>

Archives

பனித்துளியாய் சில நினைவுகள் !!!

>> Saturday, June 27, 2009

கரையும் கண்களுக்கு
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்
என்
விழிகளில் நீ.

Read more...

காதலியின் நினைவில் !!!

பாசம்
என்று
நினைத்துதான் பழகினேன்
பிறகுதான் தெரிந்தது
- நீ
என் சுவாசம் என்று.

Read more...

ஜோக்ஸ்Read more...

சினி சிப்ஸ் !!!

தமிழ் சினிமா பற்றிய ருசிகர தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் உதிரிப் பூக்கள்.

* நடிகை லட்சுமி மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

* இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் திரைப்படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை.

* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் கரங்கள். அவரது 100வது திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் வளையாபதி.

* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் சக்சஸ்... வெற்றி.

* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் கல்லுக்குள் ஈரம்.

* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் பணம் பத்தும் செய்யும்.

* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.

* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர்.

* நடிகை சவுகார்ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. இந்த படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார்.

* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.

* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.

* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் ஏழை படும் பாடு.

Read more...

ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்."

****

நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.

****

போன் வந்தால் மணிக்கணக்காகப் பேசும் வழக்கம் கொண்டவர் ஜோன்ஸின் மனைவி. அவர் அன்று பத்து நிமிடத்தில் பேசிவிட்டு போனை வைத்துவிட, ஜோன்ஸ் ஆச்சரியமாகக் கேட்கிறார். "என்ன சீக்கிரம் போனை வைத்துவிட்டாய்?""ஆமா.. வேற என்ன பண்றது, ராங் நம்பர் வந்தா!." என அலுத்துகொண்டார் அவர் மனைவி.

****

ஜோக்கர் ஜோன்ஸ் ஒரு கிளினிக்கில் டாக்டரின் அறை முன்னால் அமர்ந்திருக்கிறார். அருகே ஒரு நபர் அழுதுகொண்டிருக்கிறார்.

ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?

நபர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.

ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.

நபர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..

****

ரயில் டிக்கெட் பரிசோதகர் ஜோன்ஸைப் பார்த்தது கேட்கிறார், "டிக்கெட் ப்ளீஸ்!"

ஜோன்ஸ் : (பாக்கெட்டிலும் பேக்கிலும் தடவிப்பார்த்துவிட்டு) ஐயோ.. டிக்கெட்டை எங்க வச்சேன்னு தெரியலையே!

பரிசோதகர் : பரவாயில்லை..உங்களைப் பார்த்தா நல்ல மனுசனாத் தெரியுது. கண்டிப்பா நீங்க எடுத்துருப்பீங்க. நான் அடுத்த ஆளப் பார்க்கிறேன்.(சிறிது நேரம் கழித்து பரிசோதகர் திரும்பி வர, இன்னமும் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்.)

பரிசோதகர் : இன்னுமா தேடுகிறீர்கள்? நான் தான் காண்பிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டேனே!

ஜோன்ஸ் : அடப்போய்யா நீ வேற! டிக்கெட் இருந்தாத்தானே நான் எந்த ஊருல எறங்குறதுன்னு தெரியும்.
Read more...

பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் !!!

>> Friday, June 26, 2009

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன.

அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன.

கருத்து எந்தவித அரசியல் சார்புமற்ற ஓர் அமைப்பு. கருத்து என்கிற ஒரு அமைப்புக்கு ப்ரத்யேகமாக எந்த கருத்தும் கிடையாது. இது எல்லாவித கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான களம் மட்டுமே. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளை இந்த அமைப்பு வரவேற்கிறது. கருத்தை பொறுத்தவரை மீள்பார்வைக்கும் புதிய மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் என்று எதுவுமில்லை. தீண்டக்கூடாத, தீண்ட முடியாத திருவுருக்கள் என்று எதுவும் கிடையாது. மதம், நம்பிக்கை, பாரம்பரியம், அரசியல், தத்துவம், நாம் நம்பும் சரித்திரம், சமூக அமைப்பு என்று எதை பற்றிய விவாதங்களுக்கும் இங்கு இடமுன்டு. கருத்து அமைப்பில் தலைவர்கள் கிடையாது. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இதன் உறுப்பினர்கள். எதிர்வினைகள், விமர்சனங்கள் ஆகியவை

சொல்லப்படும் கருத்துகளைப் பற்றியவையாக மட்டுமே இருக்க வேன்டும். சொல்பவரைப் பற்றிய விமர்சனங்களாக மாறக் கூடாது.

சமீபகாலங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை கலைகள், படைப்பிலக்கியம், சமூக கருத்துக்கள் ஆகியவற்றின் மீது சிலர் செலுத்த முயலும் ஆதிக்கம் கவலையையும் மிரட்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

முதலில் படைப்பாளிகள் எதை எழுத வேன்டும், எப்படி அதை கையாள வேன்டும் என்பதைப் பற்றிய தடைகள் தலைதூக்கின. பிறகு மொழி, பண்பாடு, இனம், என்ற அரண்களை உருவாக்கி அதனுள் கலைஞர்களை முடக்கி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகள் இப்போது சமூகத்தின் அத்தனை கூறுகளையும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. சொல்லப்படும் ஒரு கருத்திற்கு எதிர்வினையைக் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் நாகரிகத்தையும் பல நேரங்களில் நாம் தொலைத்து விடுகிறோம்.

நமது பண்பாடு, சமூக ஒழுக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொதுமைப்படுத்தும் முயற்சியில் அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவை முனைந்து ஈடுபட்டுள்ளன. இந்தப் பொதுமைப்படுத்தலையே பெரும்பான்மை கருத்தாக மாற்றும் அபாயம் அதிகரித்து வருகிறது. பெரும்பான்மை சிறுபான்மையின் உரிமையை நசுக்கும், பாசிசவாதத்தின் வாயிலுக்குள் நுழையத் தொடங்கியிருக்கிறோம். பெரும்பான்மை மதிப்பீடுகளுக்கு மாறுபட்டு ஒலிக்கும் குரல்கள் குரூரமாய் நெரிக்கபடுகின்றன.

வழமையான பார்வைகளுக்கு மருந்தாய் வைக்கப்படும் புதிய கருத்துகளும், படைப்புகளும், தங்களை இந்தச் சமூகத்தின் ஒழுக்க காவலர்களாய் சுயமாக விரித்துக் கொண்ட சிலரால் வன்முறை தோய்ந்த வக்கிரத்தோடு எதிர்க்கபடுகின்றன. இந்த வன்முறையாளர்களின் பிடியில் அதிகமாகச் சிக்கிச் சிதைவது, இளைய தலைமுறையினர், பெண்கள், மற்றும் படைப்பாளிகள். இவை மூன்றும் ஒடுக்கப்படும் எந்த ஒரு சமூகமும் ஆரோக்கியமாகச் செயல்படுவது என்பது இயலாதது. இதை எதிர்த்து 'கருத்து' என்கிற இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து மற்றும் கருத்துச் சுந்திரத்தைப் பாதுகாப்பதும் அதன் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் தான் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

கருத்துக்கள், அவை அடிப்படைவாதமாக இருக்கலாம், பழமைவாதமாக இருக்கலாம், அல்லது புதுமை நோக்கிய குரலாக இருக்கலாம். இவை எல்லாவற்றிற்க்கும் சமூகத்தில் இடம் உண்டு என்பதுதான் இவ்வமைப்பின் அடிப்படை. இதை நோக்கிய ஒரு விழிப்புணர்வுக் குரலாக, இயக்கமாக 'கருத்து' செயல்படும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டிராத எல்லாக் கருத்துக்களுக்கும் இதில் இடம் உண்டு.

Read more...

Read more...

ஜோக்ஸ் !!!

>> Thursday, June 25, 2009

அறிமுகம் :

மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்... அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!!***ஒரு ஆங்கிலேயன், ஒரு அமெரிக்கன், நம்ம ஜோன்ஸ், மூவரும் ஒரு பொய் சொல்லுவதைக் கண்டுபிடிக்கும் கருவியைச் சோதனை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். மூவரும் பொய் சொல்லவேண்டும். அதற்கேற்றாற்போல அந்தக் கருவி அலறும்.ஆங்கிலேயன் : நான் நினைக்கிறேன்... என்னால் ஒரே நேரத்தில் 20 பாட்டில் பீர் குடிக்க முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.ஆங்கிலேயன் : சரி, என்னால் ஒரே நேரத்தில் 8 பாட்டில் பீர் குடிக்க முடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.

அமெரிக்கன் : நான் நினைக்கிறேன், என்னால் ஒரே நேரத்தில் 15 பீட்சா சாப்பிட முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.அமெரிக்கன் : சரி... என்னால் ஒரே நேரத்தில் 3 பீட்சா சாப்பிடமுடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.ஜோன்ஸ் : நான் நினைக்கிறது என்னன்னா... "கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.***

நண்பர் : வாங்க ஜோ.. நாம் செஸ் விளையாடலாம்.ஜோன்ஸ் : எனக்கு அது விளையாடத் தெரியாதே.. நல்லா இருக்குமா?நண்பர் : ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.ஜோன்ஸ் : அப்போ கொஞ்சம் பொறுங்க... நான் என்னோட ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்திடறேன்.***ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.***ஜோன்ஸ் புதிதாக ஒரு வேலையில் சேருகிறார். முதல் நாள் வேலை நேரம் முடிந்த பின்னும் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

மேனேஜர் : (ஆச்சரியத்துடன்) அட! இன்னுமா வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். வெரி குட்!

ஜோன்ஸ் : தேங்க் யூ சார். வேற ஒன்னுமில்லை. இந்த கம்ப்யூட்டர் கீபோர்டில் ஏ, பி, சி, டி எழுத்துக்கள் எல்லாம் கரெக்டான வரிசையில் இல்லை. அதான் திரும்ப புடுங்கி அல்ஃபபெட்டிகல் ஆர்டர் படி மாட்டிக்கிட்டு இருக்கேன்.

***நம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.நண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.

Read more...

தென்னாலிராமன் கதை !!!

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

Read more...

காதலர் தின உடையின் நிறங்கள் !!!

சிகப்பு - காதல் தோல்வி
பச்சை - காதலுக்காக எதிர்பார்த்தல்
மஞ்சள் - காதலித்தல்
வெள்ளை - காதலில் நாட்டம் இல்லை
நீலம் - இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்
கருப்பு - கடலை போடுவதற்கு மட்டும்

Read more...

பிடித்த பொன்மொழிகள் !!!

* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

Read more...

உலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் ?
உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் “டிராவலர்ஸ் டைஜஸ்ட்” இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன்.
ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.
ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், “பழகுதற்கு” இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம்.
அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் பகுதியிலுள்ள பெண்களே 3 முதல் 8 வரையிலான இடத்தை இட்டு நிரப்புகிறார்கள்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒட்டுமொத்த அமெரிக்காவில் உள்ள அழகான பெண்களை விட அதிகமான அழகிகள் இருக்கின்றனர் என கூறி அந்தப் பத்திரிகை அமெரிக்கப் பெண்களின் எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த பட்டியலில் மூலையிலும் இடம் பிடிக்கவில்லை. நெதர்லாண்டில் சைக்கிளோட்டும் பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் சைக்கிள் ஓட்டி ஓட்டி நல்ல உடலமைப்பைப் பெற்றது தானாம்.
பல்கேரியாவிலுள்ள பெர்னா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிசுலாவின் கராகஸ் கனடாவின் மாண்டிரியல் இஸ்ரேலின் டெல் அவிவ் என எல்லா நாடுகளிலும் வலம் வரும் அழகிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நாட்டில் இந்திய நாட்டைக் காணவே காணோம்.
அட ! என்னப்பா எத்தனை உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகளைப் பிரசவித்த நாடு இது. மேட்டர் கேள்விப்பட்டா நமீதா ரசிகர்கள் வேற கொதிச்சுப் போயிடுவாங்களே.

Read more...

கால வித்தியாசம் !!!

இன்றைய கவிதை (கேள் மனமே கேள்) !!!

ஓடை நீரில் மீன்கள் பின்னால்ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்கோடை மணலில் கால்கள் வெந்துகுழைந்து போனதும் ஒரு காலம்

ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளேஇதயம் கரைந்தது ஒரு காலம்பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒருபுத்தகமானதும் ஒரு காலம்

சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்துள்ளித் திரிந்தது ஒரு காலம்எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்எட்டித் தள்ளுவ தொருகாலம்

ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளேஅழைத்துக் கொண்டதும் ஒரு காலம்

பண்ந்தான் உந்தன் எஜமான் என்றுபதறித் திரிந்தது ஒரு காலம்பணந்தான் உந்தன் சேவகன் என்றுபாடங் கண்டதும் ஒரு காலம்

அதுவோ இதுவோ எதுவோ என்றேஆசை வளர்த்ததும் ஒரு காலம்இதற்குத் தான இவ்வள வென்றேஇடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்

காதல் இன்றேல் சாதல் என்றேகவிதை சொன்னதும் ஒரு காலம்காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்கண்டு தெளிந்ததும் ஒரு காலம்

சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்மில்லிகிராமில் உணவை அளந்துமென்று முடிப்பதும் ஒரு காலம்

தன்னை வெல்ல ஆளில்லை என்றேதருக்கித் திரிவதும் ஒரு காலம்சின்னக் குழயில் காற்றைச் செலுத்திஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்

பூமி தனக்கே சொந்தம் என்றுபுலம்பித் திரிவதும் ஒரு காலம்பூமிக்கே நீ சொந்தம் என்றுபுரிந்து தெளிவதும் ஒரு காலம்

Read more...

சுஜாதா ரசித்த கவிதை

வரவேற்பாளர் !!!ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம் உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே பாதி கண்கள்
என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழ வேண்டும்
என்று கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண் வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய் ??????

Read more...

40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் !!!இது குறித்து பல்கலையின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள தாவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி ஆய்வு செய்ததில், இங்கு "சைலோட்டம் நூடம்' எனும் அரிய வகை தாவரம் இருந்தது. இந்த அரிய வகை தாவரம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய முதல் சாற்றுக் குழாய்களைக் கொண்ட ஒரு தாவரம். "சைலோட்டாசியே' என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரம், "சைலோப்பிசைடா' என்ற கூட்டமைப்பில் காணப்படுகிறது. இதன் கிளைகள், இரு வேறு கிளைகளாகப் பிரிந்து காணப்படுவதும், வித்துக்களை உண்டாக்கும் தன்மை கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து காணப்படுவதும் இந்த தாவரத்தின் சிறப்பு தன்மைகள். இதற்கு வேர்கள் இல்லை,வேர்களுக்குப் பதிலாக, இரு கிளைகளாகப் பிரியும் மட்ட நிலத்தண்டு மட்டுமே உண்டு. இலைகள் சிறியவை. வித்துக்களை உருவாக்கும் பகுதிகள், தாவரத்தின் தண்டின் நுனி அல்லது பக்கவாட்டில் நேரடியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த அரிய வகை தாவரயினத்தை அழிவில் இருந்து பாதுகாக்க ஆய்வு செய்து வருகிறோம் என்று பேராசிரியர் ராமச்சந்திரன் கூறினார்.

கோவை : பூமியில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேர்கள் இல்லாத அரிய வகை தாவரம், பாரதியார் பல்கலை வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள தாவர வகைகளை கணக்கு எடுக்கும் பணி துவங்கியது. கணக்கு எடுப்பதோடு, அதன் வரலாறு, தனித்துவம் குறித்தும் பல்கலையின் தாவரவியல் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வில், "சைலோட்டம் நூடம்' எனும் அரிய தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டது.

Read more...

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!!

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.நடிகர்கள் தொழில்ஜெமினி கணேசன் - போட்டோ உதவி பேராசிரியர்

ஸ்ரீகாந்த் - அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி

ஏவி.மெய்யப்பன் - சைக்கிள் கடை

வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர்

ஆனந்தராஜ் - சாராய வியாபாரம்

சிவகுமார் -
ஓவியர்

ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ் -
காய்கறி வியாபாரம்

நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

பாண்டியன் - வளையல் கடை

விஜயகாந்த் -
அரிசி கடை

ராஜேஷ் - பள்ளி ஆசிரியர்

ஆர்.சுந்தர்ராஜன் - பேக்கரி

பாக்யராஜ் - ஜவுளிக்கடை

அஜீத்குமார் - டூ வீலர் மெக்கானிக்

ரகுவரன் - உணவு விடுதி

பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்

டெல்லி கணேஷ் - ராணுவ வீரர்

மேஜர் சுந்தர்ராஜன் - கணக்காளர்

பாலச்சந்தர் - கணக்காளர்

விசு - டி.வி.எஸ். நிறுவன பணியாளர்

தலைவாசல் விசை -
ஓட்டல் பணியாளர்மோகன் - வங்கி ஊழியர்

ராஜீவ் - ஓட்டல் கேட்டரிங்

எஸ்.வி.சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

தியாகராஜன் - இசைத்தட்டு விநியோக பிரதிநிதி

பாண்டியராஜன் - எல்லா தொழிலும் செய்துள்ளார்

கவிஞர் வைரமுத்து - மொழி பெயர்ப்பாளர்

சேரன் - சிம்சன் நிறுவன தொழிலாளி

சரத்குமார் - பத்திரிகை அலுவலக நிர்வாகி

நடிகைகள்

நடிகைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் விளம்பர பட நடிகையாகவும், மாடலிங்கிலும், ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாகவும்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே வாய்ப்பு கிடைத்ததால் கலையுலக சேவை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.

என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் சார்பாக ஓட்டை குத்திவிட்டு செல்லவும்.
Read more...

கவிதைகள் !!!

>> Wednesday, June 24, 2009

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!

உலகை வெல்வோம் !

மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !

வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !

ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !

முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !

மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !

தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !

தொட்ட உயரமே
கடைசியில்லை !

எழுந்து வா . . .

உலகை வெல்வோம் !

அன்னையே மன்னித்து விடு ! - அன்னையர் தின சிறப்புக் கவிதை

அன்னையே என் கால்களை மன்னித்து விடு !

கூட்டத்தில் நடந்தால்கூட யார் மேலும் பட்டுவிடக்கூடாதென எட்டு மேல் எட்டு வைத்து நடக்கும் கால்களே...
உன்னால் கருவறையை மட்டும் எப்படி உதைக்க முடிந்தது?
கருவறை உதைத்த கால்களைக் கையில் தூக்கிக் கொஞ்சியவளே...
என் கால்களை மன்னித்து விடு !

எங்கே என் அம்மா ? - அன்னையர் தின சிறப்புக் கவிதை

எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
தாலாட்டுக் கேட்டுத்
தூங்கியதுமில்லை!
தாயின் குரல் கேட்டு
எழுந்ததுமில்லை!
என் மழலைமொழி
ரசிக்க
இங்கு யாருமில்லை
என்னை மடியில் வைத்துக்
கொஞ்ச
ஒருவரும் இல்லை!
இடுப்பில் சுமந்து
எவரும் எனக்கு
ஊட்டியதுமில்லை
கடைவாய் துடைத்து
யாரும் என்
கன்னம் கிள்ளியதில்லை!
பிடித்து நடக்க
எனக்கொரு
ஆள்காட்டி விரல்
கிடைத்ததில்லை!
சிலேட்டில் எழுதிய
என் எழுத்துக்களை
யாரும் வியந்ததுமில்லை!
ஒருமுறையேனும்
பால் கொடுத்தாளோ
தெரியவில்லை!
என்னை ஏன்
அநாதையாக்கினாளோ
புரியவில்லை!
தேடுகிறேன் நான்
எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
சேராத நட்பு

அலைபேசியில் அவனை
அழைக்க பணமில்லை அன்று !
பணமிருந்தும்
அழைக்க மனமில்லை இன்று !
'தமிழோடு' க்காக
அசோக்குமார்மழை !!!

பூமிப் பெண் பூப்பெய்தி விட்டாளோ . . .

வான மங்கை நீராட்டுகிறாள் !

நாங்களும் பாரதிதான்

ஆடையைக் கண்டுபிடித்தவன் கண்ணத்தில்

ஓங்கி ஒரு அறைவிடவேண்டும் !
உடல் மறைக்க எப்போது நினைத்தானோ
அன்றுதான் நான்கு சுவர் தேவைப்பட்டிருக்கும் !
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம் தெருவெல்லாம் வாடகை வீட்டுக்குக் கூட !
ஒரு வகையில் நாங்களும் காணி நிலம் தேடும் பாரதிதான் !

காதலே நீ வந்தாலே !

பசியின்மைபவித்ரமாய் போற்றப்படும் !தூக்கமின்மைதுளித் துளியாய் ரசிக்கப்படும் !கிறுக்கல்கள்கவிதைகள் ஆகிப்போகும் !உளறல்கள்உருக்கும் வார்த்தைகளாய் ஆகும் !கனவுகளேநாளின் முக்கால்பாகம் ஆட்சி செய்யும் !கண்ணாடி கூடகதைகள்பேசி விட்டுப்போகும் !காத்திருத்தல் கூடகற்கண்டாய் இனிக்கும் !மனசுபூமிப் பந்தைச் சுமப்பது போலபாரமாய் இருந்தாலும்வானமே எல்லையாய்பறந்து திரியும் !இதயம் வலம் மாறித் துடிக்கும் !இவை எல்லாம்மனசுக்குள்காதலே நீ வந்தாலே!

தாவணி!

இது பூபோட்ட தாவணியாஇல்லைஇந்தப் பூ போட்ட தாவணியா!

காதலியே...

உனக்காகக் காத்திருந்து
என் கால்கள் வலித்தன!

நின்றதால் அல்ல

இதயம் கனத்ததால் !
உபசாரி

தாகம் தீர்க்கும்
நீரும்
இவளும்
ஒரே சாதி
செய்யும் தொழிலே
தெய்வம்
தொழில் செய்யும்
இடமே கோவில்
இங்கு தீபம்
எரிகிறதோ இல்லையோ!
தினம்தினம் தீபமாய்
எரிபவள் இவள் மட்டும் தான்!!
தன்னை
எரித்து
தண்ணீராய்
வாழ்பவளே!!
உனக்கு
மட்டும் ஏன்
இத்தனை
நாமங்கள்?
வேசி,
விபச்சாரி,
நடத்தைக் கெட்டவள்,
ஒழுக்கமற்றவள்!
உன்னைப்
பரைசாற்றும் - இவன்
ஒழுக்கம்
எங்கே?
வரதட்சனை
கேட்கும்
இவனும் ஒரு
வேசி தான்!!!
சிசுவதை
செய்கிறான்
சிசுவைக்கூட
தவறாய்ப் பார்க்கிறான்
இவன்
காமப்பசிக்கு
வடிகால் தரும் நீ
ஒழுக்கமற்றவளா?
தன் உழைப்பையும் அறிவையும்
வெளிநாட்டவருக்கு தானே
விலைப்பேசும்
இவனும் உன்னைப் போன்றவன் தான்!!!
மன்னிக்கவும்!
இவனை விட
நீ மேன்மையானவள் - ஒரு
மருந்தாக நீயிருப்பதால்
உன்னை
வணங்கும் அளவிற்கு
உன்னை நான்
உயர்த்தவில்லை!!!
தசை நரம்பு
எலும்பு இவைகளால்
பின்னப்பட்ட ஒரு உயரிய
மனிதனாய் பார்க்கிறேன்!!!
வெளிப்படையாய்
இருக்கும் உன்னை
ஒழுக்கமற்றவளாய் கூற - என்
நா கூசுகிறது
உன்னையும்
மதிக்கிறேன் - ஒரு
பெண்ணாய்!
உபசாரியாய்!!!

வீழ்ந்தாலும் ...

மழைத் துளியாய் வீழ்ந்தாலும் சிப்பியின் வயிற்றில் வீழ்முத்துகளாய் வெளிவருவாய்!

கற்களாய் வீழ்ந்தாலும்
சிற்பியின் உளிபட்டு விழும் கற்களாய் வீழ்சிற்பமாய் உருப்பெருவாய்!

நீராய் வீழ்ந்தாலும்
நீர்வீழ்ச்சியாய் வீழ்வீழும்போதும் கம்பீரமாய் ரசிக்கப்படுவாய்!

வண்ணமாய் வீழ்ந்தாலும்
வானவில்லாய் வீழ்விண்ணும் மண்ணும் இணையும் வண்ணப் பாலமாய் விரும்பப்படுவாய்! நெருப்பாய் வீழ்ந்தாலும்
எரிமலைக் குழம்பாய் வீழ்விழ்ந்தபின்னும் விளை நிலமாய் உபயோகப்படுவாய்!
தன்னம்பிக்கை

மேலெழும் நீரூற்றைவிடகீழே விழும் அருவிக்குத்தான்எத்தனை கம்பீரம் !
கீழே வீழ்வதிலும் எத்தனை எழுச்சி!
மனிதா ...

வீழ்ந்தாலும் - நீஅருவி போல் கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு வீழ் !
வழிகள் ஆயிரம்அதுவே உன் ஆயுதம் !

பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் . . .

உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான் என்னை
உரமாக !
இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் நான்
எருவாக !
வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன் நான்
முற்றம் தெளிக்க !
முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன் நான்
பூசணிப்பூ தாங்கும் கையாக !
கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான் என்னை
களம் தெளிக்க !
வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள் என்னை
மருதாணியாக !
பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
நான் ஆவேன்
அவசர சாமியாக !
இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !
மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே
உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்
கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்
குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !கற்கண்டு

கற்கண்டை ருசித்திருக்கிறேன்.

இப்போது தான் கேட்கிறேன்.

அட!

நீ பேசினாயோ...

தொலைந்த நான்

தொலைந்த என்னைத் தேடி தேடிஅலைந்த போது தான் உணர்ந்தேன் தொலைந்த நான் உன்னிடம் - நீயோஎன்னிடம் !

நினைவுகள்

உன் நினைவுகளைக் காய்ந்த சருகுகளாய் என் காலடியில் உதிர்த்த நிம்மதியில்கண் அயர்ந்தேன்.

விதியோ அவைகளயேமண் உரமாய் மாற்றி என்னைத் துளிர்க்கசெய்துவிட்டது.

வலிகளோடு மீண்டும் நான் !

கண்ணாடி

இப்போதெல்லாம் நான் கண்ணாடி முன் அதிகமாய் நிற்கிறேன்.

ஏன் தெரியுமா?
அதில் தெரிவதெல்லாம் நான் அல்ல !பேனா

என் பேனா எழுதிய கவிதைகளிலேயேஅழகானது உன் பெயர் தான் அன்பே அந்த கர்வமோ என்னமோ அதை தவிர வேறேதுவும் எழுத மாட்டேன் என்கிறது.

Read more...

மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு !!!

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!

அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,

என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…

அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….நீ தான் நான் முதன்

முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…

“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்

காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.

“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…“இப்போ என்ன?

உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?

” என்றாள்“க க க போ” என்றேன்..“முடியாது!

என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..

சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…

“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..

அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…

“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,

குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…

“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,

வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…

“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி”

என்றேன்…

பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,

ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…

அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,

“மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு” என்று….

…..தொடரும்
Read more...

பொய்சொல்ல தேவை இல்லை !!!

>> Thursday, June 18, 2009

Read more...

உன் பதில் என்ன !!!

Read more...

உண்மை !!!

Read more...

நேசிக்கிறேன் !!!

Read more...

பெண்ணே !!!

Read more...

அவள் பெயர் !!!

Read more...

கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்

>> Monday, June 15, 2009

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது

6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???

9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!

10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

Read more...

சில பாடல்களும் அதன் விளக்கங்களும் !!!

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல

சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1) நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா

மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்

முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......

அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........

கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே..

6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........

டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம்

உயிரின் ஒலியாஅங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....நம்ம பக்கமும் வந்ததுக்கு நன்றி சாமியோவ் அப்பிடியே ஓட்டையும் குத்திட்டு உங்ககருத்தையும் சொல்லிட்டு போங்க சாமியோவ்........

Read more...

அ முதல் ஃ வரை அம்மா

அம்மா !

அன்பு என்றால் அம்மா
ஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மாஉயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மாஎன்னைப் பெற்றவள் அம்மா
ஏணியாய் இருந்தவள் அம்மாஐயம் நீக்கியவள் அம்மா
ஒற்றுமை விதைத்தவள் அம்மாஓய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மாஎஃகின் உறுதி அம்மா

அம்மா
பாலும் சோறும் உண்ணத் தந்துபடிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்கட்டிக் கொஞ்சும் அம்மா
புழுதி போக்கி நீருமாட்டிபொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்அழைத்துச் செல்லும் அம்மா
பள்ளிக்கூடம் விட்ட நேரம்பாதி வழிக்கு வந்துதுள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்தோளிற் போடும் அம்மா
அம்மா இங்கே வா! வா!
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன் ஒற்றுமை என்றும்
பலமாம் ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்

அஃதே எனக்கு வழியாம்.
கருவறையில் காத்து கவித்துவமாய் என்னை பெற்ற என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவைசமர்ப்பிக்கிறேன் ¬!!!!!!!!

அம்மா பாலும் சோறும் உண்ணத் தந்துபடிக்கச் சொல்லும் அம்மா

ஹைக்கூ கவிதைகள் !!!

திருக்குறள்

என்னவளின் இதழும் திருக்குறள்தான்இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
அதிசயம்

அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை........
ஒவியன்

சூரியனும் ஓவியன் தான்உன்னை நிழலாய் வரைவதால்.......

தனிமை

ஆயிரம்பேரோடு இருந்தாலும்நீ இல்லாத நேரம் தனிமை......
காகிதப் பூ

மரணமில்லா மலர்காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்

உன் எச்சறிக்கைக்குஎச்ச அறிக்கைக்கு...

Read more...

சில நகைச்சுவை கதைகள் !!!

கதை :1

அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள்.

அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். அம்மாஞ்சியும்சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தைகிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"என்றான்.

கொஞ்ச நேரம் யோசித்த அம்மாஞ்சி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்சநேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட நண்பனுக்குஅம்மாஞ்சி பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டுவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".*******கதை : 2

அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான்.

ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல...""ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?""அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே...

""பணத்தை யாரும்எடுத்துட்டாங்கன்னா..?""பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்..""அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்றுபெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.#

*******

கதை : 3ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா" ன்னு சொல்லியிருக்கார்... அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்...

நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்... வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க... அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்..."

உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது..." அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உன் பேர்ல தப்பில்லப்பா... நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்... இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!"

Read more...

>> Saturday, June 13, 2009

Read more...

Read more...

காதல் !!!

Read more...

அவள் பெயர் !!!

Read more...

காதல் !!!
Read more...

உனக்காகவே வாழ்கிறேன் !!!

Read more...

தவிக்க விட்டாய் !!!

Read more...

தவிக்க விட்டாய் !!!
Read more...

மறக்க முயல்கிறேன் !!!

Read more...

வெக்கமாய் இருக்கிறது !!!

Read more...

அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்.!!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும, காந்தியாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து....

அக்டோபர் 2, 1931.

ஐன்ஸ்டீன் எழுதியது..

பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி!

என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.

அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை காட்டி வெல்ல முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.உங்களின் எடுத்துக்காட்டு உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பரவும் என்று நம்புவோம். அத்தகைய நம்பிக்கை பன்னாட்டு அதிகாரம் ஒன்று உருவாகவும், அனைவரும் மதிக்கும் படியும், போர் இல்லாமலேயே பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவும் உதவும்.

உண்மையும் வியப்புடனும்,

உங்கள்,

ஆ. ஐன்ஸ்டீன்

நான் உங்களை நேருக்கு நேர் சந்திக்க இயலும் என்று நம்புகின்றேன்

Read more...

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் !!!

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.

Read more...

கோர்ட்டுக்குப் போன குதிரை !!!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்

Read more...

சில சுவையான உண்மை நிகழ்வுகள் !!!

  • இந்திராவின் ஆட்சிக்காலம் அது.!!!

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.
கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது
'' என்றார்.அதற்கு தவான், ""உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்'' என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

***************************** *******************************************

மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பேச்சில் நகைச்சுவை பொங்கும். ஒருமுறை கச்சேரி ஒன்றில் தமது பாட்டுக்குப் பொருந்தாமல் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த வித்வானைப் பார்த்துச் சொன்னார்: ""என் பாட்டுக்கு வாசிப்பா. நீ "உன்பாட்டுக்கு' வாசிச்சுக்கிட்டே போறியே.''

********************************** ****************************************

ஒரு முறை திருச்சிக்கு வந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் காமராஜர். அவரை வரவேற்கக் கையில் மாலையுடன் காத்திருந்தார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர். அவரைக் கண்ட காமராஜர், ""படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னா படிக்காதவனுக்கு மாலை போட்றதுக்கு க்யூல நிககி்றீங்களே'' என்றார்.
********************************** ************************************

""சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்''- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.********************************* ******************************************Read more...

தரம்

பனித்துளியாய் சில நினைவுகள் !!!

கரையும் கண்களுக்கு
உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில்
என்
விழிகளில் நீ.

காதலியின் நினைவில் !!!

பாசம்
என்று
நினைத்துதான் பழகினேன்
பிறகுதான் தெரிந்தது
- நீ
என் சுவாசம் என்று.

ஜோக்ஸ்
சினி சிப்ஸ் !!!

தமிழ் சினிமா பற்றிய ருசிகர தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

* கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் நடித்த முதல் திரைப்படம் உதிரிப் பூக்கள்.

* நடிகை லட்சுமி மழலை பட்டாளம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

* இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் திரைப்படம் அவள் ஒரு பச்சைக் குழந்தை.

* நடிகர் சிவக்குமார் நடித்த முதல் திரைப்படம் காக்கும் கரங்கள். அவரது 100வது திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி.

* புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் வசனம் மற்றும் பாடல்கள் எழுதிய திரைப்படம் வளையாபதி.

* திரையுலகில் சிவாஜி கணேசன் பேசிய முதல் வசனம் சக்சஸ்... வெற்றி.

* இயக்குனர் பாரதிராஜா கதாநாயகனாக நடித்த திரைப்படம் கல்லுக்குள் ஈரம்.

* நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்த திரைப்படம் பணம் பத்தும் செய்யும்.

* குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி தெலுங்குப் படங்களில் சிவரஞ்சனி என்ற பெயரிலும், மலையாளப் படங்களில் கவுரி என்ற பெயரிலும் நடித்து வந்தார்.

* ரஜினிகாந்துக்கு பிடித்த தமிழ் நடிகை லட்சுமி. இந்தி நடிகை ஷர்மிளா தாகூர்.

* நடிகை சவுகார்ஜானகி தயாரித்த முதல் திரைப்படம் காவியத்தலைவி. இந்த படத்தை கே.பாலச்சந்தர் இயக்கினார்.

* நடிகை பத்மினி தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நடித்தார். சாவித்திரி 28 வருடங்கள் நடித்தார்.

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக சரோஜாதேவி 24 படங்கள் நடித்தார். ஜெயலலிதா 28 படங்கள் நடித்தார்.

* சினிமாவுக்கென வெளியான முதல் பத்திரிகை மூவி மிர்ரர் 1927ல் தொடங்கப்பட்டது.

* தமிழில் வெளிவந்த முதல் யதார்த்த கலைப்படம் ஏழை படும் பாடு.

ஜோன்ஸ் ஜோக்ஸ் !!!

ஜோன்ஸ் தன் இரு நண்பர்களுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். டிராபிக் போலிஸ் நடுரோட்டில் கையைக் காட்டி வண்டியை நிறுத்தச் சொன்னார். பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் சொன்னார், “சார்..ஏற்கனவே மூணு பேர் இருக்கோம். நாலாவது ஆள் எல்லாம் ஏத்த முடியாது சார்."

****

நண்பர் : ஆக்சிஜன் உயிர் வாழ மிகவும் அவசியம். அது இல்லாமல் ஒரு நொடிகூட உயிருடன் இருக்க முடியாது. ஆக்ஸிஜன் 1773ல் கண்டுபிடிக்கப்பட்டது.

ஜோன்ஸ் : அப்படியா!! நல்லவேளை, நான் 1773க்குப் பிறகு பொறந்தேன். அதுக்கு முன்னாடி பொறந்திருந்தா செத்திருப்பேன்.. இல்ல!.

****

போன் வந்தால் மணிக்கணக்காகப் பேசும் வழக்கம் கொண்டவர் ஜோன்ஸின் மனைவி. அவர் அன்று பத்து நிமிடத்தில் பேசிவிட்டு போனை வைத்துவிட, ஜோன்ஸ் ஆச்சரியமாகக் கேட்கிறார். "என்ன சீக்கிரம் போனை வைத்துவிட்டாய்?""ஆமா.. வேற என்ன பண்றது, ராங் நம்பர் வந்தா!." என அலுத்துகொண்டார் அவர் மனைவி.

****

ஜோக்கர் ஜோன்ஸ் ஒரு கிளினிக்கில் டாக்டரின் அறை முன்னால் அமர்ந்திருக்கிறார். அருகே ஒரு நபர் அழுதுகொண்டிருக்கிறார்.

ஜோன்ஸ் : ஏன் அழுதுகொண்டிருக்கிறாய்?

நபர் : ப்ளட் டெஸ்ட் செய்ய வந்தேன். விரலில் ரத்தம் எடுக்கிறேன் பேர்வழி என்று என் விரலை வெட்டிவிட்டார்கள்.

ஜோன்ஸ் : அய்யய்யோ! நான் செத்தேன்.

நபர் : நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.ஜோன்ஸ் : நான் யூரின் டெஸ்ட் செய்ய வந்திருக்கிறேன். நல்லவேளை...வேற இடம் பார்த்துக்கறேன். பை...பை..

****

ரயில் டிக்கெட் பரிசோதகர் ஜோன்ஸைப் பார்த்தது கேட்கிறார், "டிக்கெட் ப்ளீஸ்!"

ஜோன்ஸ் : (பாக்கெட்டிலும் பேக்கிலும் தடவிப்பார்த்துவிட்டு) ஐயோ.. டிக்கெட்டை எங்க வச்சேன்னு தெரியலையே!

பரிசோதகர் : பரவாயில்லை..உங்களைப் பார்த்தா நல்ல மனுசனாத் தெரியுது. கண்டிப்பா நீங்க எடுத்துருப்பீங்க. நான் அடுத்த ஆளப் பார்க்கிறேன்.(சிறிது நேரம் கழித்து பரிசோதகர் திரும்பி வர, இன்னமும் டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருக்கிறார் ஜோன்ஸ்.)

பரிசோதகர் : இன்னுமா தேடுகிறீர்கள்? நான் தான் காண்பிக்க வேண்டாமென்று சொல்லிவிட்டேனே!

ஜோன்ஸ் : அடப்போய்யா நீ வேற! டிக்கெட் இருந்தாத்தானே நான் எந்த ஊருல எறங்குறதுன்னு தெரியும்.

பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம் !!!

நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன் -- வால்டேர்.

மனிதர்கள் அடிப்படையில் தம் விருப்பு வெறுப்புகளில், கருத்துக்களில் வித்தியாசப்பட்டவர்கள். அவர்களின் சிந்தனைகளை, நம்பிக்கைகளை, வாழ்க்கை முறையை ஒரே கொட்டடிக்குள் அடைக்க நினைப்பது மிகக் கொடிய வன்முறை.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து நம்பிக்கைகள், சிந்தனைகள், மதிப்பீடுகள் என்பவை காலப்போக்கில் மாறிக்கொன்டும் மறு உருவாக்கத்திற்கு ஆளாகியும் இருக்கின்றன.

அடக்கு முறைகள் எவ்வளவு இருந்தாலும் மனிதனின் அடிப்படைச் சிந்தனைகளை அவற்றால் முற்றிலும் முடக்க முடிந்ததில்லை. சமூகம் ஒரு மேம்படுத்துதளை நோக்கி பயணிக்க யத்தனிக்கும்போது முதலில் கருத்தளவிலான ஜனநாயகத்திற்குமான கதவுகளைத் திறந்து வைத்து இருக்க வேன்டும். அதற்கான சூழலை உருவாக்கி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 -(1)(ஏ) எல்லோருக்கும் கருத்து மற்றும் வெளிப்பாட்டிற்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது. பெரும்பாலும் எல்லா ஜனநாயக நாடுகளின் அரசியல் சட்டங்களும் இதை வலியுறுத்துகின்றன.

கருத்து எந்தவித அரசியல் சார்புமற்ற ஓர் அமைப்பு. கருத்து என்கிற ஒரு அமைப்புக்கு ப்ரத்யேகமாக எந்த கருத்தும் கிடையாது. இது எல்லாவித கருத்துகளையும் வெளிப்படுத்துவதற்கான களம் மட்டுமே. ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளை இந்த அமைப்பு வரவேற்கிறது. கருத்தை பொறுத்தவரை மீள்பார்வைக்கும் புதிய மதிப்பீடுகளுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் என்று எதுவுமில்லை. தீண்டக்கூடாத, தீண்ட முடியாத திருவுருக்கள் என்று எதுவும் கிடையாது. மதம், நம்பிக்கை, பாரம்பரியம், அரசியல், தத்துவம், நாம் நம்பும் சரித்திரம், சமூக அமைப்பு என்று எதை பற்றிய விவாதங்களுக்கும் இங்கு இடமுன்டு. கருத்து அமைப்பில் தலைவர்கள் கிடையாது. சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரும் இதன் உறுப்பினர்கள். எதிர்வினைகள், விமர்சனங்கள் ஆகியவை

சொல்லப்படும் கருத்துகளைப் பற்றியவையாக மட்டுமே இருக்க வேன்டும். சொல்பவரைப் பற்றிய விமர்சனங்களாக மாறக் கூடாது.

சமீபகாலங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை கலைகள், படைப்பிலக்கியம், சமூக கருத்துக்கள் ஆகியவற்றின் மீது சிலர் செலுத்த முயலும் ஆதிக்கம் கவலையையும் மிரட்சியையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

முதலில் படைப்பாளிகள் எதை எழுத வேன்டும், எப்படி அதை கையாள வேன்டும் என்பதைப் பற்றிய தடைகள் தலைதூக்கின. பிறகு மொழி, பண்பாடு, இனம், என்ற அரண்களை உருவாக்கி அதனுள் கலைஞர்களை முடக்கி விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தகைய முயற்சிகள் இப்போது சமூகத்தின் அத்தனை கூறுகளையும் ஊடுருவத் தொடங்கியுள்ளன. சொல்லப்படும் ஒரு கருத்திற்கு எதிர்வினையைக் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் நாகரிகத்தையும் பல நேரங்களில் நாம் தொலைத்து விடுகிறோம்.

நமது பண்பாடு, சமூக ஒழுக்கம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொதுமைப்படுத்தும் முயற்சியில் அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகள், ஊடகங்கள் ஆகியவை முனைந்து ஈடுபட்டுள்ளன. இந்தப் பொதுமைப்படுத்தலையே பெரும்பான்மை கருத்தாக மாற்றும் அபாயம் அதிகரித்து வருகிறது. பெரும்பான்மை சிறுபான்மையின் உரிமையை நசுக்கும், பாசிசவாதத்தின் வாயிலுக்குள் நுழையத் தொடங்கியிருக்கிறோம். பெரும்பான்மை மதிப்பீடுகளுக்கு மாறுபட்டு ஒலிக்கும் குரல்கள் குரூரமாய் நெரிக்கபடுகின்றன.

வழமையான பார்வைகளுக்கு மருந்தாய் வைக்கப்படும் புதிய கருத்துகளும், படைப்புகளும், தங்களை இந்தச் சமூகத்தின் ஒழுக்க காவலர்களாய் சுயமாக விரித்துக் கொண்ட சிலரால் வன்முறை தோய்ந்த வக்கிரத்தோடு எதிர்க்கபடுகின்றன. இந்த வன்முறையாளர்களின் பிடியில் அதிகமாகச் சிக்கிச் சிதைவது, இளைய தலைமுறையினர், பெண்கள், மற்றும் படைப்பாளிகள். இவை மூன்றும் ஒடுக்கப்படும் எந்த ஒரு சமூகமும் ஆரோக்கியமாகச் செயல்படுவது என்பது இயலாதது. இதை எதிர்த்து 'கருத்து' என்கிற இந்த அமைப்பை உருவாக்கியிருக்கிறோம்.

அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, எழுத்து மற்றும் கருத்துச் சுந்திரத்தைப் பாதுகாப்பதும் அதன் மீது செலுத்தப்படும் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதும் தான் இவ்வமைப்பின் முக்கிய நோக்கம்.

கருத்துக்கள், அவை அடிப்படைவாதமாக இருக்கலாம், பழமைவாதமாக இருக்கலாம், அல்லது புதுமை நோக்கிய குரலாக இருக்கலாம். இவை எல்லாவற்றிற்க்கும் சமூகத்தில் இடம் உண்டு என்பதுதான் இவ்வமைப்பின் அடிப்படை. இதை நோக்கிய ஒரு விழிப்புணர்வுக் குரலாக, இயக்கமாக 'கருத்து' செயல்படும். யாரையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டிராத எல்லாக் கருத்துக்களுக்கும் இதில் இடம் உண்டு.

ஜோக்ஸ் !!!

அறிமுகம் :

மிஸ்டர். ஜோக்கர் ஜோன்ஸ் இந்த வாரம் முதல் அறிமுகம். தன்னை முட்டாள் எனப் பிறர் சொல்வதை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டார். கள்ளங் கபடமில்லாத அப்பாவி மனிதர். இவர் செய்வதை சீரியஸாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இந்த மிஸ்டர் எதையும் யோசித்துச் செய்யமாட்டார்... அவ்ளோதான். இதோ ஜோன்ஸ்..பராக்! பராக்!!***ஒரு ஆங்கிலேயன், ஒரு அமெரிக்கன், நம்ம ஜோன்ஸ், மூவரும் ஒரு பொய் சொல்லுவதைக் கண்டுபிடிக்கும் கருவியைச் சோதனை செய்வதற்காக வரவழைக்கப்பட்டனர். மூவரும் பொய் சொல்லவேண்டும். அதற்கேற்றாற்போல அந்தக் கருவி அலறும்.ஆங்கிலேயன் : நான் நினைக்கிறேன்... என்னால் ஒரே நேரத்தில் 20 பாட்டில் பீர் குடிக்க முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.ஆங்கிலேயன் : சரி, என்னால் ஒரே நேரத்தில் 8 பாட்டில் பீர் குடிக்க முடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.

அமெரிக்கன் : நான் நினைக்கிறேன், என்னால் ஒரே நேரத்தில் 15 பீட்சா சாப்பிட முடியும்."கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.அமெரிக்கன் : சரி... என்னால் ஒரே நேரத்தில் 3 பீட்சா சாப்பிடமுடியும்.கருவி அமைதியாய் இருக்கிறது.ஜோன்ஸ் : நான் நினைக்கிறது என்னன்னா... "கிர்ர்ர்ர்ர்ர்" கருவி அலறுகிறது.***

நண்பர் : வாங்க ஜோ.. நாம் செஸ் விளையாடலாம்.ஜோன்ஸ் : எனக்கு அது விளையாடத் தெரியாதே.. நல்லா இருக்குமா?நண்பர் : ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்.ஜோன்ஸ் : அப்போ கொஞ்சம் பொறுங்க... நான் என்னோட ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்திடறேன்.***ஜோன்ஸ் : தாம்பரம் ரெண்டு டிக்கெட் கொடுங்க.கண்டக்டர் : இன்னொரு டிக்கெட் யாருக்கு?ஜோன்ஸ் : ரெண்டுமே எனக்குத்தான். ஒன்னு தொலைஞ்சி போனா இன்னொன்னு உதவுமே.கண்டக்டர் : அதுவும் தொலைஞ்சி போச்சுனா?ஜோன்ஸ் : ஒன்னும் பிரச்சினை இல்ல. என்னோட பஸ் பாஸ் பத்திரமா இருக்கு.***ஜோன்ஸ் புதிதாக ஒரு வேலையில் சேருகிறார். முதல் நாள் வேலை நேரம் முடிந்த பின்னும் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

மேனேஜர் : (ஆச்சரியத்துடன்) அட! இன்னுமா வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள். வெரி குட்!

ஜோன்ஸ் : தேங்க் யூ சார். வேற ஒன்னுமில்லை. இந்த கம்ப்யூட்டர் கீபோர்டில் ஏ, பி, சி, டி எழுத்துக்கள் எல்லாம் கரெக்டான வரிசையில் இல்லை. அதான் திரும்ப புடுங்கி அல்ஃபபெட்டிகல் ஆர்டர் படி மாட்டிக்கிட்டு இருக்கேன்.

***நம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.நண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.தென்னாலிராமன் கதை !!!

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

காதலர் தின உடையின் நிறங்கள் !!!

சிகப்பு - காதல் தோல்வி
பச்சை - காதலுக்காக எதிர்பார்த்தல்
மஞ்சள் - காதலித்தல்
வெள்ளை - காதலில் நாட்டம் இல்லை
நீலம் - இரண்டாவது காதலுக்கு எதிர்பார்த்தல்
கருப்பு - கடலை போடுவதற்கு மட்டும்

பிடித்த பொன்மொழிகள் !!!

* சாதுரியம் இல்லாமல் நீங்கள் எதையும் கற்றுக் கொள்ள முடியாது. —டிஸ்ரேலி.

* மனிதர்களிடம் கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை. —சேத்ரஞ்சர்.

* உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம். —கார்ல் மார்க்ஸ்.

* ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது. —ராஜாஜி.

* நல்ல நம்பிக்கையே நிம்மதியை அளிக்கும். —நார்மன் வின்சென்ட்.

* நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும். —இங்கர்சால்.

* உங்களை முதலில் கட்டுப்படுத்துங்கள்; பிறகு, உலகமே உங்கள் வசமாகும். —தோரோ.

* அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ.

உலகிலேயே அழகான பெண்கள் எங்கே இருக்கிறார்கள் ?
உலகம் சுற்றும் வாலிபர்களின் அனுபவங்களைச் சொல்லும் “டிராவலர்ஸ் டைஜஸ்ட்” இதழ் உலகிலேயே மிகவும் அழகான பெண்கள் எங்கெங்கே இருக்கிறார்கள் எனும் பட்டியலைத் தயார் செய்ய உலகெங்கும் பறந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் அமைத்த பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது என பொய் சொல்ல மாட்டேன்.
ஸ்வீடன் நாட்டு தலைநகரான ஸ்டாக்காம் தான் உலகிலேயே பேரழகுப் பெண்களின் பேரணியாய் இருக்கிறதாம். ஜொள்ளுவிடும் ஆண்களுக்கான ஜொர்க்க பூமி அது என அந்த பத்திரிகை வர்ணித்துள்ளது.
ஸ்வீடன் பெண்கள் கல்வியறிவும், “பழகுதற்கு” இனிமையும் அழகும், மொழியில் அழகிய உச்சரிப்பும் உடையவர்களாக இருக்கிறார்களாம்.
அர்ஜண்டீனாவுக்கு இரண்டாவது இடம். கூடவே Buenos Aires . கிழக்கு ஐரோப்பா, பால்டிக் பகுதியிலுள்ள பெண்களே 3 முதல் 8 வரையிலான இடத்தை இட்டு நிரப்புகிறார்கள்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஒட்டுமொத்த அமெரிக்காவில் உள்ள அழகான பெண்களை விட அதிகமான அழகிகள் இருக்கின்றனர் என கூறி அந்தப் பத்திரிகை அமெரிக்கப் பெண்களின் எரிச்சலை வாங்கிக் கட்டியிருக்கிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகள் இந்த பட்டியலில் மூலையிலும் இடம் பிடிக்கவில்லை. நெதர்லாண்டில் சைக்கிளோட்டும் பெண்கள் மிகவும் அழகாக இருக்கிறார்களாம். காரணம் அவர்கள் சைக்கிள் ஓட்டி ஓட்டி நல்ல உடலமைப்பைப் பெற்றது தானாம்.
பல்கேரியாவிலுள்ள பெர்னா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ், வெனிசுலாவின் கராகஸ் கனடாவின் மாண்டிரியல் இஸ்ரேலின் டெல் அவிவ் என எல்லா நாடுகளிலும் வலம் வரும் அழகிகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் நாட்டில் இந்திய நாட்டைக் காணவே காணோம்.
அட ! என்னப்பா எத்தனை உலக அழகிகள், பிரபஞ்ச அழகிகளைப் பிரசவித்த நாடு இது. மேட்டர் கேள்விப்பட்டா நமீதா ரசிகர்கள் வேற கொதிச்சுப் போயிடுவாங்களே.

கால வித்தியாசம் !!!

இன்றைய கவிதை (கேள் மனமே கேள்) !!!

ஓடை நீரில் மீன்கள் பின்னால்ஓடித் திரிந்த்த(து) ஒரு காலம்கோடை மணலில் கால்கள் வெந்துகுழைந்து போனதும் ஒரு காலம்

ஈசாப் நீதிக் கதைகளுக் குள்ளேஇதயம் கரைந்தது ஒரு காலம்பேசா திருக்கும் பிரபஞ்சமே ஒருபுத்தகமானதும் ஒரு காலம்

சில்லிப் பூக்களில் தேனைத் தேடித்துள்ளித் திரிந்தது ஒரு காலம்எல்லாம் இருந்தும் நேரமில்லாமல்எட்டித் தள்ளுவ தொருகாலம்

ஆகயத்தைத் தொட்டுப் பிடிக்கும்ஆர்ப்பாட்டங்கள் ஒரு காலம்ஆகாயத்தை நெஞ்சுக்குள்ளேஅழைத்துக் கொண்டதும் ஒரு காலம்

பண்ந்தான் உந்தன் எஜமான் என்றுபதறித் திரிந்தது ஒரு காலம்பணந்தான் உந்தன் சேவகன் என்றுபாடங் கண்டதும் ஒரு காலம்

அதுவோ இதுவோ எதுவோ என்றேஆசை வளர்த்ததும் ஒரு காலம்இதற்குத் தான இவ்வள வென்றேஇடுப்பைப் பிடித்ததும் ஒரு காலம்

காதல் இன்றேல் சாதல் என்றேகவிதை சொன்னதும் ஒரு காலம்காதல் என்பது ச்ந்தர்ப்பம்தான்கண்டு தெளிந்ததும் ஒரு காலம்

சொல்லிச் சொல்லி உணவு சமைத்துத்தொப்பை வளர்த்தடும் ஒரு காலம்மில்லிகிராமில் உணவை அளந்துமென்று முடிப்பதும் ஒரு காலம்

தன்னை வெல்ல ஆளில்லை என்றேதருக்கித் திரிவதும் ஒரு காலம்சின்னக் குழயில் காற்றைச் செலுத்திஜீவன் வளர்ப்பதும் ஒரு காலம்

பூமி தனக்கே சொந்தம் என்றுபுலம்பித் திரிவதும் ஒரு காலம்பூமிக்கே நீ சொந்தம் என்றுபுரிந்து தெளிவதும் ஒரு காலம்

சுஜாதா ரசித்த கவிதை

வரவேற்பாளர் !!!ஆடைகளில் சுருக்கம் விழாமல்,
உதடுகளின் சாயம் உருகி வழியாமல்,
அலங்காரப் பதுமையாய்
வரவேற்பறையில் நான்.

தொலைபேசிச் சத்தம்
கேட்டுக் கேட்டு என்
காது மடல்கள் ஊமையாகிவிட்டன

போலியாய் சிரிப்பதற்காகவே
எனக்கு ஊதிய உயர்வு
அவ்வப்போது வருகிறது.

கண்களில் கொஞ்சம்
காமம் கலந்தே பாதி கண்கள்
என்னைப் பார்க்கின்றன.
மீதி கண்கள்
அவசர யுகத்தின் பிரதிநிதிகள்
கடிகாரம் மட்டுமே பார்த்து வாழ்பவர்கள்.

என் குரலுக்குள்
குயில் இருக்கிறதாம் !
எனக்கு இருப்பவை தோகைகளாம் !
வர்ணனை வார்த்தைகளிலும்
புன்னகை மட்டுமே பூக்க வேண்டுமென்னும்
கட்டாயக் கட்டுகளில் நான்.

எனது சின்ன வயது மகள்
மாலையில் மறக்காமல்
மல்லிகை வாங்கி வரச் சொன்னாள்.

பூக்களின் வாசனைகளுக்கிடையே
என்
சராசரி வாழ்க்கையின் எதார்த்தம்
நாசி யை எட்டும் போது
முந்திக் கொண்டு தட்டுகிறது
மீண்டும் அந்த தொலைபேசி.

விரைவாய் மதிய உணவு முடித்து
கிடைக்கும் இடைவேளையில்
சிறிதே இளைப்பாறி
மீண்டும் உதடுகளில் புன்னகை நட்டு
முன்னறை வாசலில் தஞ்சம்.

அமிலச் சாலையில் கழுவப்பட்டு
மொத்த மனசும்
சாயம் போனதாய்த் தோன்றும்,
ஒவ்வொரு மாலைப் பொழுதுகளிலும்.

சிரித்து வாழ வேண்டும்
என்று கவிஞன் சொன்னது என்னிடம் தானோ ?
சிந்தனைகள் விட்டு விட்டு
வட்டமிட கவலையாய் இருக்கிறது இப்போது.

மூன்று மணிக்கு பேசுகிறேன்
காலையில் கண் வலியுடன்
கணவன் சொன்னான்.
கடிகாரம் இலக்கைத் தொட்டபின்னும்
பயணத்தைத் தொடர,
இதுவரை ஒலித்த தொலைபேசி
இப்போது மட்டும் ஊமையாய் ??????

40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் !!!இது குறித்து பல்கலையின் தாவரவியல் துறை இணை பேராசிரியர் ராமச்சந்திரன் கூறியதாவது: பாரதியார் பல்கலை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள தாவரங்களை ஆய்வு செய்து வருகிறோம். அப்படி ஆய்வு செய்ததில், இங்கு "சைலோட்டம் நூடம்' எனும் அரிய வகை தாவரம் இருந்தது. இந்த அரிய வகை தாவரம் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் தோன்றிய முதல் சாற்றுக் குழாய்களைக் கொண்ட ஒரு தாவரம். "சைலோட்டாசியே' என்ற தாவர குடும்பத்தைச் சேர்ந்த இந்த தாவரம், "சைலோப்பிசைடா' என்ற கூட்டமைப்பில் காணப்படுகிறது. இதன் கிளைகள், இரு வேறு கிளைகளாகப் பிரிந்து காணப்படுவதும், வித்துக்களை உண்டாக்கும் தன்மை கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து காணப்படுவதும் இந்த தாவரத்தின் சிறப்பு தன்மைகள். இதற்கு வேர்கள் இல்லை,வேர்களுக்குப் பதிலாக, இரு கிளைகளாகப் பிரியும் மட்ட நிலத்தண்டு மட்டுமே உண்டு. இலைகள் சிறியவை. வித்துக்களை உருவாக்கும் பகுதிகள், தாவரத்தின் தண்டின் நுனி அல்லது பக்கவாட்டில் நேரடியாக ஒட்டிக் கொண்டிருக்கின்றன. இந்த அரிய வகை தாவரயினத்தை அழிவில் இருந்து பாதுகாக்க ஆய்வு செய்து வருகிறோம் என்று பேராசிரியர் ராமச்சந்திரன் கூறினார்.

கோவை : பூமியில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேர்கள் இல்லாத அரிய வகை தாவரம், பாரதியார் பல்கலை வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலை வளாகத்தில் உள்ள தாவர வகைகளை கணக்கு எடுக்கும் பணி துவங்கியது. கணக்கு எடுப்பதோடு, அதன் வரலாறு, தனித்துவம் குறித்தும் பல்கலையின் தாவரவியல் பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வில், "சைலோட்டம் நூடம்' எனும் அரிய தாவர வகை கண்டுபிடிக்கப்பட்டது.

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!!

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் !!!சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.நடிகர்கள் தொழில்ஜெமினி கணேசன் - போட்டோ உதவி பேராசிரியர்

ஸ்ரீகாந்த் - அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி

ஏவி.மெய்யப்பன் - சைக்கிள் கடை

வி.எஸ்.ராகவன் - பத்திரிகையாளர்

ஆனந்தராஜ் - சாராய வியாபாரம்

சிவகுமார் -
ஓவியர்

ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ் -
காய்கறி வியாபாரம்

நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா

பாண்டியன் - வளையல் கடை

விஜயகாந்த் -
அரிசி கடை

ராஜேஷ் - பள்ளி ஆசிரியர்

ஆர்.சுந்தர்ராஜன் - பேக்கரி

பாக்யராஜ் - ஜவுளிக்கடை

அஜீத்குமார் - டூ வீலர் மெக்கானிக்

ரகுவரன் - உணவு விடுதி

பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்

டெல்லி கணேஷ் - ராணுவ வீரர்

மேஜர் சுந்தர்ராஜன் - கணக்காளர்

பாலச்சந்தர் - கணக்காளர்

விசு - டி.வி.எஸ். நிறுவன பணியாளர்

தலைவாசல் விசை -
ஓட்டல் பணியாளர்மோகன் - வங்கி ஊழியர்

ராஜீவ் - ஓட்டல் கேட்டரிங்

எஸ்.வி.சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்

தியாகராஜன் - இசைத்தட்டு விநியோக பிரதிநிதி

பாண்டியராஜன் - எல்லா தொழிலும் செய்துள்ளார்

கவிஞர் வைரமுத்து - மொழி பெயர்ப்பாளர்

சேரன் - சிம்சன் நிறுவன தொழிலாளி

சரத்குமார் - பத்திரிகை அலுவலக நிர்வாகி

நடிகைகள்

நடிகைகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் விளம்பர பட நடிகையாகவும், மாடலிங்கிலும், ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டாகவும்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு சில நடிகைகள் பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே வாய்ப்பு கிடைத்ததால் கலையுலக சேவை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.

என்ன நண்பர்களே உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் சார்பாக ஓட்டை குத்திவிட்டு செல்லவும்.

கவிதைகள் !!!

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!

உலகை வெல்வோம் !

மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !

வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !

ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !

முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !

மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !

தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !

தொட்ட உயரமே
கடைசியில்லை !

எழுந்து வா . . .

உலகை வெல்வோம் !

அன்னையே மன்னித்து விடு ! - அன்னையர் தின சிறப்புக் கவிதை

அன்னையே என் கால்களை மன்னித்து விடு !

கூட்டத்தில் நடந்தால்கூட யார் மேலும் பட்டுவிடக்கூடாதென எட்டு மேல் எட்டு வைத்து நடக்கும் கால்களே...
உன்னால் கருவறையை மட்டும் எப்படி உதைக்க முடிந்தது?
கருவறை உதைத்த கால்களைக் கையில் தூக்கிக் கொஞ்சியவளே...
என் கால்களை மன்னித்து விடு !

எங்கே என் அம்மா ? - அன்னையர் தின சிறப்புக் கவிதை

எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
தாலாட்டுக் கேட்டுத்
தூங்கியதுமில்லை!
தாயின் குரல் கேட்டு
எழுந்ததுமில்லை!
என் மழலைமொழி
ரசிக்க
இங்கு யாருமில்லை
என்னை மடியில் வைத்துக்
கொஞ்ச
ஒருவரும் இல்லை!
இடுப்பில் சுமந்து
எவரும் எனக்கு
ஊட்டியதுமில்லை
கடைவாய் துடைத்து
யாரும் என்
கன்னம் கிள்ளியதில்லை!
பிடித்து நடக்க
எனக்கொரு
ஆள்காட்டி விரல்
கிடைத்ததில்லை!
சிலேட்டில் எழுதிய
என் எழுத்துக்களை
யாரும் வியந்ததுமில்லை!
ஒருமுறையேனும்
பால் கொடுத்தாளோ
தெரியவில்லை!
என்னை ஏன்
அநாதையாக்கினாளோ
புரியவில்லை!
தேடுகிறேன் நான்
எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
சேராத நட்பு

அலைபேசியில் அவனை
அழைக்க பணமில்லை அன்று !
பணமிருந்தும்
அழைக்க மனமில்லை இன்று !
'தமிழோடு' க்காக
அசோக்குமார்மழை !!!

பூமிப் பெண் பூப்பெய்தி விட்டாளோ . . .

வான மங்கை நீராட்டுகிறாள் !

நாங்களும் பாரதிதான்

ஆடையைக் கண்டுபிடித்தவன் கண்ணத்தில்

ஓங்கி ஒரு அறைவிடவேண்டும் !
உடல் மறைக்க எப்போது நினைத்தானோ
அன்றுதான் நான்கு சுவர் தேவைப்பட்டிருக்கும் !
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம் தெருவெல்லாம் வாடகை வீட்டுக்குக் கூட !
ஒரு வகையில் நாங்களும் காணி நிலம் தேடும் பாரதிதான் !

காதலே நீ வந்தாலே !

பசியின்மைபவித்ரமாய் போற்றப்படும் !தூக்கமின்மைதுளித் துளியாய் ரசிக்கப்படும் !கிறுக்கல்கள்கவிதைகள் ஆகிப்போகும் !உளறல்கள்உருக்கும் வார்த்தைகளாய் ஆகும் !கனவுகளேநாளின் முக்கால்பாகம் ஆட்சி செய்யும் !கண்ணாடி கூடகதைகள்பேசி விட்டுப்போகும் !காத்திருத்தல் கூடகற்கண்டாய் இனிக்கும் !மனசுபூமிப் பந்தைச் சுமப்பது போலபாரமாய் இருந்தாலும்வானமே எல்லையாய்பறந்து திரியும் !இதயம் வலம் மாறித் துடிக்கும் !இவை எல்லாம்மனசுக்குள்காதலே நீ வந்தாலே!

தாவணி!

இது பூபோட்ட தாவணியாஇல்லைஇந்தப் பூ போட்ட தாவணியா!

காதலியே...

உனக்காகக் காத்திருந்து
என் கால்கள் வலித்தன!

நின்றதால் அல்ல

இதயம் கனத்ததால் !
உபசாரி

தாகம் தீர்க்கும்
நீரும்
இவளும்
ஒரே சாதி
செய்யும் தொழிலே
தெய்வம்
தொழில் செய்யும்
இடமே கோவில்
இங்கு தீபம்
எரிகிறதோ இல்லையோ!
தினம்தினம் தீபமாய்
எரிபவள் இவள் மட்டும் தான்!!
தன்னை
எரித்து
தண்ணீராய்
வாழ்பவளே!!
உனக்கு
மட்டும் ஏன்
இத்தனை
நாமங்கள்?
வேசி,
விபச்சாரி,
நடத்தைக் கெட்டவள்,
ஒழுக்கமற்றவள்!
உன்னைப்
பரைசாற்றும் - இவன்
ஒழுக்கம்
எங்கே?
வரதட்சனை
கேட்கும்
இவனும் ஒரு
வேசி தான்!!!
சிசுவதை
செய்கிறான்
சிசுவைக்கூட
தவறாய்ப் பார்க்கிறான்
இவன்
காமப்பசிக்கு
வடிகால் தரும் நீ
ஒழுக்கமற்றவளா?
தன் உழைப்பையும் அறிவையும்
வெளிநாட்டவருக்கு தானே
விலைப்பேசும்
இவனும் உன்னைப் போன்றவன் தான்!!!
மன்னிக்கவும்!
இவனை விட
நீ மேன்மையானவள் - ஒரு
மருந்தாக நீயிருப்பதால்
உன்னை
வணங்கும் அளவிற்கு
உன்னை நான்
உயர்த்தவில்லை!!!
தசை நரம்பு
எலும்பு இவைகளால்
பின்னப்பட்ட ஒரு உயரிய
மனிதனாய் பார்க்கிறேன்!!!
வெளிப்படையாய்
இருக்கும் உன்னை
ஒழுக்கமற்றவளாய் கூற - என்
நா கூசுகிறது
உன்னையும்
மதிக்கிறேன் - ஒரு
பெண்ணாய்!
உபசாரியாய்!!!

வீழ்ந்தாலும் ...

மழைத் துளியாய் வீழ்ந்தாலும் சிப்பியின் வயிற்றில் வீழ்முத்துகளாய் வெளிவருவாய்!

கற்களாய் வீழ்ந்தாலும்
சிற்பியின் உளிபட்டு விழும் கற்களாய் வீழ்சிற்பமாய் உருப்பெருவாய்!

நீராய் வீழ்ந்தாலும்
நீர்வீழ்ச்சியாய் வீழ்வீழும்போதும் கம்பீரமாய் ரசிக்கப்படுவாய்!

வண்ணமாய் வீழ்ந்தாலும்
வானவில்லாய் வீழ்விண்ணும் மண்ணும் இணையும் வண்ணப் பாலமாய் விரும்பப்படுவாய்! நெருப்பாய் வீழ்ந்தாலும்
எரிமலைக் குழம்பாய் வீழ்விழ்ந்தபின்னும் விளை நிலமாய் உபயோகப்படுவாய்!
தன்னம்பிக்கை

மேலெழும் நீரூற்றைவிடகீழே விழும் அருவிக்குத்தான்எத்தனை கம்பீரம் !
கீழே வீழ்வதிலும் எத்தனை எழுச்சி!
மனிதா ...

வீழ்ந்தாலும் - நீஅருவி போல் கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு வீழ் !
வழிகள் ஆயிரம்அதுவே உன் ஆயுதம் !

பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் . . .

உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான் என்னை
உரமாக !
இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் நான்
எருவாக !
வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன் நான்
முற்றம் தெளிக்க !
முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன் நான்
பூசணிப்பூ தாங்கும் கையாக !
கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான் என்னை
களம் தெளிக்க !
வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள் என்னை
மருதாணியாக !
பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
நான் ஆவேன்
அவசர சாமியாக !
இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !
மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே
உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்
கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்
குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !கற்கண்டு

கற்கண்டை ருசித்திருக்கிறேன்.

இப்போது தான் கேட்கிறேன்.

அட!

நீ பேசினாயோ...

தொலைந்த நான்

தொலைந்த என்னைத் தேடி தேடிஅலைந்த போது தான் உணர்ந்தேன் தொலைந்த நான் உன்னிடம் - நீயோஎன்னிடம் !

நினைவுகள்

உன் நினைவுகளைக் காய்ந்த சருகுகளாய் என் காலடியில் உதிர்த்த நிம்மதியில்கண் அயர்ந்தேன்.

விதியோ அவைகளயேமண் உரமாய் மாற்றி என்னைத் துளிர்க்கசெய்துவிட்டது.

வலிகளோடு மீண்டும் நான் !

கண்ணாடி

இப்போதெல்லாம் நான் கண்ணாடி முன் அதிகமாய் நிற்கிறேன்.

ஏன் தெரியுமா?
அதில் தெரிவதெல்லாம் நான் அல்ல !பேனா

என் பேனா எழுதிய கவிதைகளிலேயேஅழகானது உன் பெயர் தான் அன்பே அந்த கர்வமோ என்னமோ அதை தவிர வேறேதுவும் எழுத மாட்டேன் என்கிறது.மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு !!!

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!

அவள் ஒவ்வொரு முறை என்னை கடக்கும் போதும்,

என் மனம் “வந்துட்டாயா வந்துட்டாயா” என்று அலறும்…“பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்” என்றேன்…

அவளிடம் என் காதலைச் சொல்லும் முன்னர்….நீ தான் நான் முதன்

முதலாக காதலிக்கிற பெண் என்றேன்…

“அடப் பாவி, போன மாதம் தான் என் தோழியிடம்

காதலிக்கிறேன் என்று சொன்னாயே!” என்றாள்.

“அது போன மாசம், நான் இப்போ சொல்றது இந்த மாசம்” என்றேன்…“இப்போ என்ன?

உன் காதலை ஒப்புக் கொள்ள வேண்டுமா?

” என்றாள்“க க க போ” என்றேன்..“முடியாது!

என்று சொன்னாள், என்ன செய்வாய்” என்றாள்..

சற்றே யோசித்து விட்டு “நான், அழுதுடுவேன்!” என்றேன்…ஒற்றைச் சிரிப்பை உதிர்த்து என்னைப் பார்த்தாள்…

“என்ன சிரிப்பு ராஸ்கல், சின்னப் புள்ளத் தனமாய்” என்று அதட்டினேன்…..

அவள் சோகமாய், என்னை பார்த்தாள்…

“நீ மட்டும் ஹும் சொன்னா, மாமா குச்சி மிட்டாயும்,

குருவி ரொட்டியும் வாங்கித் தருவேனாம்” என்றேன்…எனது தந்தை காவல்துறையில் இருக்கிறார் என்றாள்…

“பன்றிக்கு நன்றி சொல்லி, குன்றின் மீதேறி நின்றால்,

வென்றிடலாம் எனது மாமாவை” என்றேன்…இருந்தாலும் நீ ரிஸ்க் எடுக்கிறாய்,இன்னொரு முறை யோசித்து சொல் என்றாள்…

“ரிஸ்க் எடுக்கிறதெல்லாம்,எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி”

என்றேன்…

பிறகு ஒரு வாரம் என்னை காக்க வைத்து,

ஒரு இனிய பொழுதில், சொன்னாள் அவள் காதலை…

அன்றைக்குத் தான் நான் உணர்ந்தேன்,

“மாப்பு, வெச்சுட்டாயா ஆப்பு” என்று….

…..தொடரும்

பொய்சொல்ல தேவை இல்லை !!!உன் பதில் என்ன !!!உண்மை !!!நேசிக்கிறேன் !!!பெண்ணே !!!அவள் பெயர் !!!கன்னா பின்னா மொக்கை தத்துவங்கள்

கண்ணா பின்னா தத்துவங்கள்

1. நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

2. யானையை எப்படி ஆட்டோவில் ஏற்றுவது ?
"பேண்டை கழட்டி விட்டு" எலிபேண்டில் இருந்து
பேண்டை எடுத்து விட்டால் அது 'எலி" ஆகி போய்விடும்.
அப்புறமா ஆட்டோவில் எளிதில் ஏற்றிவிடலாம்.

3. டீ மாஸ்டர் டீ போடுரார்பரோட்டா மாஸ்டர் பரோட்டா
போடுரார்மேக்ஸ் மாஸ்டர் கணக்கு போடுரார்ஹெட்
மாஸ்டரால மண்டைய போட முடியுமா?

4. புள்ளிமான் உடம்பெல்லாம் புள்ளி இருக்கும்
கண்ணுக்குட்டி உடம்பெல்லாம் கண்ணு இருக்குமா

5. ஒரு சிறந்த பேச்சாளர் எந்த ஸ்டேஜிலும் பேசலாம்
ஆனால்
அவரால் ஹோமா ஸ்டேஜில் பேசமுடியாது

6. 1 பேப்பர் 2 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...
1 கட்டை 10 நிமிஷம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
1 மரம் 2 மணி நேரம் எரிஞ்சா சாம்பல் ஆயிடும்....
ஆனா.....ஆனா.......ஒரு பல்பு எவ்வளவு நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது....

7. காளை மாடு ஏன் புல் தின்னுகிறது ?
ஏனென்றால் அதுவே புல்தான் - Bull8.நைட்ல கொசு கடிச்சாகுட் நைட் வைக்கலாம்...ஆனா, பகல்ல கடிச்சாகுட் மார்னிங் வைக்கமுடியுமா..???

9. அண்ணனோட ஃப்ரண்டஅண்ணன்னு கூப்பிடலாம்..
அக்காவோட ஃப்ரண்டஅக்கான்னு கூப்பிடலாம்..ஆனா பொண்டாட்டியோட ஃப்ரண்டபொண்டாட்டிண்ணு கூப்பிடமுடியுமா..?!

10. நடந்து போனாக் கால் வலிக்கும். ஆனா கால் வலிச்சா நடக்க முடியுமா?

சில பாடல்களும் அதன் விளக்கங்களும் !!!

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல

சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1) நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா

மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்

முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......

அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........

கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே..

6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........

டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம்

உயிரின் ஒலியாஅங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....நம்ம பக்கமும் வந்ததுக்கு நன்றி சாமியோவ் அப்பிடியே ஓட்டையும் குத்திட்டு உங்ககருத்தையும் சொல்லிட்டு போங்க சாமியோவ்........

அ முதல் ஃ வரை அம்மா

அம்மா !

அன்பு என்றால் அம்மா
ஆறுதல் தருபவள் அம்மா
இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா
ஈகை விளக்கியவள் அம்மாஉயிரைக் கொடுப்பவள் அம்மா
ஊழ் உரைத்தவள் அம்மாஎன்னைப் பெற்றவள் அம்மா
ஏணியாய் இருந்தவள் அம்மாஐயம் நீக்கியவள் அம்மா
ஒற்றுமை விதைத்தவள் அம்மாஓய்வின்றி உழைத்தவள் அம்மா
ஒளடதம் ஆனவள் அம்மாஎஃகின் உறுதி அம்மா

அம்மா
பாலும் சோறும் உண்ணத் தந்துபடிக்கச் சொல்லும் அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்கட்டிக் கொஞ்சும் அம்மா
புழுதி போக்கி நீருமாட்டிபொட்டும் வைக்கும் அம்மா
அழுதிடாமல் பள்ளிக்கூடம்அழைத்துச் செல்லும் அம்மா
பள்ளிக்கூடம் விட்ட நேரம்பாதி வழிக்கு வந்துதுள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்தோளிற் போடும் அம்மா
அம்மா இங்கே வா! வா!
அம்மா இங்கே வா! வா!
ஆசை முத்தம் தா! தா!
இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன் ஒற்றுமை என்றும்
பலமாம் ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்

அஃதே எனக்கு வழியாம்.
கருவறையில் காத்து கவித்துவமாய் என்னை பெற்ற என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவைசமர்ப்பிக்கிறேன் ¬!!!!!!!!

அ முதல் ஃ வரை அம்மா

அம்மா !

அன்பு என்றால் அம்மா

ஆறுதல் தருபவள் அம்மா

இரத்தத்தை பாலாக்கி தந்தவள் அம்மா

ஈகை விளக்கியவள் அம்மாஉயிரைக் கொடுப்பவள் அம்மா

ஊழ் உரைத்தவள் அம்மாஎன்னைப் பெற்றவள் அம்மா

ஏணியாய் இருந்தவள் அம்மாஐயம் நீக்கியவள் அம்மா

ஒற்றுமை விதைத்தவள் அம்மாஓய்வின்றி உழைத்தவள் அம்மா

ஒளடதம் ஆனவள் அம்மாஎஃகின் உறுதி அம்மா

அம்மா பாலும் சோறும் உண்ணத் தந்துபடிக்கச் சொல்லும் அம்மா

காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்கட்டிக் கொஞ்சும் அம்மா

புழுதி போக்கி நீருமாட்டிபொட்டும் வைக்கும் அம்மா

அழுதிடாமல் பள்ளிக்கூடம்அழைத்துச் செல்லும் அம்மா

பள்ளிக்கூடம் விட்ட நேரம்பாதி வழிக்கு வந்துதுள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித்தோளிற் போடும் அம்மா

அம்மா இங்கே வா! வா!

அம்மா இங்கே வா! வா!

ஆசை முத்தம் தா! தா!

இலையில் சோறு போட்டுஈயைத் தூர ஓட்டு

உன்னைப் போன்ற நல்லார்,ஊரில் யாவர் உள்ளார்?

என்னால் உனக்குத் தொல்லைஏதும் இங்கே இல்லை

ஐயமின்றி சொல்லுவேன் ஒற்றுமை என்றும்

பலமாம் ஓதும் செயலே நலமாம்ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.

கருவறையில் காத்து கவித்துவமாய் என்னை பெற்ற என் அன்பு அம்மா நீ என் அருகில் இல்லாவிடினும் உன் பாசம் என்றும் பெற்ற இந்த மகன் உனக்காக இந்த பதிவைசமர்ப்பிக்கிறேன் ¬!!!!!!!!

ஹைக்கூ கவிதைகள் !!!

திருக்குறள்

என்னவளின் இதழும் திருக்குறள்தான்இரண்டுவரிகளில் எத்தனை பாடங்கள்....
அதிசயம்

அன்பே தங்கத்திலிருந்து வெள்ளி வருவதை இப்பொழுதுதான் பார்க்கிறேன் உன் வியர்வை........
ஒவியன்

சூரியனும் ஓவியன் தான்உன்னை நிழலாய் வரைவதால்.......

தனிமை

ஆயிரம்பேரோடு இருந்தாலும்நீ இல்லாத நேரம் தனிமை......
காகிதப் பூ

மரணமில்லா மலர்காத்திருக்கிறேன்
காத்திருக்கிறேன்

உன் எச்சறிக்கைக்குஎச்ச அறிக்கைக்கு...

சில நகைச்சுவை கதைகள் !!!

கதை :1

அம்மாஞ்சியும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டுகடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள்.

அங்கு நிறைய மீன் கிடைத்தது. அம்மாஞ்சியின்நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். அம்மாஞ்சியும்சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் அம்மாஞ்சின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தைகிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"என்றான்.

கொஞ்ச நேரம் யோசித்த அம்மாஞ்சி சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்சநேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்றே..? எனகேட்ட நண்பனுக்குஅம்மாஞ்சி பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டுவர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".*******கதை : 2

அம்மாஞ்சி எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க அம்மாஞ்சி முடிவுசெய்தான்.

ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல...""ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?""அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே...

""பணத்தை யாரும்எடுத்துட்டாங்கன்னா..?""பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்..""அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்றுபெருமையாக சொன்னான் அம்மாஞ்சி.#

*******

கதை : 3ஒரு டாக்சீல ரெண்டு பேர் ஏறினாங்க... அப்படிக்கா போயிக்கிட்டே இருக்கும்போது.. பின்னால உக்காந்திருந்தவங்கல்ல ஒருத்தரு திடீர்னு டிரைவர் தோள தொட்டு "லெப்டுல போப்பா" ன்னு சொல்லியிருக்கார்... அந்த டிரைவர் அலறி அடிச்சிக்கிட்டு வண்டி கண்ட்ரோல விட்டுட்டான்...

நல்ல வேளை.. கொஞ்சம் மிஸ் ஆகி இருந்த எதிரா வந்த லாரியில கொண்டு போயி வண்டிய மோதியிருப்பான்... வண்டிக்குள்ள எல்லாரும் ஒரு நிமிஷம் சைலண்ட் ஆகிட்டாங்க... அந்த டிரைவர் திரும்பி பார்த்து சொன்னான்..." யப்பா இனி ஒரு தடவை இப்படி செய்யாதே... நான் ரொம்ப பயந்துட்டேன்..."

உடனே பின்னாடி உக்காந்திருந்தவன் சொன்னான் "சாரிப்பா!!.. ஒரே ஒரு தடவை தானே தட்டினேன்... அதுக்கே நீ இப்படி பயந்துக்குவேன்ணு தெரியாது..." அதுக்கு அந்த டிரைவர் சொன்னான் " உன் பேர்ல தப்பில்லப்பா... நான் இன்னைக்கு தான் இந்த வேலைக்கு சேர்ந்தேன்... இதுக்கு முன்னாடி 25 வருஷமா பிணம் எடுத்துட்டு போற வண்டில டிரைவரா வேலை பார்த்தேன்!!!"

காதல் !!!அவள் பெயர் !!!

காதல் !!!

உனக்காகவே வாழ்கிறேன் !!!தவிக்க விட்டாய் !!!தவிக்க விட்டாய் !!!

மறக்க முயல்கிறேன் !!!வெக்கமாய் இருக்கிறது !!!அஹிம்சாவாதியும்.. அறிவியல் அறிஞரும்.!!!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும, காந்தியாருக்கும் நடந்த கடிதப் போக்குவரத்து....

அக்டோபர் 2, 1931.

ஐன்ஸ்டீன் எழுதியது..

பெருமதிப்பிற்குரிய திரு. காந்தி!

என் இல்லத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் நண்பரின் வாயிலாக இந்தக் கடிதத்தை அனுப்ப விழைகின்றேன். உங்கள் வேலைகளின் மூலமாக நீங்கள் அஹிம்சை மூலம் வெற்றியடைய முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.

அதுவும் இம்சையை நம்பி செயல்படும் மனிதர்களிடமும் அஹிம்சை காட்டி வெல்ல முடியும் என்று காட்டி இருக்கின்றீர்கள்.உங்களின் எடுத்துக்காட்டு உங்கள் நாட்டின் எல்லைகளைத் தாண்டியும் பரவும் என்று நம்புவோம். அத்தகைய நம்பிக்கை பன்னாட்டு அதிகாரம் ஒன்று உருவாகவும், அனைவரும் மதிக்கும் படியும், போர் இல்லாமலேயே பிரச்னைகளைத் தீர்க்கும் விதமாகவும் உதவும்.

உண்மையும் வியப்புடனும்,

உங்கள்,

ஆ. ஐன்ஸ்டீன்

நான் உங்களை நேருக்கு நேர் சந்திக்க இயலும் என்று நம்புகின்றேன்

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் !!!

எஃப்.ஏ. தேர்வில் முதல் மாணவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பீகாரைச் சேர்ந்த அந்த மாணவர். இதற்கு மாதம் இருபத்தைந்து ரூபாய் உபகாரச் சம்பளமாக வழங்கியது கல்லூரி. இந்த உதவித் தொகை தொடர்ந்து பல ஆண்டுகள் அவருக்குக் கிடைத்து வந்தது. பின்னர் பி.ஏ. தேர்விலும் முதல் மாணவராகத் தேர்வானார். உபகாரச் சம்பளம் மாதம் தொண்ணூறு ரூபாயாக உயர்த்தித் தரப்பட்டது.

இவ்வாறு முதல் மாணவராகவே படிப்பில் தேர்ச்சி பெற்றுக் கொண்டே அந்த மாணவர் வந்ததில் ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காலகட்டத்தில் பீகார் மாநிலம் வங்காள மாநிலத்தில் சேர்ந்திருந்தது. பீகார் மாநில மாணவர்கள் எல்லோரும் கொல்கத்தா பல்கலைக் கழகத்தில்தான் சேர்ந்து படிக்க வேண்டும்.

வங்க மொழி பேசுவோர் பீகாரிகளைப் படிப்பறிவு இல்லாதவர்கள், மதிநுட்பம் இல்லாதவர்கள் எனப் பேசுவார்கள். இப்படி கேவலமாய்ப் பார்ப்பதை மாற்றியமைக்க வேண்டும் என்ற வெறியோடுதான் அந்த மாணவர் படித்து முதல் மாணவராக வந்திருக்கிறார்.

அந்த மாணவர் யார் என்றுதானே கேட்கிறீர்கள்? இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திரபிரசாத்.

கோர்ட்டுக்குப் போன குதிரை !!!

நீதிமன்றத்திற்கு தினமும் இராஜாஜி தனது குதிரை வண்டியில் செல்வது வழக்கம். ஒருநாள் நீதிமன்றத்திற்குப் புறப்படும்போது வண்டியில் பூட்டிய குதிரையின் மீது புழுதியும் சாணமும் படிந்திருப்பதைக் கண்டார். குதிரையைக் குளிப்பாட்டி வரும்படி கூறினார்.வண்டிக்காரன் குதிரையைக் குளிப்பாட்டி வண்டியில் பூட்டினான். இராஜாஜி ஏறி அமர்ந்தார். குதிரைக்காரன் ஏறி உட்கார்வதற்குள் குதிரை வண்டியை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கிவிட்டது. இராஜாஜியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஏதாவது ஓர் இடத்தில் குதிரை களைப்படைந்து நிற்கத்தானே போகிறது என்ற நம்பிக்கையில் அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

குதிரை ஓடி கடைசியாக ஓரிடத்தில் போய் நின்றது. அது எந்த இடம் தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இராஜாஜி வழக்கமாகச் செல்லும் நீதிமன்றம்

சில சுவையான உண்மை நிகழ்வுகள் !!!

  • இந்திராவின் ஆட்சிக்காலம் அது.!!!

மும்பை நேரு விஞ்ஞான மையத்தில் அப்துல்கலாம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட நேரம். ""பிரதமர் இந்திரா காந்தி தங்களைச் சந்திக்க விரும்புகிறார். நாம் இருவரும் சேர்ந்து சென்று சந்திக்கலாம்'' என்று இஸ்ரோ தலைவர் தவான், அப்துல்கலாமை அழைத்தார்.
கலாம் செல்வதற்குத் தயங்கினார். தவான் காரணம் கேட்டதற்கு கலாம் சொன்னார்: ""நான் எப்போதும்போல் சாதாரண நீலவண்ணச் சட்டையே அணிந்திருக்கிறேன். கால்களுக்குப் பூட்சுகள் இல்லை. செருப்புகள்தான் அணிந்துள்ளேன். இந்தக் கோலத்தில் பிரதமரைச் சந்திக்கத் தயக்கமாக இருக்கிறது
'' என்றார்.அதற்கு தவான், ""உடையைப் பற்றி கவலைப்படாதீர்கள். வெற்றி என்கிற பேரழகான ஆடையை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்'' என்று கூறி பிரதமரிடம் அழைத்துச் சென்றார்.

***************************** *******************************************

மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் பேச்சில் நகைச்சுவை பொங்கும். ஒருமுறை கச்சேரி ஒன்றில் தமது பாட்டுக்குப் பொருந்தாமல் மிருதங்கம் வாசித்துக் கொண்டிருந்த வித்வானைப் பார்த்துச் சொன்னார்: ""என் பாட்டுக்கு வாசிப்பா. நீ "உன்பாட்டுக்கு' வாசிச்சுக்கிட்டே போறியே.''

********************************** ****************************************

ஒரு முறை திருச்சிக்கு வந்திருந்தார் அப்போதைய முதலமைச்சர் காமராஜர். அவரை வரவேற்கக் கையில் மாலையுடன் காத்திருந்தார் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர். அவரைக் கண்ட காமராஜர், ""படிப்பு சொல்லிக் கொடுக்கச் சொன்னா படிக்காதவனுக்கு மாலை போட்றதுக்கு க்யூல நிககி்றீங்களே'' என்றார்.
********************************** ************************************

""சின்ன வயதில் எனக்குப் பெரிதும் பொறுமை கிடையாது. திருமணத்திற்குப் பின்தான் நான் பொறுமையாளன் என்று பலராலும் பாராட்டப்பெற்றேன். பொறுமை பொலிவது உண்மையானால், அது இயற்கையில் அரும்பியதாகாது. அது கமலாம்பிகையினின்று இறங்கிக் கால் கொண்டது என்றே சொல்வேன்''- என்று சுயவிமர்சனம் செய்துகொண்டவர் தமிழ்த்தென்றல் திரு.வி.க., அமைதிக் கொள்ள வைத்த கமலாம்பிகை யார் தெரியுமா? அவர் மனைவி.********************************* ******************************************