>

Archives

பசுமை மாறாத கல்லூரி நினைவுகள்..இறுதி.- ( 1 ) . !!!

>> Thursday, September 3, 2009“இப்போ நீங்க 10th Class வந்துட்டீங்க.. இது தான் முக்கியமான வருஷம். இதுவரைக்கும் ஆட்டம் போட்டதெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு பப்ளிக் எக்ஸாம்க்கு எய்ம் பண்ணி படிக்கணும்..”

“இப்போ நீங்க Higher Secndry வந்தாச்சு.. இன்னும் பத்தாவது வரைக்கும் இருந்த விளையாட்டு புத்தியோட இருக்கக்கூடாது.. லைஃபே இந்த ரெண்டு வருசம் தான் ரொம்ப முக்கியம்..”

“இப்ப நீங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. இன்னும் ஹையர் செகண்ட்ரி பசங்க மாதிரி விளையாட்டுத்தனமா இருக்ககூடாது.. இது தான் உங்க வாழ்க்கையையே தீர்மானிக்கப்போற 3 வருஷம்.. ஒழுங்கா படிங்க..”
இந்த வார்த்தைகள் அந்தந்த வகுப்புகளின் முதல் நாட்களில் முறையே மிஸ்,சார்,லெக்ட்சரர்களால் சொல்லப்பட்ட,பட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள்... என்றாலும் அந்த கல்லூரி நாட்கள் தான் முக்கிய கட்டமாகப் படுகிறது.

எல்லாமே தெரியும், எதுவுமே தெரியாது... இந்த இரண்டும் கலந்த பயணமே கல்லூரி நாட்கள்.

தயங்கித் தயங்கி கல்லூரியில் அடி எடுத்து வைத்த முதல் நாளில் வகுப்பு கண்டுபிடித்து நுழையும் பொழுது முதல் இரண்டு காலி பெஞ்சில் ஓரமாக உட்கார்ந்து, பக்கத்தில் அமர்ந்து இருக்கும் அரைமணிநேர சீனியரிடம் உதடு பிரிக்காமல் ஒரு புன்னகையை விட்டுப்பார்த்து, ரியாக்‌ஷன் ஓக்கே என்றால்.. எந்த ஸ்கூல்,எவ்வளவு மார்க்(முதல் சந்திப்பில் பொய்யான மார்க்தான் சொல்லப்படும்) போன்ற அடிப்படைகளை பரிமாறி, நமக்கான பசங்களைக் கொண்ட குழுவில் ஐக்கியமாக ஒரு மாதம் பிடிக்கும்.. பிறகுதான் கல்லூரி பிடிக்கும்..அதன்பிறகு எல்லாமே சிரிப்பாக வெடிக்கும்..

நட்பு என்ற ஒற்றை உறவில் மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா, பெரிசு என பல உறவுமுறைகள் சொல்லி அழைக்கப்படும்..

காலையில் வீட்டில் இருந்து தினமும் கிளம்பி விட்டாலும் வருட கடைசியில் அட்டண்டன்ஸ் லேக் ஆகி ஹால் டிக்கெட் வாங்க lakefee கட்ட வேண்டும். ஏனெனில், தினமும் கல்லூரிக்கு வந்தாலும் க்ளாஸுக்கு(ள்) போவதென்னமோ வெகு குறைவே..

கேண்ட்டீன்,பக்க்தத்து டீக் கடை(வடை ரொம்ப முக்கியம்),பக்கத்தில் இருக்கும் கார் அல்லது டூ வீலர் மெக்கானிக் ஷெட்.. இவைகள் தான் ஜமா கூடும் இடம்.

“மாப்ள இன்னிக்கு first hr HODடா..”

“ஆமடாப்பா.. அந்தாளு சொல்றெதெல்லாம் புரியுறமாதிரிதான்.. விடு மச்சான்.. முன்னாடி ஒக்காந்து உருட்டி உருட்டி எழுதி வப்பாய்ங்க இல்ல நோட்ஸ.. ஜெராக்ஸ் எடுத்துப்போம்..”

“டீ சொல்லு மாப்ள”

“டீ”

“ஷோக் அடிச்சுட்டாருப்பா, எல்லாரும் சிரிங்கடாப்பா.. கடைல சொல்றா டீ.. காசு இல்லனு உன்ன சொல்லச்சொன்னா..உங்கப்பன் சேர்க்குற பணத்த கொஞ்சம் செலவு பண்ணுடா..”

மீதி..அடுத்த பதிவில்..http://wwwrasigancom.blogspot.com/2009/09/blog-post_5392.html0 comments:

தரம்

பசுமை மாறாத கல்லூரி நினைவுகள்..இறுதி.- ( 1 ) . !!!“இப்போ நீங்க 10th Class வந்துட்டீங்க.. இது தான் முக்கியமான வருஷம். இதுவரைக்கும் ஆட்டம் போட்டதெல்லாம் மூட்ட கட்டி வச்சிட்டு பப்ளிக் எக்ஸாம்க்கு எய்ம் பண்ணி படிக்கணும்..”

“இப்போ நீங்க Higher Secndry வந்தாச்சு.. இன்னும் பத்தாவது வரைக்கும் இருந்த விளையாட்டு புத்தியோட இருக்கக்கூடாது.. லைஃபே இந்த ரெண்டு வருசம் தான் ரொம்ப முக்கியம்..”

“இப்ப நீங்க காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்.. இன்னும் ஹையர் செகண்ட்ரி பசங்க மாதிரி விளையாட்டுத்தனமா இருக்ககூடாது.. இது தான் உங்க வாழ்க்கையையே தீர்மானிக்கப்போற 3 வருஷம்.. ஒழுங்கா படிங்க..”
இந்த வார்த்தைகள் அந்தந்த வகுப்புகளின் முதல் நாட்களில் முறையே மிஸ்,சார்,லெக்ட்சரர்களால் சொல்லப்பட்ட,பட்டுக்கொண்டிருக்கும் வார்த்தைகள்... என்றாலும் அந்த கல்லூரி நாட்கள் தான் முக்கிய கட்டமாகப் படுகிறது.

எல்லாமே தெரியும், எதுவுமே தெரியாது... இந்த இரண்டும் கலந்த பயணமே கல்லூரி நாட்கள்.

தயங்கித் தயங்கி கல்லூரியில் அடி எடுத்து வைத்த முதல் நாளில் வகுப்பு கண்டுபிடித்து நுழையும் பொழுது முதல் இரண்டு காலி பெஞ்சில் ஓரமாக உட்கார்ந்து, பக்கத்தில் அமர்ந்து இருக்கும் அரைமணிநேர சீனியரிடம் உதடு பிரிக்காமல் ஒரு புன்னகையை விட்டுப்பார்த்து, ரியாக்‌ஷன் ஓக்கே என்றால்.. எந்த ஸ்கூல்,எவ்வளவு மார்க்(முதல் சந்திப்பில் பொய்யான மார்க்தான் சொல்லப்படும்) போன்ற அடிப்படைகளை பரிமாறி, நமக்கான பசங்களைக் கொண்ட குழுவில் ஐக்கியமாக ஒரு மாதம் பிடிக்கும்.. பிறகுதான் கல்லூரி பிடிக்கும்..அதன்பிறகு எல்லாமே சிரிப்பாக வெடிக்கும்..

நட்பு என்ற ஒற்றை உறவில் மாப்பிள்ளை, மச்சான், சித்தப்பா, பெரிசு என பல உறவுமுறைகள் சொல்லி அழைக்கப்படும்..

காலையில் வீட்டில் இருந்து தினமும் கிளம்பி விட்டாலும் வருட கடைசியில் அட்டண்டன்ஸ் லேக் ஆகி ஹால் டிக்கெட் வாங்க lakefee கட்ட வேண்டும். ஏனெனில், தினமும் கல்லூரிக்கு வந்தாலும் க்ளாஸுக்கு(ள்) போவதென்னமோ வெகு குறைவே..

கேண்ட்டீன்,பக்க்தத்து டீக் கடை(வடை ரொம்ப முக்கியம்),பக்கத்தில் இருக்கும் கார் அல்லது டூ வீலர் மெக்கானிக் ஷெட்.. இவைகள் தான் ஜமா கூடும் இடம்.

“மாப்ள இன்னிக்கு first hr HODடா..”

“ஆமடாப்பா.. அந்தாளு சொல்றெதெல்லாம் புரியுறமாதிரிதான்.. விடு மச்சான்.. முன்னாடி ஒக்காந்து உருட்டி உருட்டி எழுதி வப்பாய்ங்க இல்ல நோட்ஸ.. ஜெராக்ஸ் எடுத்துப்போம்..”

“டீ சொல்லு மாப்ள”

“டீ”

“ஷோக் அடிச்சுட்டாருப்பா, எல்லாரும் சிரிங்கடாப்பா.. கடைல சொல்றா டீ.. காசு இல்லனு உன்ன சொல்லச்சொன்னா..உங்கப்பன் சேர்க்குற பணத்த கொஞ்சம் செலவு பண்ணுடா..”

மீதி..அடுத்த பதிவில்..http://wwwrasigancom.blogspot.com/2009/09/blog-post_5392.html

0 comments:

Post a Comment

*** சங்கரின் பனித்துளி நினைவுகள் **** Headline Animator

கரை தொடாத கனவுகள் !!!

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP