>

Archives

கவிதைகள் !!!

>> Wednesday, June 24, 2009

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!


உலகை வெல்வோம் !

மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !

வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !

ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !

முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !

மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !

தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !

தொட்ட உயரமே
கடைசியில்லை !

எழுந்து வா . . .

உலகை வெல்வோம் !

அன்னையே மன்னித்து விடு ! - அன்னையர் தின சிறப்புக் கவிதை

அன்னையே என் கால்களை மன்னித்து விடு !

கூட்டத்தில் நடந்தால்கூட யார் மேலும் பட்டுவிடக்கூடாதென எட்டு மேல் எட்டு வைத்து நடக்கும் கால்களே...
உன்னால் கருவறையை மட்டும் எப்படி உதைக்க முடிந்தது?
கருவறை உதைத்த கால்களைக் கையில் தூக்கிக் கொஞ்சியவளே...
என் கால்களை மன்னித்து விடு !


எங்கே என் அம்மா ? - அன்னையர் தின சிறப்புக் கவிதை

எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
தாலாட்டுக் கேட்டுத்
தூங்கியதுமில்லை!
தாயின் குரல் கேட்டு
எழுந்ததுமில்லை!
என் மழலைமொழி
ரசிக்க
இங்கு யாருமில்லை
என்னை மடியில் வைத்துக்
கொஞ்ச
ஒருவரும் இல்லை!
இடுப்பில் சுமந்து
எவரும் எனக்கு
ஊட்டியதுமில்லை
கடைவாய் துடைத்து
யாரும் என்
கன்னம் கிள்ளியதில்லை!
பிடித்து நடக்க
எனக்கொரு
ஆள்காட்டி விரல்
கிடைத்ததில்லை!
சிலேட்டில் எழுதிய
என் எழுத்துக்களை
யாரும் வியந்ததுமில்லை!
ஒருமுறையேனும்
பால் கொடுத்தாளோ
தெரியவில்லை!
என்னை ஏன்
அநாதையாக்கினாளோ
புரியவில்லை!
தேடுகிறேன் நான்
எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
சேராத நட்பு

அலைபேசியில் அவனை
அழைக்க பணமில்லை அன்று !
பணமிருந்தும்
அழைக்க மனமில்லை இன்று !
'தமிழோடு' க்காக
அசோக்குமார்மழை !!!

பூமிப் பெண் பூப்பெய்தி விட்டாளோ . . .

வான மங்கை நீராட்டுகிறாள் !


நாங்களும் பாரதிதான்

ஆடையைக் கண்டுபிடித்தவன் கண்ணத்தில்

ஓங்கி ஒரு அறைவிடவேண்டும் !
உடல் மறைக்க எப்போது நினைத்தானோ
அன்றுதான் நான்கு சுவர் தேவைப்பட்டிருக்கும் !
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம் தெருவெல்லாம் வாடகை வீட்டுக்குக் கூட !
ஒரு வகையில் நாங்களும் காணி நிலம் தேடும் பாரதிதான் !


காதலே நீ வந்தாலே !

பசியின்மைபவித்ரமாய் போற்றப்படும் !தூக்கமின்மைதுளித் துளியாய் ரசிக்கப்படும் !கிறுக்கல்கள்கவிதைகள் ஆகிப்போகும் !உளறல்கள்உருக்கும் வார்த்தைகளாய் ஆகும் !கனவுகளேநாளின் முக்கால்பாகம் ஆட்சி செய்யும் !கண்ணாடி கூடகதைகள்பேசி விட்டுப்போகும் !காத்திருத்தல் கூடகற்கண்டாய் இனிக்கும் !மனசுபூமிப் பந்தைச் சுமப்பது போலபாரமாய் இருந்தாலும்வானமே எல்லையாய்பறந்து திரியும் !இதயம் வலம் மாறித் துடிக்கும் !இவை எல்லாம்மனசுக்குள்காதலே நீ வந்தாலே!


தாவணி!

இது பூபோட்ட தாவணியாஇல்லைஇந்தப் பூ போட்ட தாவணியா!


காதலியே...

உனக்காகக் காத்திருந்து
என் கால்கள் வலித்தன!

நின்றதால் அல்ல

இதயம் கனத்ததால் !
உபசாரி

தாகம் தீர்க்கும்
நீரும்
இவளும்
ஒரே சாதி
செய்யும் தொழிலே
தெய்வம்
தொழில் செய்யும்
இடமே கோவில்
இங்கு தீபம்
எரிகிறதோ இல்லையோ!
தினம்தினம் தீபமாய்
எரிபவள் இவள் மட்டும் தான்!!
தன்னை
எரித்து
தண்ணீராய்
வாழ்பவளே!!
உனக்கு
மட்டும் ஏன்
இத்தனை
நாமங்கள்?
வேசி,
விபச்சாரி,
நடத்தைக் கெட்டவள்,
ஒழுக்கமற்றவள்!
உன்னைப்
பரைசாற்றும் - இவன்
ஒழுக்கம்
எங்கே?
வரதட்சனை
கேட்கும்
இவனும் ஒரு
வேசி தான்!!!
சிசுவதை
செய்கிறான்
சிசுவைக்கூட
தவறாய்ப் பார்க்கிறான்
இவன்
காமப்பசிக்கு
வடிகால் தரும் நீ
ஒழுக்கமற்றவளா?
தன் உழைப்பையும் அறிவையும்
வெளிநாட்டவருக்கு தானே
விலைப்பேசும்
இவனும் உன்னைப் போன்றவன் தான்!!!
மன்னிக்கவும்!
இவனை விட
நீ மேன்மையானவள் - ஒரு
மருந்தாக நீயிருப்பதால்
உன்னை
வணங்கும் அளவிற்கு
உன்னை நான்
உயர்த்தவில்லை!!!
தசை நரம்பு
எலும்பு இவைகளால்
பின்னப்பட்ட ஒரு உயரிய
மனிதனாய் பார்க்கிறேன்!!!
வெளிப்படையாய்
இருக்கும் உன்னை
ஒழுக்கமற்றவளாய் கூற - என்
நா கூசுகிறது
உன்னையும்
மதிக்கிறேன் - ஒரு
பெண்ணாய்!
உபசாரியாய்!!!


வீழ்ந்தாலும் ...

மழைத் துளியாய் வீழ்ந்தாலும் சிப்பியின் வயிற்றில் வீழ்முத்துகளாய் வெளிவருவாய்!

கற்களாய் வீழ்ந்தாலும்
சிற்பியின் உளிபட்டு விழும் கற்களாய் வீழ்சிற்பமாய் உருப்பெருவாய்!

நீராய் வீழ்ந்தாலும்
நீர்வீழ்ச்சியாய் வீழ்வீழும்போதும் கம்பீரமாய் ரசிக்கப்படுவாய்!

வண்ணமாய் வீழ்ந்தாலும்
வானவில்லாய் வீழ்விண்ணும் மண்ணும் இணையும் வண்ணப் பாலமாய் விரும்பப்படுவாய்! நெருப்பாய் வீழ்ந்தாலும்
எரிமலைக் குழம்பாய் வீழ்விழ்ந்தபின்னும் விளை நிலமாய் உபயோகப்படுவாய்!
தன்னம்பிக்கை

மேலெழும் நீரூற்றைவிடகீழே விழும் அருவிக்குத்தான்எத்தனை கம்பீரம் !
கீழே வீழ்வதிலும் எத்தனை எழுச்சி!
மனிதா ...

வீழ்ந்தாலும் - நீஅருவி போல் கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு வீழ் !
வழிகள் ஆயிரம்அதுவே உன் ஆயுதம் !

பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் . . .

உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான் என்னை
உரமாக !
இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் நான்
எருவாக !
வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன் நான்
முற்றம் தெளிக்க !
முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன் நான்
பூசணிப்பூ தாங்கும் கையாக !
கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான் என்னை
களம் தெளிக்க !
வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள் என்னை
மருதாணியாக !
பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
நான் ஆவேன்
அவசர சாமியாக !
இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !
மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே
உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்
கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்
குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !கற்கண்டு

கற்கண்டை ருசித்திருக்கிறேன்.

இப்போது தான் கேட்கிறேன்.

அட!

நீ பேசினாயோ...

தொலைந்த நான்

தொலைந்த என்னைத் தேடி தேடிஅலைந்த போது தான் உணர்ந்தேன் தொலைந்த நான் உன்னிடம் - நீயோஎன்னிடம் !


நினைவுகள்

உன் நினைவுகளைக் காய்ந்த சருகுகளாய் என் காலடியில் உதிர்த்த நிம்மதியில்கண் அயர்ந்தேன்.

விதியோ அவைகளயேமண் உரமாய் மாற்றி என்னைத் துளிர்க்கசெய்துவிட்டது.

வலிகளோடு மீண்டும் நான் !


கண்ணாடி

இப்போதெல்லாம் நான் கண்ணாடி முன் அதிகமாய் நிற்கிறேன்.

ஏன் தெரியுமா?
அதில் தெரிவதெல்லாம் நான் அல்ல !பேனா

என் பேனா எழுதிய கவிதைகளிலேயேஅழகானது உன் பெயர் தான் அன்பே அந்த கர்வமோ என்னமோ அதை தவிர வேறேதுவும் எழுத மாட்டேன் என்கிறது.
0 comments:

தரம்

கவிதைகள் !!!

ஒரு மாறுப்பட்ட கற்பனை !!!


உலகை வெல்வோம் !

மூச்சடக்க
முயலாவிட்டால்
முத்து உனக்கில்லை !

வாசலையே
தாண்டாவிட்டால் - நீ
வானம்
பார்க்கப் போவதில்லை !

ஒருநாள் மட்டுமே
வாழும் பூச்சிகள் கூட
ஓய்வெடுத்ததாய்
செய்திகள் இல்லை !

விடிய விடிய
மழை பெய்தாலும்
எறும்பு
பட்டினியாய்
படுத்ததில்லை !

முட்டி முட்டி
பால் குடிக்க
குட்டிகளுக்கு
சொல்லித்தந்தது
யாருமில்லை !

மூலையிலே
முடங்கிக்கிடந்தால்
முகட்டில் உனக்கு
இடமில்லை !

தொடமுடியா
உயரமென்று எதுவுமில்லை !

தொட்ட உயரமே
கடைசியில்லை !

எழுந்து வா . . .

உலகை வெல்வோம் !

அன்னையே மன்னித்து விடு ! - அன்னையர் தின சிறப்புக் கவிதை

அன்னையே என் கால்களை மன்னித்து விடு !

கூட்டத்தில் நடந்தால்கூட யார் மேலும் பட்டுவிடக்கூடாதென எட்டு மேல் எட்டு வைத்து நடக்கும் கால்களே...
உன்னால் கருவறையை மட்டும் எப்படி உதைக்க முடிந்தது?
கருவறை உதைத்த கால்களைக் கையில் தூக்கிக் கொஞ்சியவளே...
என் கால்களை மன்னித்து விடு !


எங்கே என் அம்மா ? - அன்னையர் தின சிறப்புக் கவிதை

எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
தாலாட்டுக் கேட்டுத்
தூங்கியதுமில்லை!
தாயின் குரல் கேட்டு
எழுந்ததுமில்லை!
என் மழலைமொழி
ரசிக்க
இங்கு யாருமில்லை
என்னை மடியில் வைத்துக்
கொஞ்ச
ஒருவரும் இல்லை!
இடுப்பில் சுமந்து
எவரும் எனக்கு
ஊட்டியதுமில்லை
கடைவாய் துடைத்து
யாரும் என்
கன்னம் கிள்ளியதில்லை!
பிடித்து நடக்க
எனக்கொரு
ஆள்காட்டி விரல்
கிடைத்ததில்லை!
சிலேட்டில் எழுதிய
என் எழுத்துக்களை
யாரும் வியந்ததுமில்லை!
ஒருமுறையேனும்
பால் கொடுத்தாளோ
தெரியவில்லை!
என்னை ஏன்
அநாதையாக்கினாளோ
புரியவில்லை!
தேடுகிறேன் நான்
எங்கே என் அம்மா
எங்கே என் அம்மா?
சேராத நட்பு

அலைபேசியில் அவனை
அழைக்க பணமில்லை அன்று !
பணமிருந்தும்
அழைக்க மனமில்லை இன்று !
'தமிழோடு' க்காக
அசோக்குமார்மழை !!!

பூமிப் பெண் பூப்பெய்தி விட்டாளோ . . .

வான மங்கை நீராட்டுகிறாள் !


நாங்களும் பாரதிதான்

ஆடையைக் கண்டுபிடித்தவன் கண்ணத்தில்

ஓங்கி ஒரு அறைவிடவேண்டும் !
உடல் மறைக்க எப்போது நினைத்தானோ
அன்றுதான் நான்கு சுவர் தேவைப்பட்டிருக்கும் !
எவன் செய்த தவறோ ..
இன்று அலைகிறோம் தெருவெல்லாம் வாடகை வீட்டுக்குக் கூட !
ஒரு வகையில் நாங்களும் காணி நிலம் தேடும் பாரதிதான் !


காதலே நீ வந்தாலே !

பசியின்மைபவித்ரமாய் போற்றப்படும் !தூக்கமின்மைதுளித் துளியாய் ரசிக்கப்படும் !கிறுக்கல்கள்கவிதைகள் ஆகிப்போகும் !உளறல்கள்உருக்கும் வார்த்தைகளாய் ஆகும் !கனவுகளேநாளின் முக்கால்பாகம் ஆட்சி செய்யும் !கண்ணாடி கூடகதைகள்பேசி விட்டுப்போகும் !காத்திருத்தல் கூடகற்கண்டாய் இனிக்கும் !மனசுபூமிப் பந்தைச் சுமப்பது போலபாரமாய் இருந்தாலும்வானமே எல்லையாய்பறந்து திரியும் !இதயம் வலம் மாறித் துடிக்கும் !இவை எல்லாம்மனசுக்குள்காதலே நீ வந்தாலே!


தாவணி!

இது பூபோட்ட தாவணியாஇல்லைஇந்தப் பூ போட்ட தாவணியா!


காதலியே...

உனக்காகக் காத்திருந்து
என் கால்கள் வலித்தன!

நின்றதால் அல்ல

இதயம் கனத்ததால் !
உபசாரி

தாகம் தீர்க்கும்
நீரும்
இவளும்
ஒரே சாதி
செய்யும் தொழிலே
தெய்வம்
தொழில் செய்யும்
இடமே கோவில்
இங்கு தீபம்
எரிகிறதோ இல்லையோ!
தினம்தினம் தீபமாய்
எரிபவள் இவள் மட்டும் தான்!!
தன்னை
எரித்து
தண்ணீராய்
வாழ்பவளே!!
உனக்கு
மட்டும் ஏன்
இத்தனை
நாமங்கள்?
வேசி,
விபச்சாரி,
நடத்தைக் கெட்டவள்,
ஒழுக்கமற்றவள்!
உன்னைப்
பரைசாற்றும் - இவன்
ஒழுக்கம்
எங்கே?
வரதட்சனை
கேட்கும்
இவனும் ஒரு
வேசி தான்!!!
சிசுவதை
செய்கிறான்
சிசுவைக்கூட
தவறாய்ப் பார்க்கிறான்
இவன்
காமப்பசிக்கு
வடிகால் தரும் நீ
ஒழுக்கமற்றவளா?
தன் உழைப்பையும் அறிவையும்
வெளிநாட்டவருக்கு தானே
விலைப்பேசும்
இவனும் உன்னைப் போன்றவன் தான்!!!
மன்னிக்கவும்!
இவனை விட
நீ மேன்மையானவள் - ஒரு
மருந்தாக நீயிருப்பதால்
உன்னை
வணங்கும் அளவிற்கு
உன்னை நான்
உயர்த்தவில்லை!!!
தசை நரம்பு
எலும்பு இவைகளால்
பின்னப்பட்ட ஒரு உயரிய
மனிதனாய் பார்க்கிறேன்!!!
வெளிப்படையாய்
இருக்கும் உன்னை
ஒழுக்கமற்றவளாய் கூற - என்
நா கூசுகிறது
உன்னையும்
மதிக்கிறேன் - ஒரு
பெண்ணாய்!
உபசாரியாய்!!!


வீழ்ந்தாலும் ...

மழைத் துளியாய் வீழ்ந்தாலும் சிப்பியின் வயிற்றில் வீழ்முத்துகளாய் வெளிவருவாய்!

கற்களாய் வீழ்ந்தாலும்
சிற்பியின் உளிபட்டு விழும் கற்களாய் வீழ்சிற்பமாய் உருப்பெருவாய்!

நீராய் வீழ்ந்தாலும்
நீர்வீழ்ச்சியாய் வீழ்வீழும்போதும் கம்பீரமாய் ரசிக்கப்படுவாய்!

வண்ணமாய் வீழ்ந்தாலும்
வானவில்லாய் வீழ்விண்ணும் மண்ணும் இணையும் வண்ணப் பாலமாய் விரும்பப்படுவாய்! நெருப்பாய் வீழ்ந்தாலும்
எரிமலைக் குழம்பாய் வீழ்விழ்ந்தபின்னும் விளை நிலமாய் உபயோகப்படுவாய்!
தன்னம்பிக்கை

மேலெழும் நீரூற்றைவிடகீழே விழும் அருவிக்குத்தான்எத்தனை கம்பீரம் !
கீழே வீழ்வதிலும் எத்தனை எழுச்சி!
மனிதா ...

வீழ்ந்தாலும் - நீஅருவி போல் கம்பீரமாய் தன்னம்பிக்கையோடு வீழ் !
வழிகள் ஆயிரம்அதுவே உன் ஆயுதம் !

பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் . . .

உழுது போட்ட நிலத்துக்கு
உழவன் ஊட்டுவான் என்னை
உரமாக !
இருந்த இடத்திலேயே
காய்ந்து போனால்
எரிவேன் நான்
எருவாக !
வளையல் கையால்
வழிக்கப்பட்டு
குளிர் நீரோடு
கலந்திருப்பேன் நான்
முற்றம் தெளிக்க !
முற்றத்தின் முதுகினிலே
இருவிரலால் மலரெழுதிய
கவிதையாம்
மாக்கோலத்தின் மையத்தில்
அமர்ந்திருப்பேன் நான்
பூசணிப்பூ தாங்கும் கையாக !
கம்பு சோளக்
கதிர்கள் காயும்
களத்திலெழும் புழுதிபடிய
கரிசல்காட்டான்
கரைத்திருப்பான் என்னை
களம் தெளிக்க !
வீட்டுத்தோட்டத்தில் நட்டிய
முருங்கைக் கட்டைக்கு
மூதாட்டி வைத்திருப்பாள் என்னை
மருதாணியாக !
பிடித்து வைத்து
அருகம்புல் செருகிவைத்தால்
நான் ஆவேன்
அவசர சாமியாக !
இப்படியெல்லாம் மட்டுமல்லாது
எப்படி எப்படியோ
பயன்பட்டிருப்பேன்
பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் !
மாநகரச் சாலை
ஓரத்தில் பிறந்ததாலே
உதிர்ந்துபோன
மரத்தின் முடிகளோடும்
கசக்கிப்போட்ட
மரத்தின் பேத்திகளோடும்
குப்பை வண்டியிலே
பயணற்றுப் பயணிக்கிற
மாட்டுச் சாணம் நான்
மனமுடைந்து புலம்புகிறேன்
மறுபிறவியாவது
பட்டிக்காட்டில் வேண்டுமென்று !கற்கண்டு

கற்கண்டை ருசித்திருக்கிறேன்.

இப்போது தான் கேட்கிறேன்.

அட!

நீ பேசினாயோ...

தொலைந்த நான்

தொலைந்த என்னைத் தேடி தேடிஅலைந்த போது தான் உணர்ந்தேன் தொலைந்த நான் உன்னிடம் - நீயோஎன்னிடம் !


நினைவுகள்

உன் நினைவுகளைக் காய்ந்த சருகுகளாய் என் காலடியில் உதிர்த்த நிம்மதியில்கண் அயர்ந்தேன்.

விதியோ அவைகளயேமண் உரமாய் மாற்றி என்னைத் துளிர்க்கசெய்துவிட்டது.

வலிகளோடு மீண்டும் நான் !


கண்ணாடி

இப்போதெல்லாம் நான் கண்ணாடி முன் அதிகமாய் நிற்கிறேன்.

ஏன் தெரியுமா?
அதில் தெரிவதெல்லாம் நான் அல்ல !பேனா

என் பேனா எழுதிய கவிதைகளிலேயேஅழகானது உன் பெயர் தான் அன்பே அந்த கர்வமோ என்னமோ அதை தவிர வேறேதுவும் எழுத மாட்டேன் என்கிறது.0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP