>
Showing posts with label உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.. Show all posts

பில்கேட்ஸ்... !!!!

>> Sunday, August 23, 2009

வெற்றியாளர்களில் இரண்டு வகை...

உலகின் எதிர்காலப் பாதையைச் சரியாகக் கணித்து, அந்தத் திசையில் எல்லோரையும்விட வேகமாக ஓடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் ஒரு வகை... அப்படி இல்லாமல் தானே ஒரு திசையைத் தீர்மானித்து, ஒட்டுமொத்த உலகத்தையும் அந்தத் திசையில் தன் பின்னால் ஓடிவரச் செய்பவர்கள் இரண்டாவது வகை...

பில்கேட்ஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்।'உழைக்க மட்டுமல்ல... உழைப்பை விட்டு விலகியும் இருக்கத் தெரிய-வேண்டும்...' - இதுதான் பில்கேட்ஸ் நமக்கு உணர்த்தியிருக்கும் சமீபத்திய பாடம். அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஒரு பொருள் இருக்கிறது. ஒரு எம்.பி.ஏ. பாடத் திட்டத்துக்கு நிகரான வாழ்க்கைமுறை அவருடையது.

பள்ளிக்கூட காலத்திலேயே பில்கேட்ஸ் 'பாட'த்தைத் தொடங்கிவிட்டார்। கொடுக்கிற பாடத் திட்டத்தைப் படிப்பதைவிட விருப்பமானதைப் படிப்பதுதான் சிறந்தது என்பதை நம்பினார்। மற்ற மாணவர்களிடமிருந்து வேறுபட்டு, படிப்பில் ஆர்வமில்லாமல் இருந்த பில்கேட்ஸை, சியாட்டில் நகரின் 'லேக்சைட் (Lake Side) பள்ளி'யில் அவருடைய பெற்றோர் சேர்த்தனர். அங்கே பில்கேட்ஸை ஈர்த்தது ராட்சத சைஸில் பூதம் போல இருந்த கம்ப்யூட்டர்.

அந்தக் காலத்தில் கம்ப்யூட்டரை விஞ்ஞானக் கூடங்களில் மட்டுமே பயன்படுத்தினார்கள். இரவு பகலாக அதன் முன் தவமாகக் கிடந்த பில்கேட்ஸ், தானாகவே புத்தகங்களையும், கையேடுகளையும் படித்து கம்ப்யூட்டர் மொழியான 'பேசிக்'கில் (BASIC) புரோகிராம் எழுதத் தொடங்கினார். அவருடைய பள்ளித் தோழர் பால் அலெனுக்கும் அதே ஆர்வம். திடீரென்று ஒருநாள், 'இனிமேல் மாணவர்கள் கம்ப்யூட்டரை இலவசமாகப் பயன்படுத்த முடியாது' என்ற அறிவிப்பு வந்தது. இருவரும் கவலைப்பட்டனர்.அந்தக் காலகட்டத்தில் கம்ப்யூட்டரை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தும் பழக்கம் அதிகமாக இருந்தது। 'அந்த கம்ப்யூட்டரில் ஏதாவது குறைபாடு இருந்தால் வாடகை கொடுக்கத் தேவையில்லை' என்று வாடகைக்குக் கொடுக்கும் நிறுவனங்கள் அறிவித்திருந்தன. குறைபாடுகள் அதிகம் இருக்கவும் செய்தன.

பில்கேட்ஸ் நினைத்திருந்தால் வாடகைக்கு கம்ப்யூட்டர் எடுத்து, அதில் உள்ள குறைபாடுகளைச் சொல்லி, வாடகை கட்டாமல் பயன்படுத்தியிருக்க முடியும்। ஆனால், அவர் கம்ப்யூட்டர் வாடகைக்குத் தரும் நிறுவனங்களில் ஒன்றான 'கம்ப்யூட்டர் சென்டர் கார்ப்பரேஷனு'க்குச் சென்று அவர்கள் கம்ப்யூட்டரில் உள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்துத் தருவதாக ஒப்பந்தம் செய்துகொண்டார். அதனால், அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட்டு, அவர்களுக்கு வாடகைப் பணம் பெருகியது. பில்கேட்ஸ் சம்பளமாகப் பெற்றுக்கொண்டது இலவசமாக கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் உரிமையை!

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்துவதைவிட, புதிய திசையில் வாய்ப்பை உருவாக்கிக்கொள்ளும் கலை அவரிடம் நிறையவே இருந்தது। வாகனப் போக்குவரத்து
விவரத்தை கம்ப்யூட்டரில் உள்ளிடும் 'டேட்டா என்ட்ரி' வேலை 17 வயது பள்ளி மாணவன் பில்கேட்ஸூக்குக் கிடைத்தது. ஒவ்வொரு வாகனமும் கடந்து செல்லும்போது காகிதச் சுருளில் ஒரு துளை போடப்படும். அந்தத் துளைகளை எண்ணி கம்ப்யூட்டரில் என்டர் செய்வதுதான் வேலை.

துளைகளை எண்ணிச் சொல்வதற்கு சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து, 'டிராஃப்- ஓ -டேட்டா' (Traf-O-Data) என்று பெயரிட்ட பில்கேட்ஸூக்கு, இந்தத் தொழிலில் நல்ல லாபம்! போக்குவரத்து விவரங்களை அலசி அதை நெறிப்படுத்துவதற்காக பல நகராட்சிகள் அந்தக் கருவியை நாடியபோது, 'இனிமேல் நாங்களே அந்த வேலையை நகராட்சிகளுக்குச் செய்துதருவோம்' என்று அமெ-ரிக்க மத்திய அரசு அறிவித்துவிட்டது. பில்கேட்ஸின் பிஸினஸ் படுத்துவிட்டது.

இந்தச் சமயத்தில் அவர் ஹார்வர்ட் கல்லூரியில் இணைந்தார்। அதற்குப் பக்கத்திலேயே பால் அலெனுக்கு ஒரு வேலை கிடைத்தது. இருவரும் அடிக்கடி சந்தித்தனர். 1975 ஜனவரி மாதம் 'பாப்புலர் எலெக்ட்ரானிக்ஸ்' இதழில் 'உலகின் முதல் மைக்ரோ கம்ப்யூட்டர் அல்டெய்ர் 8800' என்று வந்த கட்டுரையை எடுத்துக்கொண்டு பில்கேட்ஸிடம் ஓடிவந்தார் அலென். அதைத் தயாரித்த எம்.ஐ.டி.எஸ். (MITS) நிறுவனத்தைத் தொடர்புகொண்ட கேட்ஸூம் அலெனும், 'உங்கள் கம்ப்யூட்டரில் பேசிக் புரோகிராம் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும். அதைச் செயல்படுத்த உதவும் பேசிக் இன்டர்பிரட்டர் (புரோகிராமை கம்ப்யூட்டர் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றித்தரும் இடைநிலை சாஃப்ட்வேர்) எங்களிடம் இருக்கிறது' என்று அள்ளிவிட்டனர்.

உண்மையில் அவர்களிடம் 'அல்டெய்ர்' ரக கம்ப்யூட்டர் ஒன்றுகூட கிடையாது.

'எம்.ஐ.டி.எஸ்-ஸின் ஹார்ட்வேர், தனது சாஃப்ட்வேர் இரண்டும் சேர்ந்து முழுமையான கம்ப்யூட்டராக இயங்கும்' என்ற ஒப்பந்தம் போட்டார் பில்கேட்ஸ். இனி இங்
கு என்ன வேலை என்று ஹார்வர்டில் இருந்து வெளியேறினார். 1975 ஏப்ரலில் 'மைக்ரோசாஃப்ட்' நிறுவனம் உருவானது.இனி எதிர்காலம் மைக்ரோ கம்ப்யூட்டருக்குத்-தான் என்பதை உணர்ந்த பில்கேட்ஸ், தன்னுடைய சாஃப்ட்வேர் உரிமையை கம்ப்யூட்டர் தயாரிக்கும் பிற நிறுவனங்களுக்கும் விற்பனை செய்தார்।

இதில் எம்.ஐ.டி.எஸ். அதிருப்தி அடைந்ததைப் பற்றியோ, கோர்ட்டுக்கு இழுத்ததைப் பற்றியோ கவலைப்படவில்லை. வெறும் 'பேசிக்' புரோகிராமோடு நிற்காமல் 'ஃபோர்ட்ரான்', 'கோபால்' ஆகிய மொழிகளுக்கும் இன்டர்பிரட்டர் உருவாக்கினார்.

அவற்றை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களிடமே கொடுத்து கம்ப்யூட்டரோடு பொட்டலம் கட்டி விற்கும்படி ஒப்பந்தம் போட்டார். பில்கேட்ஸின் சாஃப்ட்வேர் இல்லாமல் கம்ப்-யூட்டர் முழுமையடையாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்.மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ।பி।எம்। மைக்ரோசாஃப்ட் நிறுவனக் கதவுகளைத் தட்டியதுதான் பில்கேட்ஸின் வாழ்வில் திருப்பு-முனை! அப்படியரு சூழ்நிலையைக் கையாள்-வது எப்படி என்ற பாடத்திட்டம் உருவானது.

குட்டி கம்பெனிகள் மைக்ரோ கம்ப்யூட்டர் தயாரிக்கும்போது, தான் பின் தங்கிவிடக்கூடாது என்று தாமதமாக விழித்துக்கொண்ட ஐ।பி।எம்., நெருக்கடியான காலக்கெடுவோடு பில்கேட்ஸிடம் வந்தது.

அந்தக் காலக்கெடுவுக்குள் ஹார்ட்வேரை உருவாக்குவது சிரமமில்லை. ஆனால், அதைச் செயல்பட வைக்கும் சாஃப்ட்வேர்... அந்த சாஃப்ட்-வேரை ஹார்ட்வேருக்குப் புரியவைக்கும் ஆப-ரேட்டிங் சிஸ்டம்...

இதையெல்லாம் உருவாக்குவது அத்தனை எளிதில்லை.

சாஃப்ட்வேருக்கு ஓகே சொன்ன மைக்ரோசாஃப்ட், இன்னொரு நிறுவனத்தின் ஆபரேட்டிங் சிஸ்டத்தைப் பயன்படுத்திக்கொள்ள சிபாரிசு செய்தது। ஆனால், அந்த இன்னொரு நிறுவனத்-துடன் ஐ।பி.எம்மால் உடன்பட முடியவில்லை. பந்து திரும்பவும் பில்கேட்ஸ் கோர்ட்டுக்கே வந்தது.

இந்தமுறை “சரி” என்றார் கேட்ஸ்। அதுதான் அவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கிய வார்த்தை!

இத்தனை குறுகிய காலத்தில் 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை புதிதாக உருவாக்க முடியாது என்பது பில்கேட்ஸூக்கு தெரியும்। 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' (SCP) என்ற நிறுவனம் உருவாக்கியிருந்த 'க்யூடாஸ்' (QDOS) என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை, வெறும் இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற விலைக்கு வாங்கி-னார்। அதில் மராமத்து வேலைகள் செய்து,

தன்னுடைய கைவண்ணத்தைக் கொஞ்சம் காட்டி 'டிஸ்க் ஆபரேட்டிங் சிஸ்டம்' (ஞிளிஷி) என்ற பெயரில் ஐ।பி.எம். கம்ப்யூட்டரோடு சேர்ந்து உலகமெங்கும் பரப்பினார். 'பர்சனல் கம்ப்யூட்டர் புரட்சி' என்று சொல்லும் நிகழ்வாக இது 1981-ல் அமைந்தது. தன் தயாரிப்புதான் பவுடர் பூசி 'ஐ.பி.எம்'- கம்ப்யூட்டரோடு சக்கைபோடு போடுகிறது என்று 'சியாட்டல் கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்' நிறுவனம் குய்யோ, முறையோ என்று கூவியபோது, பில்கேட்ஸ் பணத்தால் அடித்து, அந்த நிறுவனத்தின் வாயை அடைத்தார்.

உன்னால் ஒரு செயல் முடியாதபோது, யாரால் முடியுமோ அவரை உன்னுடையதாக்கு என்ற தத்துவம் அவருக்குக் கைவந்ததானது!

ஐ।பி।எம். நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தில் இருந்த சாமர்த்தியம்தான் பில்கேட்ஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த முக்கியமான பாடம்.

என்னதான் 'ஐ।பி.எம்.' நிறுவனம் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் பாகங்களை உருவாக்கியிருந்தாலும், மற்ற யார் வேண்டுமானாலும் அதை காப்பியடிக்க முடியும். ஆனால், அதில் இயங்கும் சாஃப்ட்வேர் மைக்ரோசாஃப்டிடம் மட்டுமே இருந்தது. ஐ.பி.எம்-க்குப் போட்டியாக பல கம்பெனிகள் இறங்கியபோது அவை சாஃப்ட்வேருக்காக பில்கேட்ஸை நாடின. பிற நிறுவனங்களுக்கு விற்கக்-கூடாது என்று ஒப்பந்தம் போடாததால் 'ஐ.பி.எம்.' கையைப் பிசைந்துகொண்டு நிற்க, பில்கேட்ஸ் டாலர் மழையில் நனையத் தொடங்கினார். தூறல், மழையாகி, அதுவே அடைமழையாகக் கொட்டத் தொடங்கியது.

கீ போர்டு மூலம் மட்டுமே கட்டளைகளை உள்ளிடக்கூடிய 'டாஸ் சிஸ்ட'த்தில் 'மைக்ரோசாஃப்ட்' இருந்த நேரத்தில் 'மவுஸை' வைத்து திரையில் தெரியும் கட்டளைகளை 'க்ளிக்' செய்து செயல்படுத்தும் புதிய தளத்துக்குப் போயிருந்தது போட்டி நிறுவனமான 'ஆப்பிள்'. 1984-ல் அதன் 'மேகின்டாஷ்' கம்ப்யூட்டர் 'மவுஸ்' உடன் வெளிவந்தது.

'மேகின்டாஷ்' கம்ப்யூட்டரில் இயங்குவதற்கு ஏற்ப 'எம்.எஸ்.வேர்ட்'டை (MS word) மட்டும் உருவாக்கிக் கொடுத்தது.

ஆனால், அந்த முயற்சியின்போது மவுஸால் கம்ப்யூட்டரை இயக்கும் சிஸ்டத்தின் நுணுக்கங்களை காப்பியடித்து, அதை வைத்து 'விண்டோஸ்' என்ற 'ஆபரேட்டிங் சிஸ்ட'த்தை தயாரித்ததாக 'மைக்ரோசாஃப்ட்' மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதை நீதிமன்றம் உறுதிப்படுத்தவும் செய்தது. ஆனால், எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து நடைபோட்ட 'மைக்ரோசாஃப்ட்'டில் இருந்து, 1990-ல் 'விண்டோஸ்- 3।0' வெளியானது. அதைப் பிரபலப்படுத்த 'மைக்ரோசாஃப்ட்' தயாரித்து அளித்த 'எக்ஸெல்', 'வேர்ட்', 'பவர் பாயின்ட்' ஆகியவற்றை உள்ளடக்கிய 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' மென்பொருட்கள் பெரிதும் பயன்பட்டது. 'ஆப்பிள்' கம்ப்யூட்டரில் கூட 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' வெற்றிகரமாக இயங்கியது. 'விண்டோஸ்- 3.0' நல்ல வெற்றி. 1995-ல் வந்த 'விண்டோஸ் -95' அதை விடக் கூடுதல் வெற்றி. அதற்குள்ளாக அவர் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றிருந்தார். 'விண்டோஸி'ன் நதிமூலம் 'ஆப்பிள்'தான் என்பது மறந்தே போயிற்று.

இப்படி 'ஆபரேட்டிங் சிஸ்டம்' பந்தயத்தில் கவனம் செலுத்திய பில்கேட்ஸ், இணையப் புரட்சியைத் தவறவிட்டார்। இணையதளங்களை மேய்வதற்கு 'நெட்ஸ்கேப் நேவிகேட்டர்' என்ற உலாவி பிரபலமாக இருந்தது. சுமார் 85 சதவிகிதம் பேர் இந்த உலாவியைப் பயன்படுத்தியே இணையத்தில் உலாவினார்கள்.

அதனால் என்ன... பில்கேட்ஸ் கையில்தான் ஒரு வெற்றி ஃபார்முலா இருக்கிறதே... உருவாக்கத் தவறினால் உருவாக்கியவனை அழுத்து என்று!'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்' என்ற உலாவியைத் தயாரித்தார்। மக்கள் கவனத்தை இந்தப் பக்கம் திருப்ப அவர் எடுத்த ஆயுதம்... இலவசம்! 'விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்ட'த்தோடு 'இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை' இலவசமாகக் கொடுத்தார். விளைவைச் சொல்லவேண்டுமா... கொஞ்ச நாளில் 'நெட்ஸ்கேப்' பின்னுக்குத் தள்ளப்பட்டது.

'விண்டோஸ்' என்ற அரக்கனை வைத்துகொண்டு எல்லா சாஃப்ட்வேர் நிறுவனங்களையும் நசுக்குவதாக பில்கேட்ஸ் நீதிமன்றத்துக்கு இழுக்கப்பட்டார். மைக்ரோசாஃப்டின் சட்ட விரோத நடவடிக்கை நிரூபிக்கப்பட்டது. மைக்ரோசாஃப்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும். ஒன்று 'ஆபரேட்டிங் சிஸ்டம்' தயாரிக்க. மற்றது பிற சாஃப்ட்வேர்களைத் தயாரிக்க என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், சாஃப்ட்வேருக்கு முன்-னால் சட்டம் கொஞ்சம் பலவீனமாகத்-தான் பேசி-யது. பிறகு, அந்தத் தண்டனை வெகுவாகக் குறைக்கப்-பட்டது.

இன்றும் சாஃப்ட்வேர் கொடி உயரத்தான் பறக்கிறது... பில்கேட்ஸ் சொல்லும் தெளிவான பாடம் இதுதான்... 'உழைக்கத் தயங்காதே... ஒரு கட்டத்துக்கு மேல் போனபிறகு உண்மையாக உழைப்பவனுடைய உழைப்பை தனதாக்கிக் கொள்ளவும் தயங்காதே...' இதுதான் சக்சஸ் ஃபார்முலா! அதற்கு வாழும் உதாரணமாக இருக்-கிறார் பில்கேட்ஸ்!

2006-ல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முழுநேர தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார்। அதன்பின் 'சேர்மன்' என்ற அளவில் மற்றவர்களை வைத்து கம்பெனியை நடத்தி, மேற்பார்வை செலுத்திவந்த பில்கேட்ஸ், தற்போது முழுமையாக ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்। பல முனைகளிலும் இருந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சவாலைச் சந்திக்கும் நேரத்தில், இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார்। ஆனால், பில்கேட்ஸ் எனும் மனிதரும், அவர் உலக மக்கள் மீது ஏற்படுத்திய தாக்கமும் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தரமாகப் பொறிக்கப்பட்டிருக்கும், சாஃப்ட்வேர் சாம்ராஜ்ஜியத்தின் நிகரில்லாச் சக்கரவர்த்தி என்ற அடையாளத்தோடு

Read more...

ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம் !!!

தோல்வியே வெற்றிக்கு முதற்படி

அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதியும், ஜனநாயக தத்துவத்தின் தந்தையுமான ஆபிரகாம் லிங்கனின் நம்பமுடியாத தொடர் பயணம்
குடும்பத்தை காப்பாற்ற உழைக்க வேண்டிய கட்டாயம்
1816

அவர் தாய் மரணம்
1818

தொழிலில் தோல்வி
1831

சட்டசபைத் தேர்தலில் தோல்வி
1832

பணி பறிப்பு
1832

தன் நண்பர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த 17 வருட உழைப்பு
1833

மறுபடியும் தேர்தலில் தோல்வி
1834

திருமணம் நிச்சயம் - ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண் இறப்பு
1835

நரம்பு தளர்ச்சியில் 6 மாதம் மருத்துவமனையில் அனுமதி
1836

சபாநாயகர் தேர்தலில் தோல்வி
1838

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
1843

காங்கிரஸ் தேர்தலில் தோல்வி
1848

சட்ட அலுவலர் பணிக்கு நிராகரிப்பு
1849

செனட் தேர்தலில் தோல்வி
1854

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு 100 ஓட்டுக்கும் குறைபாக வாக்குச் சேகரிப்பு
1856

மூன்றாம் முறையாக செனட் தேர்தலில் தோல்வி அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு

1860

Read more...

எடிசனின் பள்ளி நாளில் நடந்தது !!!!

>> Saturday, August 22, 2009

ஒரு காலத்தில் சதானிகள் என்ற அரசன் ஆண்டு வந்தான். நல்லறம் செய்து சொர்க்கம் செல்ல விரும்பி, பல அறங்களைச் செய்து வந்தான்.

ஆனால், குடிமக்களை வரி என்ற பெயரில் கொஞ்சமும் அன்பு இன்றி துன்பப்படுத்தி வந்தான்.

அரசன் இறந்தான். நரகத்திற்கு போனான்.

ஒரு சமயம் பார்க்கவ முனிவர் நரகத்தைக் காணச் சென்றார். அங்கே அரசனை எம தூதர்கள் செக்கிலிட்டு ஆட்டிக் கொண்டு இருந்தார்கள்.

அதைக் கண்ட முனிவர், அரசனிடம் சென்று, எனக்குத் தெரிந்து எவ்வளவோ அறங்களையும், வேள்விகளையும் நீ செய்திருக்கிறாய், அப்படி நீ செய்த பாவம்தான் என்ன? ஏன் நரகத்திற்கு வந்துள்ளாய்…? என்று கேட்டார்.

தவ முனிவரே!

என்னிடம் அற உணர்வு இருந்ததே தவிர, அன்புணர்வு கொஞ்சமும் இல்லை. மக்களுக்கு வரி மேல் வரி போட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறேன். அதற்குத்தான் இந்தத் தண்டனை என்று தன் குற்றத்தை உணர்ந்து திருந்தி பேசினான்.

அன்பில்லாத அறத்தால் எப்பயனுமில்லை!

தாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…

பள்ளியில் - இரசாயனப் பாடத்தில் ஒரு செய்தியைப் படித்தார் எடிசன்.

அதாவது ஒரு குறிப்பிட்ட உப்பையும், ஒரு அமிலத்தையும் ரசாயன மாற்றத்திற்கு உட்படுத்தினால் அதிலிருந்து லேசா வாயுக்கள் வெளிப்படும் என்பே அச்செய்தி. மற்றொரு சமயம், லேசான வாயுக்கள் அடைக்கப்பட்ட பலூன்கள் ஆகாயத்தில் பறந்து செல்லும் என்ற தகவலையும் படித்தார்.

உடனே ஆராய்ந்து பரிசோதிக்கும் அவருடைய சிறிய மூளையில் ஒரு புதிய எண்ணம் உதயமாகியது. உடனே அதனைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார்.

தம்மோடு படித்த ஒரு சிறுவனைத் தோட்டத்துக்குக் கூட்டிக் கொண்டு அவர் பாடத்தில் படித்த அந்தக்குறிப்பிட்ட உப்பையும், அமிலத்தையும் கொடுத்தி விழுங்கச் சொன்னார் அவனும் அதுபோலவே செய்தான்.

சிறிது நேரம் சென்றது. அவன் எப்போது பறந்து செல்வான்? என்று பார்த்தவர், அப்படி ஏதும் நடக்காததால், மேலே பறந்து செல்வதுபோல் உனக்குத் தோன்றவில்லையா? என்று கேட்டார் எடிசன்.

அப்படி ஒன்றுமில்லையே! என்று சொன்ன அந்தச் சிறுவன் வாந்தி எடுத்தப்படியே மயங்கி கீழே விழுந்தான்.

உப்பும், அமிலமும் அச்சிறுவனின் வயிற்றுக்குள் போய் இரசாயன விளைவை உண்டாக்கி அதன் மூலம் லேசான வாயு உருவாகும். அப்போது அவன் பலூனைப் போல பறப்பான் என எதிர்பார்த்தார். ஆனால், பரிசோதனைக்கு ஆளான சிறுவன் பிழைப்பதே அரிதாகிவிட்டது. இதன் காரணமாக தன் பெற்றோரிடம் அடியும்,உதையும் வாங்கினார், எடிசன். இப்படி இளம் வயதிலேயே ஆராய்ச்சி எண்ணத்தோடு இருந்ததால்தான் பிற்காலத்தில் அவரால் ஆயிரக்கணக்கான புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது.

Read more...

எடிசனின் மரண நாற்காலி !!!

எடிசன்தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்.

எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு.

அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.வெஸ்டிங்ஹவுஸ்"பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள்.

ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா கொடுத்தார் எடிசன். அதற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார்.

இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.

ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும்.

அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

Read more...

எடிச‌னின் ம‌ர‌ண‌ நாற்காலி !!!

தாமஸ் ஆல்வா எடிசன் புகழ் பெற்ற விஞ்ஞானி என அறிவோம். அவர் சிறந்த வணிகர் என்பது பலருக்கும் தெரியாது. வணிகராக எடிசன் செய்த சில கோல்மால்கள் (அல்லது ராஜதந்திரம்) சிரிப்பை வரவழைப்பவை. அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு.

எடிசன் மின்சாரத்தை மேம்படுத்தி டிசி (Direct Current) என்ற வகை மின்சாரத்தை உருவாக்கி அதை சந்தைப்படுத்த முயன்றுகொண்டிருந்தார். எடிசனுக்கு போட்டியாக வெஸ்டிங்ஹவுஸ் என்ற விஞ்ஞானி மற்றும் வணிகர் ஏசி (Alternate Current) என்ற மின்சாரத்தை உருவாக்கினார். தனது லாபில் இருவகை மின்சாரத்தையும் சோதித்த எடிசனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெஸ்டிங்ஹவுசின் மின்சாரம் எடிசனின் மின்சாரத்தை விட சக்தி வாய்ந்தது என்பதே முடிவு. அந்த மின்சாரத்துக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த அதையே பயன்படுத்த முடிவு செய்தார் எடிசன்.

பத்திரிக்கையாளரை கூப்பிட்டு அவர்கள் முன் ஒரு இரும்பு நாற்காலியை போட்டார் எடிசன். அதில் ஒரு பூனையை உட்கார வைத்து கட்டினார். அப்புறம் அந்த நாற்காலியில் தனது டிசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை 10-20 நிமிடம் துடிதுடித்து செத்தது. அப்புறம் மீண்டும் ஒரு பூனையை உட்கார வைத்து வெஸ்டிங்ஹவுஸின் ஏசி மின்சாரத்தை பாய்ச்சினார். பூனை இரண்டு வினாடிகளில் செத்துவிட்டது.

வெஸ்டிங்ஹவுஸ்
"பார்த்தீர்களா? எனது மின்சாரம் பட்டால் உடனடியாக சாகமாட்டார்கள். பிழைத்துவிடுவார்கள். ஆனால் வெஸ்டிங்ஹவுஸின் மின்சாரம் உடலில் பட்டால் உடனடி மரணம்தான். எனவே எனது மின்சாரமே பாதுகாப்பானது" என பிரச்சாரம் செய்தார் எடிசன். செய்தி காட்டுத்தீ போல் பரவியது.
அப்புறம் எடிசனின் மூளையில் இன்னொரு ஐடியா வந்தது. அப்போதெல்லாம் கொடும் குற்றவாளிகளை கில்லட்டின் வைத்து தலையை வெட்டிக்கொன்று கொண்டிருந்தார்கள். அதற்கு பதில், தான் தயாரித்த மின்சார நாற்காலியில் வெஸ்டிங்ஹவுசின் மின்சாரத்தை ஏற்றி அவர்களை கொல்லலாம் என ஐடியா கொடுத்தார் எடிசன். அத‌ற்கேற்றாற்போல் மின்சார நாற்காலிகளை தயாரித்து அரசிடம் விற்றும் விட்டார். இதனால் வெஸ்டிங்ஹவுசின் ஏசி மின்சாரத்துக்கு அப்போதெல்லாம் பயங்கர கெட்ட பெயர் உண்டாகிவிட்டது. மின்சார நாற்காலியில் உட்கார வைத்து கொல்வதை அப்போதெல்லாம் Westinghoused என அழைப்பார்கள்.

ஆனால் மின்சார நாற்காலியில் மரணம் என்பது வலியற்ற மரணம் கிடையாது. முதலில் 2000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி அதிர்ச்சி கொடுப்பார்கள். சுயநினைவு தப்பியவுடன் 5000 வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்தி உடலின் உள்பாகங்களை எரிப்பார்கள். அப்போது கண்விழி வெளியே வந்து விழுவதெல்லாம் உண்டு. அப்போது சுயநினைவு இருக்கிறதா இல்லையா என்பது அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்களுக்குதான் தெரியும். அதனால் இப்போதெல்லாம் விஷ ஊசி போட்டு அமெரிக்காவில் மரண தண்டனையை நிறைவேற்றுகிறார்கள்.

Read more...

படிக்காத மேதை! பட்டம் பெறாத மேதை!

'எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ' என்று ஒருவர் கேட்டதும், 'படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உணர்வு 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Pespiration] ' என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Centre] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப் பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கிய மானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவ்ி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான 'ஓம்ஸ் நியதி ' [Ohm 's Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கையளவு! கண்டு பிடித்தது பனையளவு!

'நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ' என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். 'நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ' என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளக் [Fort Gratiot Military Post] கார்பென்ட்டராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். 'மூளைக் கோளாறு உள்ளவன் ' என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! 'எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ' என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடாரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய 'இயற்கைச் சோதனை வேதம் ' [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய 'கோட்பாடு ' [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த 'மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ' [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் 'இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ' [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் அகிலப் பதிப்பி ' [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று 'கரி அனுப்பி ' [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] 'ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ' என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல் ' [Sun 's Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி 'நுண்ணுனர் மானி ' [Microtasi meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Eletric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் 'விளக்கொளி மின்சார அமைப்பு ' [Incadescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் 'ஹிந்த் & கெட்சம் ' [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக 'மத்திய மின்சார ஏற்பாடு ' [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு 'எடிசன் விளைவு ' [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் 'எதிர்த்துகள் ' [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் 'எதிர்த்துகள் குமிழி ' [Electron Tube] தோன்ற வழி வகுத்து 'மின்னியல் தொழிற் துறைக்கு ' [Electronics Industry] அடிகோலியது.

மூவிக் காமிராக் [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: 'கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் 'நகரும் படம் ' [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் 'பேசும் படம் ' [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ' இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

'ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ', என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். 'கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ' என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: 'கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ' 'ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ' என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்கு களை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு 'விடுதலை விக்கிரகத்தின் ' [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

Read more...

உலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்.

>> Saturday, August 8, 2009

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.

Read more...

தரம்

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP