நானும் நிழலும்
>> Wednesday, June 10, 2009
நிழலை பிடிக்கவேண்டி
நானதைத் தொடர்ந்திட்டேன்தொடர்ந்தே
நானும் செல்லநிழலும் விலகக் கொள்ள
ஆட்டம் தொடங்கியதுஎனக்கும் நிழலுக்குமாய்
இடமும் வலமுமாகமுன்னும் பின்னுமாக
மேலும் கீழுமாகவிலகி நழுவியது
அதனை நானும் கண்டேன்பல்வேறு வடிவினிலே
நெடிதும் சிறியதுமாய்சில நொடி மாயமாய்பிடிக்க இயலவில்லைசோர்ந்தே நானமர்ந்தேன்அருகே நிழலும் கண்டுஉணர்ந்தேன் அந்நொடியேநானும் நிழலும் ஒன்றுஇறைவனும் அப்படித்தானோ?
0 comments:
Post a Comment