்போது பயோ டெக்னாலஜி, இன்பர்மேஷன் டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி ஆகியவை சேர்ந்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இந்தக் காலத்தில் லஞ்சம், பெருமளவு பெருகி விட்டது. எந்த அளவுக்கு எனில் சில ஊழியர்களுக்கு அவர்களுடைய ஊதியத்தை விடக் கூடுதல் வருமானமாக லஞ்சம் ஆகிவிட்டது. அதுமட்டுமல்ல பல கம்பெனிகளுடைய வரவு, செலவு கணக்கு (பட்ஜெட்)களில் பல்வேறு (மறைமுகமான) பெயர்களில் லஞ்சம் கொடுக்கல், வாங்கல்கள் பதிவு செய்யப்படுகிறது. பெரும்பாலான கொடுக்கல், வாங்கல்கள் எப்படி மாறி விட்டன என்றால் அவை ஆரம்பமாவதும் லஞ்சம் மூலமாகத்தான் முடிவதும் லஞ்சம் மூலமாகத்தான். அதனால் ஏழைகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். இதனால் (மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட்ட) பல்வேறு பொறுப்புகள் பாழாகி விட்டன. தொழிலாளிகள் கெட்டுப் போவதற்கும் அதனால் முதலாளிகள் நஷ்டம் அடைவதற்கும் இதுதான் காரணம். அது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பவருக்குத் தான் வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுகிறது. எவர் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவருடைய வேலை சிறப்பாக முடித்துக் கொடுக்கப்படுவதில்லை. அல்லது அவருடைய வேலை தாமதப்படுத்தப்படுகிறது.
நமது நாட்டை லஞ்சம் இல்லாத நாடாக உருவாக்க முடியும். நமது நாட்டில் 100 கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் 20 கோடி வீட்டில் இருப்பார்கள். அப்படி என்றால் ஒரு வீட்டில் 5 பேர் இருப்பார்கள். அனைத்து வீட்டிலும் லஞ்சம் வாங்குபவர்கள் இருக்க முடியாது. 50 சதவீதம் அதாவது 10 கோடி வீட்டில் லஞ்சம் வாங்கும் தாயோ அல்லது தந்தையோ அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் ஊழலில் மாட்டிக் கொண்டு இருப்பார்கள்.
துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் தாய் அல்லது தந்தையிடம் லஞ்சம் வாங்காதீர்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? (மாணவர்கள் முடியும் என்றனர்). முடியும். வெரிகுட்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து கேட்கிறேன். நீங்கள் நல்லவராக இருப்பீர்கள். துரதிர்ஷ்டவசமாக உங்களது குழந்தை வந்து அப்பா லஞ்சம் வாங்காதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்பீர்களா? (கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் கேட்போம் என்றனர்) கேட்பீர்கள். அப்படியானால் இன்னும் 5 ஆண்டுகளில் லஞ்சம் இல்லாத இந்தியா மலரும்.
ஒவ்வொரு குடிமகனும் லட்சிய சிகரத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்க வேண்டும். பள்ளிப்படிப்பு படிக்கும் மாணவர்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும்.
வந்திருக்கும் மாணவர்களில் எத்தனை பேர் அரசியல் தலைவர்களாக வர விரும்புகிறீர்கள்? கையை உயர்த்துங்கள். (7 மாணவ- மாணவிகள் கையை உயர்த்தினர்) உயர்த்தியவர்களில் 3 பேர் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். ஏன் அரசியல் தலைவராக ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று அவர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த மாணவிகளில் ஒருவர், "குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் கஷ்டப்படும் சிறுவர்களை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அரசியல் தலைவராக ஆகவேண்டும் என்று விரும்புவதாக'' பதில் அளித்தார்.
அந்த மாணவியை பார்த்து உனக்கு 100 மார்க் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறி பாராட்டு தெரிவித்தார்.
எப்பொழுதோ பார்த்த இந்தியன் படத்தில் சொல்லும் ஒரு கருத்து இப்பொழுது எனக்கு ஞாபகம் வருகிறது . வெளி நாடுகளில் நான் லஞ்சம் யாரும் வாங்கவில்லை என்று சொல்லவில்லை . வாங்குகிறார்கள் . அவர்கள் எல்லோரும் தங்கள் பணியை மீருவதற்கு லஞ்சம் வாங்குகிறார்கள் . ஆனால் நமோ நமது பணிகளை செய்வதற்கு லஞ்சம் வாங்குக்கிறோம் .இதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .அதனால்தான் இன்னும் அடிப்படை தேவைகளுக்குக் கூட கை ஏந்தும் நிலை நமது நாட்டில் . இந்த நிலை இன்னும் நீடித்தால் உலக அரங்கில் நமது நாடு மக்கள் தொகையில் முதல் இடம் பிடிக்கிறதோ இல்லையோ அதற்கு முன்பாக லஞ்சத்தில் முதல் இடம் பிடித்துவிடும் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாகிப்போகலாம் .
ஒரு வழியா பதிவு போட்டாச்சு . ஏலே மக்கா அடுத்து நீங்கதான் . பதிவு பிடித்து இருந்தாலும் , இல்லாவிட்டாலும் உங்க கருத்துக்களை மறக்காமல் மறுமொழியில் சொல்லிட்டுப்போங்கல .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
தெரிந்தே இறக்கிறது தாய்மொழி !!!
>> Saturday, February 6, 2010
மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் பேசினாலும் பல வேறுபட்டு நாகரிகங்களை கொண்டு வாழ்ந்து வந்தாலும் . நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் என்றே ஒரு உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை . இதைத்தான் அன்றே அழகாக பேசும் மொழி பதினெட்டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் மகாகவி பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம் !
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.
அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி
இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .
போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.
பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.
தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .
இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .
கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது
உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.
சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.
எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .
வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.
இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
Read more...
அமெரிக்காவில் காந்தி மாவட்டம் !!!
>> Wednesday, January 27, 2010
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு மாவட்டத்துக்கு அந்நாட்டு அரசு மகாத்மா காந்தி பெயரை வைத்துள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு ஹூஸ்டன் பகுதியில் உள்ள மாவட்டத்தின் பெயர் ஹில்கிராப்ட் என்று இருந்தது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாட்டினர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.
இந்தப் பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதிக்கு மகாத்மா காந்தி பெயரிட வேண்டும் என்பதுதான் அது. அதை இப்போது அமெரிக்க அரசு ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 141வது பிறந்த ஆண்டான இப்போது ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி மாவட்டம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹூஸ்டனில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா முன்னிலையில் ஹூஸ்டன் மேயர் அன்னிஸ் பார்க்கர் நேற்று இந்த பெயர் மாற்றத்தை வெளியிட்டார். 90 சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் வசிக்கும் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த மாவட்டத்துக்கு இப்போது மகாத்மா காந்தி பெயரிட்டதன் மூலம் தங்கள் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதாக இந்திய கலாசார மையம் மகிழ்ச்சி தெரிவித்தது.
நன்றி தினகரன் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

Labels:
அமெரிக்க,
இந்தியா,
உலகம் . மகாத்மா காந்தி,
மாவட்டம்
தேசிய கொடி உருவான வரலாறு !!!
>> Sunday, December 20, 2009
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது
கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது . அது சிவப்பு , பச்சை , மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து ,பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள் , வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் , கதிர்வீசும் ஆதவன் , பிறைசந்திரன் , நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில்,
வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை . பின்னர் ,
1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது .8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக , வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு , அந்தக்கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும் , அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர் .
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3 ம் முறையாக மாற்றப்பட்டது . இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை ( 5 ) பச்சைநிற பட்டை (4 ) , அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும் , வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும் , நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன . இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை .
பின்னர் 1921 ம் ஆன்டூ விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது , பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து , முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி , பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார் . இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது .
ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. . இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி.இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த
சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்:
பின்னர் , அடர் காவி , அடர் பச்சை , மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் , மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது .
இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து , அதன்பின் , முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது .
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.
ஜெய்ஹிந்த்
நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க
Labels:
இந்தியா,
சுதந்திரம்,
தேசிய கொடி,
பண்பாடு,
வரலாறு
திப்பு சுல்தான் !!!
>> Sunday, October 4, 2009
திப்பு சுல்தான்
200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.
அதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.
1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.
தவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.
இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.
மேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.
திப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.
அதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.
திப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.
ஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.
நம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.
அமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
திப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'

உலகம்,
சங்கர் கவிதை,
போர்க்களம்,
மன்னர்கள்,
வரலாற்று குறிப்புகள்
Subscribe to:
Posts (Atom)
தரம்
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
உலக அரங்கில் லஞ்சமாய் இந்தியா !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Wednesday, February 17, 2010
Labels:
இந்தியா,
உலகம்,
லஞ்சம் இல்லாத இந்தியா
/
Comments: (12)

on Saturday, February 6, 2010
மொழி என்ற ஒன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம் நாம் அனைவரும் பேசும் திறன் இருந்தும் ஊமைகலாகத்தான் இந்த உலகத்தில் உலாவிக்கொண்டு இருந்திருக்கக்கூடும் . ஆனால் இன்றைய நிலையில் உலகத்தில் அங்கரிக்கப்பட்டும் , அங்கரிக்கப்படாமலும் எத்தனையோ மொழிகள் அவர் அவர் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பேச்சு வழக்கில் நடைபோட்டுக்கொண்டு இருக்கின்றன . நாம் ஆயிரம் மொழிகள் பேசினாலும் பல வேறுபட்டு நாகரிகங்களை கொண்டு வாழ்ந்து வந்தாலும் . நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இந்தியர்கள் என்றே ஒரு உணர்வுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் யாராலும் மறுக்க இயலாத ஒரு உண்மை . இதைத்தான் அன்றே அழகாக பேசும் மொழி பதினெட்டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள்’ என்று பாரத மாதாவைப் பற்றிப் மகாகவி பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம் !
ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.
அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி
இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .
போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.
பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.
தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .
இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .
கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது
உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.
சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.
எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .
வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.
இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
ஒரு மொழி என்பது, தொடர்பாடலுக்குப் பயன்படுகின்ற ஒரு முறைமை ஆகும். இது ஒரு தொகுதிக் குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் கொண்டுள்ளது.
மனிதருடைய மொழிகளில், ஒலியும், கைச்சைகைகளும், குறியீடுகளாகப் பயன்படுகின்றன. இவ்வாறான ஒலிகளை எழுத்து வடிவமாக மாற்றமுடியும். ஆனால் சைகைகளை அவ்வாறு மாற்ற முடியாது. மனிதருடைய மொழிகளில் இக்குறியீடுகள் சொற்கள் என்றும், அவற்றைக் கையாள்வதற்கான விதிகள் இலக்கணங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
"மொழி ஒரு கருத்துப் பரிமாற்றக் கருவி எனக்கூறுவது முழுமையாகக் கூறப்படாத ஒரு விளக்கமாகும். மொழி, அதைப் பேசுகின்ற இனத்தின் அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை, பழக்கவழக்கம், ஒழுக்கநெறிகள் மற்றும் எண்ணங்கள் போன்ற பல வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படை விளக்கமாகவும் உள்முகச் செய்திகளாகவும் கொண்டிலங்குகிறது."
மனித மொழியானது இயற்கையான மொழியாகும் (natural language).மொழியினை கற்க முற்படும் அறிவியலுக்கு மொழியியல் (linguistics)எனப்படும். மொழியின் வளர்ச்சிப்பாதையாக பேச்சு, எழுத்து, புரிதல், மற்றும் விளக்கம் எனும் படிகளைக்கொண்டது.
மொழியானது பிறப்பு, இறப்பு, வளர்ச்சி, இடம்பெயர்தல், மற்றும் காலத்திற்கேற்ற மாற்றம் என பண்முகம் கொண்டதாக உள்ளது. எந்த ஒரு மொழி மாற்றத்திற்கோ அல்லது மேன்மையுறதலுக்கோ இடங்கொடாமல் இருக்கிறதோ அம்மொழி இறநதமொழி (Dead language) எனப்படும். மாறாக எந்ந ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்றாற்போல் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாக (Living language) கருதப்படும்.
அகா-போ (Aka-Bo) அல்லது போ (Bo) எனப்படுவது அந்தமான் தீவுகளில், குறிப்பாக வடக்குப் பகுதியில் பேசப்பாட்டு வந்த ஒரு பழமையான மொழி
இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்து இருக்கிறார் .
போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்து இருக்கிறார்.
பல ஆயிரம் ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த ஒரு மொழி நேற்றோடு அழிந்து விட்டது. ‘போ’ என்ற அந்த மொழியை பேசத் தெரிந்த ஒரே ஒருவரும் நேற்று இறந்தார். அவரோடு அந்த மொழியும் இறந்துவிட்டது. இதுபோல் உலகம் முழுவதும் மாதத்துக்கு ஒரு மொழி அழிந்து வருகிறது.
பிரிட்டிஷ் படைகள் 1858ல் அந்தமானை தங்கள் பிடியில் கொண்டுவந்தபோது, போ மொழி பேசும் பழங்குடி மக்கள் ஐயாயிரம் பேர் இருந்தனர். 150 ஆண்டுகளில் அத்தனை பேரும் மடிந்து, அவர்களோடு ஒரு புராதனமான மொழியும் போய் சேர்ந்துவிட்டது. கடைசி ஆள்தான் போ சீனியர். அந¢த பெண்மணிக்கு வயது 84. போர்ட் பிளேரில் வசித்தார். சுனாமி வந்தபோது, மரத்தில் ஏறி தப்பித்தாராம் போ. அப்போதுகூட கலங்கவில்லை. அவரோடு போ மொழியில் பேச துணைக்கு இருந்த ஒரு பெண் கடந்த ஆண்டு இறந்தபோது அழுதாராம்.
தெரிந்த மொழியில் பேச ஆளில்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை என்பது வெளி இடங்களில் வசிப்பவர்கள், வேலை பார்ப்பவர்களுக்குத்தான் தெரியும்.
கிரேட் அந்தமானீஸ் டிரைபல் என இந்த பழங்குடி மக்களை குறிப்பிடுவார்கள். 65 ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பழங்குடி இனம் அது. 550 தீவுகள் அந்தமானில் இருந்தாலும் 40 தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" .
இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்து இருக்கிறார் .
கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன என்பது மிகவும் வேதனை தரக்கூடிய ஒரு செய்தியாக உள்ளது
உலகம் முழுவதும் இந்த நிலைமைதான். பரவி வரும் பெரிய மொழிகள் பலரது தாய்
மொழியை மெல்ல மெல்ல அழித்து வருவதற்கு பல உதாரணங்கள் கூறலாம். மும்பையில் குடியேறும் தமிழன் மராத்தியில் பேச கற்றுக் கொள்கிறான். டெல்லிக்கு பிழைக்கச் செல்லும் தமிழனுக்கு இந்தி தேவையாகிறது. அவனே அமெரிக்காவில் செட்டிலானால் ஆங்கிலம்தான் எல்லாமே. இவர்களின் அடுத்த தலைமுறை தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் மறக்கின்றன.
சொந்த மண்ணிலேயே வாழ்ந்தாலும் தாய்
மொழியில் பேசி, எழுதி, படிக்கும் பழக்கம்
எத்தனை பேருக்கு இருக்கிறது என்று கணக்கெடுத்தால் அதிர்ச்சிதான் மிஞ்சும். மொழியோடு ஒரு இனத்தின் கலை கலாசாரம் பண்பாடு பாரம்பரியம் வரலாறு எல்லாமே மறைவது வேதனையான எதார்த்தம்.
எங்கோ தானே தமிழர்கள் இறக்கிறார்கள் நமக்கு என்ன என்று இருந்தது போல் இந்த விசயத்திலும் நமது அரசு இருக்குமெயானால் . விரைவில் தமிழ் மொழியும் இன்னும் சில காலங்களில் இதுபோன்ற நிலையை எட்டிப் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை . நமது நாட்டில் மொழி சம்மந்தப்பட்ட துறைகளில் பணியாற்றுபபவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்து பணியாற்றினால் நலமே !. இன்னும் மொழி சம்பந்தப்பட்ட விழிப்புணர்வுகளை மக்களிடையே அதிக்கப்படுத்தும் விதமாக பல குழுக்களை அமைத்து நமது அரசு நேரடியாக கண்கானித்து வந்தால் தமிழ் மொழி இன்னும் செழிப்புடன் திகழ்வதற்கு வாய்ப்பாக அமையும் .
வந்தபின் யோசிப்பதை விட வருமுன் காத்திருப்போம் !
நாம் தாய்மொழிக்கு மேலும் வாழு சேர்திருப்போம் !.
இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
அமெரிக்காவில் காந்தி மாவட்டம் !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Wednesday, January 27, 2010
Labels:
அமெரிக்க,
இந்தியா,
உலகம் . மகாத்மா காந்தி,
மாவட்டம்
/
Comments: (5)
ஹூஸ்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் ஒரு மாவட்டத்துக்கு அந்நாட்டு அரசு மகாத்மா காந்தி பெயரை வைத்துள்ளது. டெக்சாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு ஹூஸ்டன் பகுதியில் உள்ள மாவட்டத்தின் பெயர் ஹில்கிராப்ட் என்று இருந்தது. அங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிய நாட்டினர் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்.
இந்தப் பகுதி மக்கள் கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்க அரசிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தனர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதிக்கு மகாத்மா காந்தி பெயரிட வேண்டும் என்பதுதான் அது. அதை இப்போது அமெரிக்க அரசு ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 141வது பிறந்த ஆண்டான இப்போது ஹில்கிராப்ட் மாவட்டத்துக்கு மகாத்மா காந்தி மாவட்டம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஹூஸ்டனில் அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் அரோரா முன்னிலையில் ஹூஸ்டன் மேயர் அன்னிஸ் பார்க்கர் நேற்று இந்த பெயர் மாற்றத்தை வெளியிட்டார். 90 சதவீதத்துக்கு மேல் இந்தியர்கள் வசிக்கும் இந்தப் பகுதி ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த மாவட்டத்துக்கு இப்போது மகாத்மா காந்தி பெயரிட்டதன் மூலம் தங்கள் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியதாக இந்திய கலாசார மையம் மகிழ்ச்சி தெரிவித்தது.
நன்றி தினகரன் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........
தேசிய கொடி உருவான வரலாறு !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Sunday, December 20, 2009
Labels:
இந்தியா,
சுதந்திரம்,
தேசிய கொடி,
பண்பாடு,
வரலாறு
/
Comments: (1)
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது
கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது . அது சிவப்பு , பச்சை , மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து ,பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள் , வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் , கதிர்வீசும் ஆதவன் , பிறைசந்திரன் , நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில்,
வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை . பின்னர் ,
1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது .8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக , வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு , அந்தக்கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும் , அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர் .
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3 ம் முறையாக மாற்றப்பட்டது . இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை ( 5 ) பச்சைநிற பட்டை (4 ) , அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும் , வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும் , நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன . இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை .
பின்னர் 1921 ம் ஆன்டூ விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது , பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து , முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி , பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார் . இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது .
ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. . இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி.இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது
விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த
சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்:
பின்னர் , அடர் காவி , அடர் பச்சை , மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் , மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது .
இதை 22 - 07 - 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து , அதன்பின் , முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது .
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.
கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.
காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.
ஜெய்ஹிந்த்
நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .
அப்படியே ஓட்டும் போட்டுவிட்டு போங்க
திப்பு சுல்தான் !!!
Posted by
பனித்துளி நினைவுகள்
on Sunday, October 4, 2009
Labels:
இந்தியா,
உலகம்,
சங்கர் கவிதை,
போர்க்களம்,
மன்னர்கள்,
வரலாற்று குறிப்புகள்
/
Comments: (0)