>

Archives

உலகின் மிகப் பாரிய இழப்புக்களைத் தந்த விபத்துக்கள் !!!

>> Sunday, August 23, 2009

உலகில் ஒவ்வொரு நாளும் எதோ ஒரு மூலையில் எதோ ஒரு விபத்து இடம்பெற்றுக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு விபத்துமே இழப்புக்களைத் தருபவை.அந்த இழப்புக்களின் பாதிப்புக்கள் சம்பந்தப் பட்டவர்களுக்கே உணரக்கூடிய வலிகளைத் தருகின்றன.

விபத்துக்கு வரைவிலக்கணப்படி பார்த்தால் இழப்பு,காயம்,பாதிப்பு,நஷ்டங்களை ஏற்படுத்துகின்ற விரும்பத்தகாத,துரதிர்ஷ்டவசமான திடீர் நிகழ்வு என்று சொல்லலாம்.

விபத்துகளில் இழக்கப்படும் ஒவ்வொரு உயிருமே விலை மதிக்க முடியாதவை. உலக சரித்திரத்திலே உயிர்களை அதிகளவில் பலி கொண்ட பல விபத்துக்கள் நிகழ்ந்திருந்தாலும், பணப் பெறுமதி அடிப்படையில் அதிக பொருள் சேதத்தை ஏற்படுத்திய மாபெரும் விபத்துகளையே ($) கீழே வரிசைப் படுத்தியிருக்கிறேன்.

இதிலே முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது, போர் அல்லது தீவிரவாத நடவடிக்கை காரணமாக நிகழ்ந்த எந்த ஒரு அழிவும் இங்கு குறிப்பிடப் படவில்லை.

டைட்டனிக் கப்பல் விபத்து !!!

டைட்டனிக் திரைப்படம் மூலமாக உலகப் பிரசித்தி பெற்ற இந்தக் கப்பல் விபத்து 1912ஆம் ஆண்டு இடம்பெற்றது.கட்டி முடித்த போது உலகின் மிகப் பிரமாண்டமான சொகுசுக் கப்பலாகக் கருதப்பட்ட டைடானிக் தனது வெள்ளோட்டத்திலேயே பனிப்பாறையுடன் மோதுண்டு கடலுள் சங்கமமானது. 1500 பயணிகளையும் பலியெடுத்த டைடானிக் கட்டி முடிக்க ஏற்பட்ட மொத்த செலவு 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அப்போதே செலவானது.. இப்போதைய மதிப்பில் சுமார் 150 மில்லியன் டொலர்கள்.

வீல்ட்ஹால் விபத்து !!!

ஜெர்மனியில் 2004 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வீல்ட்ஹால் பாலத்தின் மீது 32000 லிட்டர் எரிபொருள் கொண்டு சென்ற எரிபொருள் தாங்கி ஒன்றுடன் கார் ஒன்று மோதியது.90 அடி உயரமான பாலத்திலிருந்து கீழே ஆட்டோ பான் என்று அழைக்கப்படும் பிரதான பாதையில் வீழ்ந்த எரிபொருள் தாங்கி தீப்பிடித்து எரிந்தது.அந்த வெப்பம் தாங்கமுடியாமல் பாலமும் வெடித்தது.தற்காலிகமாகப் பாலத்தைத் திருத்த ஆனா செலவு 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.மீளப் பாலம் கட்ட ஆன செலவு 318 மில்லியன் டொலர்கள்.

மெட்ரோ லிங்க் விபத்து !!!

அமெரிக்காவின் கலிபோர்நியாவில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 இல் இடம்பெற்ற மிகக் கோரமான தொடருந்து விபத்து இது. லொஸ் அன்ஜெலிஸ் தொடருந்து நிலையத்தில் எதிரும் புதிருமாக இரண்டு தொடருந்துகள் (அது தான் ரயில்கள்) மிக வேகமாக மோதிக்கொண்டதில் 15 பேர் பரிதாபமாகப் பலியாயினர்.மெட்ரோ லிங்க் தொடருந்து வந்த பொழுது அதை நிறுத்தும் சமிக்ஞ்சை வழங்க வேண்டிய அதிகாரி sms அனுப்புவதில் பிஸியாக இருந்தாராம். உயிர்களின் நஷ்ட ஈடு,பொருள் இழப்பு எல்லாம் சேர்த்து இழப்பு 500 மில்லியன் டொலர்கள்.

B2 பொம்பர்கள் விபத்து !!!

குவாமில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து மேலெழுந்த அமெரிக்க விமானப்படையின் B2 குண்டுவீச்சு விமானம் சமிக்ஞ்சை கோளாறு காரணமாக தலை குப்புறமாக வீழ்ந்து 1.4 பில்லியன் டாலர்களைக் கரியாக்கியது.இதுவரைக்கும் மிக அதிக இழப்பான விமான விபத்தாக இதுவே கருதப்படுகிறது. எனினும் விமானிகள் இருவருமே வெளியே பரஷுட்டில் பாய்ந்து உயிர் தப்பிக் கொண்டனர்.

எக்சன் வல்டஸ் எண்ணைக் கசிவு !!!

அமெரிக்காவின் அலாஸ்கா பிராந்தியத்தில் எக்சன் நிறுவனத்துக்கு சொந்தமான வல்டஸ் கப்பல் பவளப்பாறை ஒன்றுடன் மோதியதை அடுத்து ஏற்பட்ட எண்ணெய்க் கசிவில் 10.8 மில்லியன் கலன் எண்ணெய் கடலோடு கலந்து வீணாகியது. இது நடந்தது 1989 ஆம் ஆண்டு. எண்ணெய்க் கழிவுகளை சுத்திகரிக்க ஆன செலவு மட்டும் 2.5 பில்லியன் டொலர்.

பைபர் அல்பா எண்ணெய்க் கிணறு விபத்து !!!

1988 இல் ஜூலை மாதம் ஆறாம் திகதி இங்கிலாந்துக்கு சொந்தமான வட கடலில் அமைந்திருந்தன பைபர் எண்ணெய்க் கிணறுகளில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து முழு எண்ணெய்க் கிணற்றுத் தளத்தையும் எரித்து நாசமாக்கியது. இரண்டு மணித்தியாலங்களில் 16 தொழிலாளர்கள் பலியானதோடு 300 கோபுரங்கள்,100 பாரிய எண்ணெய்க் குழாய்கள் என்று அனைத்துமே சாம்பராயின.அந்தக் காலகட்டத்தில் அதிக எண்ணெய் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய பைபர் முழுவதுமாக இல்லாது போயிற்று.மொத்த இழப்பு 3.4 பில்லியன் டொலர்கள்.

சலேன்ஜர் விண் விபத்து !!!

அமெரிக்காவினால் 1986 ஆம் ஆண்டு ஏவப்பட்ட சல்லேன்ஜர் விண்கலம் விண்ணில் எழுந்து 73 வினாடிகளில் வெடித்து சிதறியது.ஒரு சிறிய தொழிநுட்பக் கோளாறு தான் இதற்கான காரணம் எனினும்,ஆன செலவோ மொத்தம் 5.5 பில்லியன் டொலர்கள்.

ப்ரெஸ்டீஜ் எண்ணெய்க் கசிவு !!!

கிரேக்க நாட்டுக்கு சொந்தமான ப்ரெஸ்டீஜ் என்ற எண்ணெய்க் கப்பல் ஸ்பானிய,பிரெஞ்சு கடற்கரையோரமாக 2002 ஆம் ஆண்டு நவெம்பர் 13 ஆம் திகதி பயணம் மேற்கொண்டிருந்தவேளையில் சந்தித்த மாபெரும் புயல் காற்றே இந்த மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு விபத்துக்குக் காரணம்.77000 தொன்கள் கொண்ட எண்ணெய்த் தாங்கிகளை ஏற்றிக் கொண்டு சென்றுகொண்டிருந்த இந்தக் கப்பலைப் புயல் தாக்கியதும் சில தாங்கிகள் வெடித்து சிதறின.

உடனடியாக கப்பல் தலைவன்,முதலில் ஸ்பானிய கடற்படையிடமும்,பின்னர் பிரெஞ்சு,போர்த்துக்கல் கடற்படையிடமும் உதவி கோரி கோரிக்கை விடுத்தபோதும்,கரையொதுங்க அனுமதி கேட்டபோதும் மறுக்கப்படவே செய்வதறியாமல் திகைத்துப்போன கப்பல் தலைவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி. இந்த மூன்று நாடுகளுமே கப்பலைத் தங்கள் கரையோரம் ஒதுங்க வேண்டாம் என்று விரட்டின. நடுக்கடலில் கடும் புயலில் மாட்டிக்கொண்ட கப்பலைப் புயல் இரண்டாகப் பிளந்தது. இருபது மில்லியன் கலன் எண்ணெய் கடலிலே வீணாகியது.

இதன் காரணமாக பிரான்ஸ்,ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மைல்கள் நீளமான கடற்கரைகள் மாசடைந்து போயின.சேதாரங்களும்,சுத்திகரிப்புப் பணிகளுக்கும் ஆன மொத்த செலவு 12 பில்லியன் டொலர்கள்.

கொலம்பியா விண்கல விபத்து !!!

1978 ஆம் ஆண்டில் ஆரம்பமான கொலம்பியா விண்கலக் கட்டுமானப் பணிகளின் மூலம் அமெரிக்கா உலகின் தலை சிறந்த விண்கலத்தை அமைத்த பெருமையை அடைந்தது.

25 ஆண்டுகள் நீடித்த அந்த பெருமை, 2003 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தின் முதலாம் திகதி டெக்சாஸ் மாத்தின் வான் பரப்பில் நிகழ்ந்த கொடூர விபத்தோடு இல்லாமல் போயிற்று.விண்கலத்தின் இறக்கைகள் ஒன்றில் ஏற்பட்ட சிறுதுவாரம் பேரு விபத்தை ஏற்படுத்தியது.விண்கலத்தில் என் துவாரம் ஏற்பட்டது என்று ஆராயவே 500 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டன. மீள் கட்டுமானப் பணிகளுக்கு மேலுமொரு 300 மில்லியன் டொலர்கள்.மொத்த இழப்பு மட்டும் 13 பில்லியன் டொலர்கள்.

செர்னோபில் அணு உலை விபத்து !!!

1986 ஆம் ஆண்டு நடந்த செர்னோபில் அணு உலை விபத்து தான் உலகில் யுத்தங்கள் இல்லாமல் மிகப் பாரிய அழிவை ஏற்படுத்திய சம்பவம். வரலாற்றில் கறை படிந்த நாளாகிப் போன ஏப்ரல் 26,1986 - அன்று தான் அப்போதைய சோவியத் யூனியனின் உக்ரைனில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட கசிவு மிக நீண்ட காலம் நீடிக்கக்கூடிய அழிவுகளைத் தந்தது.பலவருடம் கழித்து புற்று நோயினாலும் பலியானோரோடு சேர்த்து 125000.உக்ரைனின் அரைவாசிப் பிரதேசம் அணுக்கசிவின் காரணமாக இன்றுவரை பாதிக்கப் பட்டுள்ளது.இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேறிடங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவரானார்கள்.1.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இன்றுவரை கதிரியக்கத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர்.எல்லாவற்றுக்கும் சேர்த்து இழப்பு வேறெந்த விபத்துமே நெருங்க முடியாத 200 பில்லியன் டொலர்கள்.

இனிமேலுமாவது இந்த விபத்துக்களை வேறெந்த விபத்துகளும் இழப்பு எண்ணிக்கையிலோ,பிரம்மாண்டதிலோ முந்தக் கூடாது என்று எண்ணுவோமாக..

2 comments:

sajuna November 19, 2009 at 7:45 AM  

hi shankar,
fantastic...
daily niraiye vibathukalai paarkirom,,kekirom but inthe yosanai vanthathillai.romba nandri..
pazhe vishayanggalai ondrage serthu taruvatharku.. ithu migavum payanullethage irukum.. irukirathu..

Shanthi November 19, 2009 at 7:53 AM  

Really super . ithuvarai naan paarthiraatha oru puthiya pataippu anaithum ore idathil .

தரம்

sajuna said...

hi shankar,
fantastic...
daily niraiye vibathukalai paarkirom,,kekirom but inthe yosanai vanthathillai.romba nandri..
pazhe vishayanggalai ondrage serthu taruvatharku.. ithu migavum payanullethage irukum.. irukirathu..

Shanthi said...

Really super . ithuvarai naan paarthiraatha oru puthiya pataippu anaithum ore idathil .

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP