>

Archives

அன்னி பெசன்ட் அம்மை யார் !!!

>> Thursday, August 20, 2009

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம். திருநெல்வேலியில் அன்னி பெசன்ட் அம்மையார் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவர் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒரு மைல் தூரத்தில் கூட்டம் நடைபெறும் இடம் இருந்தது. நடந்து போனால் 25 நிமிடமாகும். மோட்டார் வண்டியில் போனால் 7 நிமிடமாகும். 8 மணிக்குக் கூட்டம் ஆரம்பம்.

7.35 மணி வரை அவரை அழைத்துச் செல்ல மோட்டார் வண்டி வரவில்லை. உடனே அன்னி பெசன்ட் அம்மையார் கூட்டம் நடக்க இருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்.

“”அம்மையீர்! தாங்கள் நடக்கின்றீர்களே… சற்று காத்திருந்து பார்க்கலாமே!” என்றார் ஒரு தொண்டர்.

“”வண்டியை எதிர்பார்த்தால் காலதாமதம் ஏற்பட்டு விடும். கூட்டத்திற்கு நான் தாமதமாகப் போவது மன்னிக்க முடியாத குற்றம். மற்றவர்களின் நேரத்தை வீணாக்க எனக்கு எவ்வித உரிமையுமில்லை!” என்று கூறிவிட்டு வேகவேகமாக நடக்கத் தொடங்கினார் அன்னி பெசன்ட் அம்மையார்.

காலத்திற்கு அவர் கொடுத்த மரியாதையை எண்ணி தொண்டர்கள் வியந்து போய் நின்று விட்டனர்.

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP