>

Archives

ஹாலிவுட்" எப்படி உருவானது தெரியுமா ???

>> Monday, September 7, 2009

ஹாலிவுட் - சினிமாவை நேசிப்பவர்களுக்கும், உருவாக்குபவர்களுக்குமான மெக்கா. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஒரு மாவட்டம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் நீட்சியாக தானாக உருவான கலைநகரம்.

அன்றைய ஹாலிவுட் (1885)

சினிமா உருவான காலம் அது. திரையில் நகரும் உருவங்களை கண்ட மக்கள் பீதி அடைந்தார்கள். அது ஏதோ பில்லி, சூனியத்தின் வேலை என்று மத அடிப்படை வாதிகள் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்தார்கள். சினிமா தொழில் சார்ந்தவர்களை பில்லி, சூனியம் வைப்பவர்கள் என்று கருதி பழமைவாதிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு துரத்தியடித்தார்கள்.

அப்படி துரத்தி அடிக்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்த பகுதி காடுகளும், மலைகளுமாக இருந்தது. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே வரலாறு படைத்த ஸ்டுடியோக்கள் அங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய அந்த பொட்டல் காடு தான் இன்றைய ஹாலிவுட்.

சினிமாத் தொழில் இப்போது வெஸ்ட்சைட், பர்பேங்க் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்தாலும் கூட தொழில்நுட்ப பணிகள் இன்னமும் ஹாலிவுட்டிலேயே நடந்து வருகிறது. வரலாற்று புகழ்பெற்ற ஹாலிவுட் தியேட்டர்களுக்கு வந்து செல்வதை லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெருமையாக கருதுகின்றனர். அகாடமிக் விருதுகள் வழங்கும் விழா ஹாலிவுட்டிலேயே தொடர்ந்து பாரம்பரியமாக நடந்து வருகிறது.

0 comments:

தரம்

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP